குரு பெயர்ச்சி விருச்சக ராசி பலன் என்ன? விருச்சிக ராசி 2024 எப்படி இருக்கும்?
குரு பெயர்ச்சி விருச்சக ராசி பலன் என்ன? விருச்சிக ராசி 2024 எப்படி இருக்கும்?
விருச்சிக ராசி உலகமே உங்களை வியந்து பார்க்கும் குரு பெயர்ச்சி 2024 காத்திருக்கும் மகிழ்ச்சி
விருச்சக ராசிக்காரர்களுக்கு, முழு சுப கிரகமான குரு, மே ஒன்றாம் தேதி முதல் மிக வலுவாக சப்தமஸ்தானம் ஆகிய களஸ்திரமாகிய ஏழில் மிகவும் வலுவாக, சஞ்சரிக்க போகிறார், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக கூடிய ஒரு குரு பெயர்ச்சியாக அமைவதற்கான யோகம் நிறைந்துள்ளது.
எனவே, சப்தவகுருவின் காரணமாக எதிர்பார்ப்புகள், அனைத்தும் பூர்த்தியாகும். அவதோடு, உலகமே உங்களை வியந்து பார்க்கக் கூடிய வகையில் காத்திருக்கும் மகிழ்ச்சியாக, பல தருணங்கள் அமைவதற்கான யோகம், சப்தம்குருவால் நிச்சயமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு உண்டு.
பொதுவாக குரு 2, 4, 5, 7, 9, மற்றும் 11 ஆகிய இடங்களில் அபரிவிதமான வளர்ச்சியை அள்ளிக் கொடுப்பார். அதில், ஒரு இடமான ஏழாம் இடத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் வலுவாக அமர்ந்த சஞ்சரைப்பதால் நிச்சயமாக குடும்பம், உத்தியோகம், தொழில் என அனைத்திலும் சிறப்பான முன்னேற்றம். நிறைந்த கிடைப்பதற்கான யோகம் உருவாகிறது. அதோடு, மட்டுமல்லாது அர்த்தாஷ்டக சனியால் ஏற்பட்ட சிரமங்களும் முடிவுக்கு வரக்கூடிய இனிமையான தருணமாக மாறி உள்ளது. என்பதை குரு தெளிவாக உறுதிப்படுத்தகிறார். ராசியின் அதிபதியான செவ்வாய்க்கு நட்பு கிரகம். எனவே, இந்த தருணத்தில் திட்டமிட்டபடி நல்ல வளர்ச்சியும் முன்னேற்றத்தையும், நிறைந்து கொடுக்கக்கூடிய யோகத்தை உருவாக்கிக் கொடுக்கிறார், விருச்சக ராசிக்காரர்களுக்கு சப்தம குரு.
விருச்சிக ராசிக்கு குடும்பம்;
விருச்சக ராசிக்காரர்களுக்கு முழு சுப கிரகமான குரு சப்தமஸ்தானம் ஆகிய எழில் அமர்வதால் களஸ்திர ஸ்தானம் பல பெறுகிறது. எனவே, காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட நல்ல வரன் கிடைத்து, திருமண பாக்கியம் கிடைப்பதற்கான யோகம் உண்டு. புத்திரகாரர்களின் அருளால் புத்திர பாக்கியமும் இந்த தருணத்தில் விருச்சக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக கிடைக்கும்.
மனதில் ஏற்படக்கூடிய நினைவுகள் அனைத்தும் இனிமையாக அமைவதற்கான யோகம் உண்டு. இந்த தருணத்தில் நீங்கள் எதை செய்தாலும் அவை சிறப்பாக அமையும் எதிர்பாராத குடும்ப பிரச்சனைகளையும் தவிர்த்து குடும்பத்தில் ஒற்றுமையும், இனிமையும் பெறுவதற்கான நல்ல பல அதிர்ஷ்ட யோகம் நிச்சயமாக உண்டு விருச்சக ராசிக்காரர்களுக்கு.
சப்தமகுருவால் உத்தியோகம்;
குரு ஏழாம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் செய்யக்கூடிய சிறு முயற்சியிலே புதிய வேலை வாய்ப்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு என உத்தியோக ரீதியாக பல நன்மைகள் நிறைந்து கிடைக்கும். நீண்ட காலமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு மறுக்கப்பட்ட நியாயமான பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் என்ற தருணத்தில் நிச்சயமாக கிடைக்கிறது.
அர்த்தாஷ்டக சனியால் விருப்பத்திற்கு மாறான இடம் மாறுதல் என்றாலும், கூட சப்தம குருவால் நன்மை நிறைந்து, கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. எனவே, நடக்கக்கூடிய நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
சப்தம குரு தொழில்துறை வியாபாரம்;
குரு ஏழாம் இடத்தில் அமர்ந்திருப்பதால், குரு பெயர்ச்சி துவங்கியதில் இருந்தே நல்ல முன்னேற்றம் காணப்படும், லாபம் பல மடங்கு உயரம் புதிய முதலீடுகளை ஈடுபடலாம், நிதி நிறுவனங்களின் ஆதரவு மிக வலுவாக இந்த தருணத்தில் சிறப்பாக கிடைக்கும்.
