அக்டோபர் மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? அக்டோபர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்?
அக்டோபர் மாத ராசி பலன்கள்
அக்டோபர் மாதம் எப்படி அமைகிறது, என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது, நவகிரகங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரக நிலைகளில் ஆறு கிரக நிலைகளில் மாற்றத்தை சந்திக்கக்கூடிய ஒரு மாதமாக அக்டோபர் மாதம் அமைகிறது.
இந்த மாதத்தில், ஏற்படக்கூடிய முக்கிய கிரக பெயர்ச்சிகளாக எவையெல்லாம் அமைகின்றன, என்று பார்க்கும்போது குரு வக்ர பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, சூரிய பெயர்ச்சி மற்றும் சந்திர பெயர்ச்சி என ஆறு கிரக நிலைகளில் அதிரடியான மாற்றங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் அமையப்போகிறது.
அது மட்டுமல்லாது, இந்த அக்டோபர் மாதத்தில் நவராத்திரி வழிபாடானது மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை நவராத்திரி வழிபாடு கொண்டாடப்படுகிறது.
அதற்குப் பிறகு சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை என பூஜை வழிபாடுகளும் நிறைந்த ஒரு மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகையும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த அக்டோபர் இரண்டாம் தேதி இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அக்டோபர் மூன்றாம் தேதி வரை சூரிய கிரகணம் நடைபெறுகிறது.
குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்:
பொதுவாக முழு சுப கிரகமாக இருக்கக்கூடிய குரு வக்ரம் பெறுவது சாதகமற்ற அமைப்பு. என்றாலும், கூட குரு தற்போது அவரது சஞ்சார அமைப்பின்படி நன்மையை அதிகமாக பெறக்கூடிய ராசிகளாக குருவின் வக்ரத்தால், சந்திக்க கூடிய ராசிகளாக அமைவது மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதீத நன்மைகளை கிடைப்பதற்கான யோகம் உண்டு.
குரு வக்ரத்தால், இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு இல்லத்தில் சுப நிகழ்வுகள் கைகூடும். எதிர்பார்க்கக் கூடிய பொருளாதார ரீதியான வாய்ப்புகள் நிறைவாக பெறுவதற்கான யோகம் அக்டோபரில் உண்டு.
வக்ர சனி அக்டோபர்:
இந்த அக்டோபர், முழுவதும் சனி வக்ரகதியில் தான் சஞ்சரிக்கிறார் எனவே, உத்தியோகம் மற்றும் தொழில் ரீதியான சிறப்பான வாய்ப்புகள் எந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக உண்டு என்று பார்க்கும் போது, விருச்சகம் சிம்மம் மற்றும் மீனம் இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகம் மற்றும் தொழில் ரீதியான சிக்கல்கள் பெரிய அளவில கட்டுக்குள் வரும்.
எதிர்பார்க்கக் கூடிய புதிய வேலை வாய்ப்பு நிறைவாக கிடைக்கும். புதிய தொழில் துவங்கும் அமோகமான யோகமும் உண்டு.
நிழல் கிரகம் ராகு மற்றும் கேதுவின் பலன் அக்டோபர்:
நிழல் கிரகமான ராகு மற்றும் கேதுவின் அமைப்பால் எதிர்பாராத நன்மைகளையும் நல்ல முன்னேற்ற வாய்ப்புகளையும் பெறக்கூடிய ராசிகளாக ரிஷபம் துலாம் மற்றும் மகரம் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு ராகுவின் அமைப்பால் நல்ல பலன் உண்டு.
கேது, சூரிய கிரகணத்திற்கு பிறகு அதீத மாற்றங்களை இந்த அக்டோபர் மாதத்தில் மிகவும் அதீதமாக மாற்றங்கள் அள்ளிக் கொடுக்கக்கூடிய அமைப்பில் உருவாக்கிக் கொடு பாருங்க அந்த வகையில் கடகம், மேஷம் மற்றும் விருச்சிகம் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத தடைகள் விலகி கேதுவின் அமைப்பால் சூரிய கிரகணத்திற்கு பிறகு நல்ல அதிரடியான முன்னேற்ற வாய்ப்புகள் நிறைவாக கிடைக்கும். தெளிவான சிந்தனையும் அனைத்திலும் வெற்றி பெறுவதற்கான யோகம் உண்டு.
