2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?

புது வருட ராசி பலன்கள் 2025
 தமிழ் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கலைக்கும் 2025


2025 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக நவகிரகங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரக நிலைகளிலும், பெயர்ச்சி சந்திக்க கூடிய ஒரு ஆண்டாக உள்ளது.

ஒன்பது கிரகங்களிலும், ஏற்படும் ஒவ்வொரு பெயர்ச்சியையும் பார்க்கலாம். நவகிரகங்களிலே முதன்மை கிரகம் முழு சுப கிரகம் என்று சொல்லக்கூடிய குரு மிக வலுவாக சுக்ரனின் ஆட்சி வீடான ரிஷப ராசியில் இருந்து புதனின் ஆட்சி வீடான மிதுன ராசிக்கு செல்கிறார். இரு கிரக நிலைகளுமே குருவின் பார்வையில் பகைக்கிரகங்களாக உள்ளன. ஆனால் அதே வேலையில் புதன் மற்றும் சுக்கிரனின் பார்வையில் குரு சமகிரகமாக இருக்கிறார்.

எனவே, தான் இந்த வேலையில் புதனின் பார்வையில் சமகிரகமாக உள்ள குரு மிதுன ராசிக்குள் நுழைவதால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அடுத்ததாக நீதி தவறாத நடுநிலை தவறாத நியாயஸ்தராக செயல்படக்கூடிய சனி பகவான் ஆட்சி பலத்தை இழக்கிறார். கும்ப ராசியில் இருப்பதை விட மீன ராசிக்கு செல்வது சற்று சில எதிர்பாராத மாற்றங்களை அதீதமாக ஏற்படுத்தும். மூன்றாவதாக, நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு மற்றும் கேதுவும் பெயர்ச்சி அடைகின்றன ராகு அவரது நட்பு கிரகமான சனியின் ஆட்சி வீட்டில் நுழைவதால் ராகுவால் நல்ல மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும்.

ஆனால், கேது அவரது பார்வையில் பகை கிரகமாக இருக்கக்கூடிய சூரியனின் ஆட்சி வீட்டில் அமர்வதால் நிச்சயம் சாதகமாக பல நிகழ்வுகள் நடைபெறும். எதையோ, ஒன்றா சிந்திச்சுகிட்டு எதையோ, ஒன்றா செயல்படுத்துவதற்கான சூழலும் உருவாகலாம் கேதுவின் அமைப்பால்.

செவ்வாய், கடகம், சிம்மம், கன்னி, துலாம் விருச்சிகம், தனுசு மகரம் கும்பம் மேஷம் ஆகிய இடங்களில் சஞ்சரிக்கப் போகிறார். வீரத்தை விளைநிலமாகக் கொண்ட செவ்வாயின் அமைப்பு பல மாறுதல்களை உடனடியாக செயல்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.

மற்ற கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன் என இந்த நான்கு கிரக நிலைகளுமே 12 இடத்திலும் மாறி மாறி சஞ்சரிக்க போகின்றன. எனவே, நன்மை தீமை கலந்த ஒரு அமைப்பு கிடைப்பதற்கான சூழல் உண்டு. இதனால்தான், வருடம் முழுவதும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைப்பதில்லை. சில நேரத்துல மகிழ்ச்சி அதிகம் ஆகும். சில நேரத்தில் இடர்பாடுகளும் ஏமாற்றமும் சந்திப்பதற்கான சூழல் உருவாகிறது.

இந்த 2025 ஆம் ஆண்டில் அமோகமான யோகங்கள பெறக்கூடிய ராசிகளாக எவையெல்லாம் உள்ளன என்று பார்க்கும்போது முதன்மையான யோக பலன்களை பெரும் ராசியாக துலாம் ராசி உள்ளது. ஏனென்றால், துலாம் ராசியை பொறுத்தவரை மிக வலுவாக ஒன்பதில் குரு குருவின் சுப பார்வையும் ஜென்ம ராசியில் எனவே அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டு.

அதிக நன்மையை பெறும் ராசிகள்:


அது மட்டுமல்லாது சனி ராசிகள் உச்ச அதிபதியான சனி 6 ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஆறில் யோக பலன்களை கொடுக்க கூடிய அமைப்பில் வருகிறார். லாபத்தில் கேது பஞ்சமத்தில் ராகு என பல அதிரடியான யோகம் நிறைந்த வாய்ப்புகளை இந்த 2025 துலாம் ராசிக்காரர்களுக்கு அமோகமாக அள்ளிக் கொடுக்கிறது. எனவே, துலாம் ராசிக்கு அதிக யோகம் நிறைந்த ஒரு ஆண்டாக அமைகிறது.

