உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

 சுக்கிரன் உச்ச பெயர்ச்சி பலன் அதிர்ஷ்டத்தை அல்ல போகும் ராசிகள் எவை சுக்கிர பெயர்ச்சி பலன்



இயற்கை சுப கிரகம் என்று சொல்லக்கூடிய சுக்கிரன் பொதுவாக மனித வாழ்வில், மிகப் பெரிய அளவில் செல்வ செழிப்பை, வசதி வாய்ப்பை, ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய அற்புதமான கிரகமாகவும், மனித வாழ்வை தலைகீழாக புரட்டிப் போடக்கூடிய, ஆற்றல் பெற்றவராகவும் இருக்கிறார்.

அப்படிப்பட்ட சுக்கிரன் தற்போது அதீத பலத்துடன் தனது உச்ச ராசியான மீன ராசியில் உச்சம் பெற்று சுமார் 4 மாதம் வளம் வரப்போகிறார்.


எனவே இந்த நான்கு மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன, என்று பார்க்கும் போது, பொதுவாக இயற்கை சுப கிரகமாக இருக்கக்கூடிய சுக்கிரன் ஆபாச பலன்களை பாவ கிரக சேர்க்கையால் கொடுத்தாலும் தற்போது, தனது உச்ச ராசியில் ராகுவுடன் இணைந்து உச்சம் பெறுகிறார்.

எனவே இந்த வேளையில் சுக்கிரன் 2 4 5 7 9 மற்றும் 11 ஆகிய இடங்களில் இருக்கக்கூடிய ராசிக்காரர்களுக்கு அமோகமான அதிர்ஷ்ட யோகத்தை அள்ளிக் கொடுக்கிறார்.


அந்த வகையில் கும்ப ராசி, தனுசு ராசி விருச்சிகம் ராசி கன்னி ராசி கடக ராசி ரிஷப ராசி ஆகிய ராசிகள் அமோகமான அதிர்ஷ்டத்தை அல்லும் ராசிகளாக பார்க்கப்படுகின்றன.

சுக்கிரனின் உச்சத்தால் பொதுவாக ஒரு கிரகம் உச்சம் பெறும்போது சாதகமற்ற சூழல் என்றாலும் கூட விதிவிலக்காக சில நன்மைகளை பெற முடியும்.


அந்த வகையில் அதிக சிரமங்களை ஏற்படுத்தக்கூடிய ஜென்மம் அஷ்டமம் விரையம் போன்ற இடங்களில் இருக்கக்கூடிய ராசிகளும் நல்ல பலன்களை பெற முடியும் மீனம் சிம்மம் மற்றும் மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கும் தடைகள் குறைந்து நல்ல மாற்றம் சுக்கிரனின் உச்சத்தால் உண்டு.

மற்ற ராசிக்காரர்கள் நடுநிலையான பலனை பெறுவதற்கான யோகம் இந்த வேலையில் உண்டு.


பொதுவாக இந்த வேலையில் தனஸ்தானத்தை கும்ப ராசிக்காரர்களுக்கு வலுப்பெடுத்துவதால் குடும்பத்தில் பல சுப நிகழ்வுகள் கும்ப ராசிக்காரர்களுக்கு கைகூடும்.

ஜென்மத்தில் உச்சம் பெறுவதால் மீன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வெற்றி உண்டு.

சுகஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு சுப நிகழ்வுகள் தடையில்லாமல் கை கூடும்.


பூர்வ புண்ணிய ஸ்தானத்தை விருச்சிக ராசிக்காரர்களுக்கு வலு சேர்க்கிறார், எனவே புதிய அசையும் அசையா சொத்து வாங்கும் முதன்மையான யோகம் உண்டு.

கன்னி ராசிக்காரர்களுக்கு சப்தமத்தை வலு சேர்க்கிறார் களஸ்திர ஸ்தானம் வலுவாகிறது எனவே திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் தடையில்லாமல் கைகூடும். 

பாக்ய ஸ்தானத்தை கடக ராசிக்காரர்களுக்கு வலு சேர்ப்பதால் அனைத்து வகையிலும் எதிர்பாராத நன்மை தடையில்லாமல் வந்து சேரும்.

லாப ஸ்தானத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு வலு சேர்ப்பதால் தொழில் உத்தியோகம் கலைத்துறை அரசியல் துறை என அனைத்திலும் லாபம் நிறைவாக உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?