செவ்வாய் நீச்ச பெயர்ச்சி பலன்கள் அக்டோபர்:
செவ்வாய் இந்த மாதத்தின் இறுதியில் நீச்சமடைகிறார் அப்படி நீச்சம் அடைவதால் சில விஷயங்களை விரைவாக செய்து முடிக்க முடியாத சூழல் அனைத்து ராசிக்காரர்களுக்குமே உறவாகலாம் இருந்தாலும் அதிக நன்மைகளை பெறக்கூடிய ராசிகளாக எவையெல்லாம் அமைகின்றன என்று பார்த்தால் ரிஷபம் கும்பம் மற்றும் கன்னி ஆகிய ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் அமைப்பால் புதிதாக சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உருவாகும் தடைகள் அனைத்தும் கட்டுக்குள் வரும்.
சூரியன் நீச்ச பெயர்ச்சி அக்டோபர்:
முதலும் முடிவுமாக இருக்கக்கூடிய சூரியன் நீச்சமடைவதால் அனைத்து ராசிக்காரர்களுமே ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் நிச்சயம் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும்.
குறிப்பாக சூரியன் நீச்சம் பெறுவதால் இந்த வேலையில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய ராசிகளாக துலாம் ராசி, மீனம் மற்றும் கடக ராசிக்காரர்கள் பார்க்கப்படுகின்றன சூரியனின் நீச்சத்தால் சில ஆரோக்கியத் தொல்லைகளை இவர்கள் மற்ற ராசிக்காரர்களை விட சற்று அதிகமாக சந்திப்பதற்கான சூழல் உண்டு எனவே விழிப்புணர்வு தேவை.
சுக்கிரன் ஆட்சி பலம் இழப்பு அக்டோபர்:
அக்டோபர் மாதத்தில் 11ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி பலத்தை இழக்கிறார் சுக்கிரன் இதனால் சில வாய்ப்புகள் கைநழுவை செல்லும் என்றாலும் கூட ஆட்சி பலத்தை இழப்பதால் நன்மைகளை அல்லும் ராசியாக எவையெல்லாம் உள்ளன, என்று பார்க்கும் போது துலாம் ராசி கடக ராசி ரிஷப ராசி மீன ராசி மற்றும் மகர ராசி இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அமைப்பால் புதிய வாய்ப்புகள் வருவாயை உயர்த்திக் கொள்ளக்கூடிய வகையில் கிடைப்பதற்கான யோகம் உண்டு.
கலைத்துறை அரசியல் துறையிலும் எதிர்பாராத நல்ல முன்னேற்ற வாய்ப்புகள் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று கூடுதலாகவே உண்டு.
உச்ச மற்றும் ஆட்சி பலத்தை இழக்கும் புதன்:
உச்ச பலத்தையும் ஆட்சி பலத்தையும் இழக்கிறார் வித்யா கரகரான புதன் அப்படி இழப்பதால் கல்வியியல் பெரிய அளவுல பாதிப்பு ஏற்படாது.
உணர்ச்சிவசப்படுதல் கட்டுப்படுத்தி அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுத்து அதிரெடியான மாற்றங்களை பெறக்கூடிய ராசிகளாக எந்த ராசிகள் உள்ளன என்று பார்த்தால் கன்னி ராசி மிதுன ராசி மேஷ ராசி கும்ப ராசி மற்றும் தனுசு ராசி இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வலுவாக உண்டு.
அக்டோபரில் சந்திரனின் பலன்கள்:
சந்திரனின் அமைப்பை பொருத்தவரைக்கும் அனைத்து ராசிக்காரர்களுக்குமே மாறுதல் நன்மையாகவும் தீமையாகவும் அமைவதற்கான சூழல் உண்டு.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you