அதிக சிரமத்தை சந்திக்கும் ராசிகள்:

அதிகபடியான சிரமங்களையும் விடலையும் சந்திக்க கூடிய ராசியாக ஜென்மத்தில் சனி வருவதால் அதீதமான தொல்லைகள் அதிகரிக்கலாம், உருவாகலாம். கவனம் தேவை. குரு நான்கிற்கு வருவதும் கேது ஆறில் இருப்பதும் நன்மைகளை சில நேரங்களில் நிச்சயம் உருவாக்கி கொடுக்கும். ஆனால், விரய எதிர்பாராத அதிக செலவுகளை சந்திப்பதற்கான சூழல் உண்டு.


இதற்கு அடுத்தபடியாக, சிரமங்களை சந்திக்க கூடிய ராசியாக சிம்ம ராசி உள்ளது. ஏனென்றால், சிம்ம ராசிக்கு அஷ்டம சனி அது மட்டுமல்லாது ஜென்மக்கேது சப்தம ராகு. எனவே, கவனம் தேவை ஆனால் நற்பலன்கள் கிடைப்பதற்கு குரு லாபத்தில் அமர்வதால் நிச்சயம் உண்டு.


கன்னி ராசியும் சில சிரமங்களை அதிகம் சந்திக்கலாம் ஏனென்றால் பத்தில் குரு கண்டச்சனி மற்றும் விரய கேது யோகம் கொடுக்கக்கூடிய ஆறில் ராகு இருப்பதால் எதிர்பாராத நன்மைகளும் கிடைக்கும் கன்னி ராசிக்கு.

அதிக நன்மையை பெறும் ராசிகள்:


அதிக நன்மைகளையும் அதிர்ஷ்டங்களையும் அள்ளக்கூடிய இரண்டாவது ராசியாக சுக்கிரனின் ஆட்சி வீடாக இருக்கக்கூடிய ரிஷப ராசிக்கு உண்டு. இந்த வருடம் சுக்கிரனின் யோகம் நிறைந்த வருடமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம் முதன்மையான யோகத்தையும் அதைத் தொடர்ந்து. இரண்டாம் இடத்தை ரிஷபமும் பெறுகிறது. ரிஷப ராசிக்கு தனத்தில் குரு லாபத்தில் சனி கர்மத்தில் ராகு சுகத்தில் கேது என கிரக நிலைகளின் அமைப்பு நல்ல மாற்றங்களை வலுவாக கொடுக்கிறது.


அதிக அதிர்ஷ்டத்தையும் நன்மைகளையும் பெறக்கூடிய மூன்றாவது ராசியாக குருவின் ஆட்சி வீடாக இருக்கக்கூடிய தனுசு ராசி பெருகிறது. தனுசு ராசியை பொறுத்த வரைக்கும் சனி ஒருவர் மட்டும் சாதகமற்ற அமைப்பில் நான்காம் இடத்தில் அமருகிறார். ஆனால், ராசி அதிபதி ஆன குரு ஏளிலும் நிழல் கிரகமாக உள்ள ராகு மூன்றிலும் கேது ஒன்பதிலும் அமர்வதால் அதிர்ஷ்ட யோகம் நிறைந்த ஆண்டாக தனுசு ராசிக்கு அமையும்.

நடுநிலையான பலனை பெறப்போகும் ராசிகள்:

அதிக நன்மைகளை பெறக்கூடிய ராசியில் நான்காம் இடத்தை ஏழரை சனியாக இருந்தாலும், கும்ப ராசி பெறுகிறது. ஏனென்றால், கும்பராசிக்கு பாதசனையாக சனி அமர்கிறார் ஐந்தில் அதிக யோகங்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார். குரு பகவான் ஜென்மத்தில் ராகு, சப்தமத்தில் கேதுவம் இருந்தாலும் பெரிய அளவில் சிரமங்கள் இல்லை.

நடுநிலையான பலன்களை பெறக்கூடிய ராசியாக ஏழரை சனியின் ஆரம்ப காலகட்டத்தில் உள்ள மேஷம், மிதுன ராசி ஜென்ம குருவாக இருந்தாலும் நடுநிலையான பலன்கள் உண்டு கடக ராசிக்கு அஷ்டம சனி விலகுவதால் நன்மை உண்டு. ஆனால், அஷ்டம ராகு சில சிக்கலை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

விருச்சக ராசிக்காரர்களுக்கு பஞ்சமத்தில் குரு சுகத்தில் ராகு தொழிலில் கேது அஷ்டமத்தில் குரு எனவே சற்று நடுநிலையான பலன் உண்டு. ஏழரை சனி முடியக்கூடிய மகர ராசிக்கும் இந்த வருடத்தில் நடுநிலையான பலன் தான் உண்டு. ஏனென்றால், ஆறிற்கு குரு செல்கிறார் அஷ்டமத்தில் கேது அமருகிறார் தனத்தில் ராகு அமருகிறார். எனவே, ஒரு நடுநிலையான பலனை மட்டும்தான் எதிர்பார்க்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?