குரு வக்ர பெயர்ச்சி 2024 எப்போது
குரு வக்ர பெயர்ச்சி 2024 எப்போது குரு வக்ர பெயர்ச்சி யாருக்கு யோகம்
முழு சுப கிரகமான குரு மே 1, 2024 முதல் தனது பகை கிரகமான சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷபத்தில் சஞ்சரிக்கிறார். தற்போது அக்டோபர் 15ஆம் தேதி முதல் வக்ரம் பெற்று வலம் வரப்போகிறார்.
இதனால் மிகுந்த அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரர்களுக்கு உண்டு என்று பார்க்கும் போது 3,5,6,8,10 மற்றும் 12 ஆகிய இடங்களில் உள்ள ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான யோக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார் அதிலும் குறிப்பாக தைரிய ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால் மீன ராசிக்காரர்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டு.
ஏழரை சனியின் இறுதி காலகட்டத்தில் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்திலும் வக்ரம் பெற கூடிய குரு வெற்றி வாய்ப்பை மற்றும் சுப நிகழ்வு மிக சிறப்பாக பெற்று தருகிறார்.
தனுசு ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத் தொல்லை கடன் சார்ந்த தொல்லைகள் விலகும் துலாம் ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்கள் சிறப்பாக கைக்கூடும், சிம்ம ராசிக்கு தொழில் வளர்ச்சியும் மிதுன ராசிக்கு லாபம் உயரக்கூடிய யோகமும் உண்டு.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you