புதிய ஆர்டர்கள் அடுக்கடுக்காக வரும் வெளிநாட்டு ஆர்டர்கள் உட்பட பலவை உங்களை திக்கு முக்காட கூடிய மகிழ்ச்சியில் ஏற்படுத்துவதற்கான சூழல் உண்டு. நிதிநிலை சார்ந்த பணிகள் இந்த குரு பெயர்ச்சி காலகட்டம் முழுவதும் சீராகுவதோடு மட்டுமல்லாது நல்ல முன்னேற்றத்தையும், புதிய முதலீடுகளையும் அதிகரிக்க கூடிய வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது. தொழில் துறையில் சப்தம குருவால் அசுர வளர்ச்சி அடைவதற்கான யோகம் நிச்சயமாக உண்டு.
சப்தம குரு அரசியல் துறையினர்;
குரு எழில் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால் இந்த தருணத்தில் எதிர்பார்த்தபடி மக்கள் மத்தியில் செல்வாக்கு. உயரம் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல சிரமங்கள் உங்களை விட்டு விலகும் குரு மிக வலுவாக அமர்ந்திருப்பதால் தேர்தல் வெற்றிகள் உட்பட பல வகையில நன்மை, இந்த தருணத்தில் மிகவும் அபரிவிதமாக கிடைக்கப் போகிறது.
உங்களுடைய திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு வலுவாக உயரக்கூடிய தருணமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த தருணத்தில் உங்களுக்கு கட்சியில் மட்டுமல்ல அரசியல் சார்ந்த பணிகளிலும் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு அதிகரிக்க போகிறது.
ஏழில் குரு மாணவ மாணவியருக்கு;
குரு ஏழாம் இடம் ஆகிய சப்தமஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. உயர்கல்விகள் அதிக ஆர்வமும் விரும்பிய பாடப் பிரிவினை தேர்வு செய்து படிப்பதற்கான யோகமும் மிகவும் சிறப்பாக இந்த தருணத்தில் உண்டு
ஞாபக சக்தி கிரகிக்கும் தன்மை அதிகரிக்க கூடிய ஒரு தருணமாக பார்க்கப்படுகிறது. தசா புத்திகள் வலுவாக இருப்பின் கல்வி சூழ்நிலை மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவுல முன்னேற்றத்தை பெற்று தருகிறது.
விவசாயத் துறையினருக்கு சப்தம குரு;
குரு பார்க்கின் கோடி நன்மை என்று சொல்லக்கூடிய வகையில் குருவின் சுப பார்வை ஜென்ம ராசி, மூன்று மற்றும் 11ஆம் இடத்தில் பதிவதால் உழைப்பிற்கு ஏற்ற நல்ல விளைச்சல் நிறைந்து கிடைக்கும்.
ஜென்ம ராசிக்கும் லாப ஸ்தானத்திற்கும் அதீதமாக குருவின் சுப பார்வை கிடைப்பதால், புதிதாக வீடு, வீட்டுமனை வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கை மங்களகரமான பல சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்கான யோகமும் உண்டு. விவசாயிகளுக்கு நவீன உயர்தர இயந்திரங்கள் வாங்குவதற்கான யோகமும் உண்டு. சங்கிலி தொடர்பான நீண்ட கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு உண்டு.
களத்திர ஸ்தான குருவின் பெண்மணிகளுக்கு;
சப்தம ஸ்தானத்தை குரு வலுப்படுத்தக் கூடிய வேளையில், சுக்கிரனும் பெரும்பாலும் சாதகமாக மலம் வருகிறார். எனவே, பெண்மணிகள் எதிர்பார்க்கக் கூடிய திருமணம், புத்திர பாக்கியம், வளைகாப்பு உள்ளிட்ட பல சுப நிகழ்வுகள் இனிமையாக கைகூடும்.
கல்வியிலும், குடும்பத்திலும் தொழில், உத்தியோகம் என அனைத்திலும் பெண்மணிகளுக்கு சிறப்பான முன்னேற்றம் சப்தம குருவால் கிடைக்கிறது. பெண்மணிகளுக்கு அனுகூலமற்ற நிலையில் சஞ்சரித்த பல கிரக நிலைகள் குரு உட்பட சாதகமாக மாறி இருப்பதால் பெண்மணிகள் உடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிறு முயற்சி மிகப்பெரிய அளவிலான முன்னேற்றம் பெண்மணிகளின் பொருளாதார ரீதியான தேவைகளை பூர்த்தி செய்யும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பரிகாரம்;
சப்தம குரு வலுவாக வேற்று இருப்பதால் நிச்சயமாக அருகாமையில் உள்ள ஆலயம் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நல்ல பலன் தங்களுடைய வாழ்வில் நிறைந்து கிடைக்கும் குருவால்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you