அக்டோபர் மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? அக்டோபர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்?
அக்டோபர் மாத ராசி பலன்கள் அக்டோபர் மாதம் எப்படி அமைகிறது, என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது, நவகிரகங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரக நிலைகளில் ஆறு கிரக நிலைகளில் மாற்றத்தை சந்திக்கக்கூடிய ஒரு மாதமாக அக்டோபர் மாதம் அமைகிறது. இந்த மாதத்தில், ஏற்படக்கூடிய முக்கிய கிரக பெயர்ச்சிகளாக எவையெல்லாம் அமைகின்றன, என்று பார்க்கும்போது குரு வக்ர பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, சூரிய பெயர்ச்சி மற்றும் சந்திர பெயர்ச்சி என ஆறு கிரக நிலைகளில் அதிரடியான மாற்றங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் அமையப்போகிறது. அது மட்டுமல்லாது, இந்த அக்டோபர் மாதத்தில் நவராத்திரி வழிபாடானது மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை நவராத்திரி வழிபாடு கொண்டாடப்படுகிறது. அதற்குப் பிறகு சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை என பூஜை வழிபாடுகளும் நிறைந்த ஒரு மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகையும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த அக்டோபர் இரண்டாம் தேதி இரவு 9 மணி மு...