மஹாளய அமாவாசை இன்று பித்ரு காலை வழிபட்டால் என்ன கிடைக்கும்? பித்ரு தோஷம் விலக நாம் என்ன செய்ய வேண்டும்?
மஹாளய அமாவாசை இன்று பித்ரு காலை வழிபட்டால் என்ன கிடைக்கும்? மஹாளய பட்சம் அல்லது மஹாளய அமாவாசை என்பது, ஆவணி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையில் துவங்கி புரட்டாசி மாதம் அமாவாசை நாளன்று முடியக்கூடிய இந்த 15 நாட்கள் மஹாளய பட்சம் எனப்படும். மஹாளயம் என்பது கூட்டமாக கூடுவது என்றும் பச்சம் என்பது 15 நாட்கள் என்று பொருள்படும். அதாவது மறைந்த நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து புறப்பட்டு நம்மோடு தங்கும் இந்த 15 நாட்கள் மஹாளய பச்சம் என கூறப்படுகிறது.இந்தப் 15 நாட்கள் முடிய கூடிய நாள் மஹாளய அமாவாசை. ஒரு ஆண்டில் 12 முதல் 13 அமாவாசைகள் உள்ளன. இந்த 13 அமாவாசைகளில் மிக முக்கியமானது மூன்று அமாவாசை. அவை ஆடி அமாவாசை,மஹாளய அமாவாசை, தை அமாவாசை. ஆடி அமாவாசை அன்று பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நம் முன்னோர்கள் ஆவணி பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் பூலோகம் வந்தடைகிறார்கள்.அன்று முதல் 15 நாட்கள் அதாவது மஹாலயவற்றம் எனப்படும் 15 நாட்கள் நம்மோடு தங்கி நாம் கொடுக்கும் எள்ளும்...