மகாளய அமாவாசை விரத வழிபாடு எப்படி? மகாளய அமாவாசை விரத வழிபாடு எப்படி மேற்கொள்வது?

மகாளய அமாவாசை வழிபாட்டை முறையாக செய்வது எப்படி? 


மகாளய அமாவாசை அன்று காக்கைக்கு இதை நிச்சயம் செய்யுங்கள்

அனைத்து ராசிக்காரர்களும் அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்? 

மகாளய அமாவாசையின் சிறப்பு முக்கியத்துவம் என்ன? 

      ஒரு வருடத்திற்கு 12 அல்லது 13 அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. இப்படி பன்னிரண்டு அல்லது 13 அமாவாசைகள் வந்தாலும், அதில் மிக முக்கியமான அமாவாசையாக புரட்டாசி அமாவாசை, மகாளய அமாவாசை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரியுமா என்றால்?


    அதற்கு மிக முக்கிய காரணம் இந்த மகாளய பட்சத்தின் போது முன்னோர்கள் நம்முடன் இருந்து நாம் படைக்கும் தண்ணீர், உணவு ஆகிய அனைத்தையும், முழுமையாகவும், திருப்தியாகவும் ஏற்றுக் கொள்கின்றனர். 

   இந்த 15 நாட்களில் இறுதியில் வர கூடியதுதான் புரட்டாசி அமாவாசை. அதாவது, மகாளய அமாவாசை இந்த தினத்தில் முன்னோர்கள் பூமியிலிருந்து புறப்பட்டு பித்ருலோகம் செல்கின்றனர். இதற்கு முன்னதாக வந்த ஆடி அமாவாசையின் போது பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு முன்னோர்கள் வருகின்றனர். 

   சரியாக ஆவணி பௌர்ணமி தினத்தன்று பூமிக்கு வரக்கூடிய முன்னோர்கள் மகாளய பட்ச வழிபாட்டை பூர்த்தி செய்ததற்கு பிறகு, மீண்டும் பித்ருலோகம் புறப்படுகின்றனர். தை அமாவாசை அன்று அங்கு சென்று அடைவார்கள்.

  எனவேதான், வருடத்தில் எத்தனையோ அமாவாசைகள் வந்தாலும் இந்த மகாளய அமாவாசையில் நிச்சயம், தவறாது திதி கொடுப்பது, முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாது, அதற்கு முன் இருக்கக்கூடிய மகாளய பச்சம் என்று சொல்லக்கூடிய 15 நாட்களும் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வது மகத்தான புண்ணியங்களை தங்களுடைய வாழ்வில் சேர்க்கும். 

     இதனால், பித்ரு கர்ம தோஷமானது நீங்கும் பல்வேறு வகையான தோஷங்கள் நீங்கி வீட்டில் செல்வ வளமும், முன்னேற்றமும், நிறைவதற்கான யோகம் கிடைக்கும்.

யார் மகாலய அமாவாசை வழிபாட்டை கடைபிடிக்க வேண்டும்?
 

     தாய், தந்தை இல்லாதவர் இந்த வழிபாட்டை கடைபிடிக்கலாம். அவரவர் குடும்ப வழக்கத்தின்படி, இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. அருகாமையில் உள்ள நீர் நிலைக்கு சென்று திதி கொடுப்பது. மேலும், நல்ல பலனை கொடுக்கும். அருகாமையில் நீர் நிலை இல்லை என்றால் வீட்டிலேயே கொடுக்கலாம். 

   தாய் தந்தையர்கள் உள்ளவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள கூடாது. அவர் என் தந்தை வழிபாட்டை மேற்கொள்ளும் போது, அவருடன் இருக்கலாம்.
 


   இந்த வழிபாடு நிறைவடைந்ததற்குப் பிறகு முன்னோர்கள் என பார்க்கக்கூடிய காகைக்கு நிச்சயம் அன்னம் படைக்க வேண்டும். பிறகு, உணவு உட்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது அன்றைய தினத்தில் இயன்றவரை அன்னதானம் செய்வது மகத்தான புண்ணியங்களை உங்களுக்கு அள்ளிக் கொடுக்கும்.
  
மகாளய அமாவாசை தர்ப்பணம்

    அது மட்டுமல்லாது எந்த வருடத்திற்கும் இல்லாத சிறப்பாக இந்த வருட அது மட்டுமல்லாது எந்த வருடத்திற்கும் இல்லாத சிறப்பாக இந்த வருட மகாளய அமாவாசை என்பது நான்கு கிரக நிலைகள் ஒரே ராசியில் சஞ்சரைக்க போகின்றன. 

   கன்னி ராசியில் சூரியன், சந்திரன், மோட்ச கரகரான கேது மற்றும் கன்னி ராசியின் உச்ச அதிபதியான புதன் உச்சம் பெற்ற சஞ்சரிப்பது அமோகமான நல்ல வாய்ப்பை அனைவருடைய வாழ்விலும் பெற்று தரும்.

அமாவாசை அன்று செய்ய கூடாதவை 




      இந்த பித்ரு கர்மாவை செய்யாமல் இருப்பது மகா பாவமாக பார்க்கப்படுகிறது. எனவே, தவறாமல் இந்த மகளையே அமாவாசை வழிபாட்டை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை செய்யாமல் விடுவது மகா பாவமாக அமையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?