குரு பெயர்ச்சி 2024 எப்போது? குரு பெயர்ச்சி யாருக்கு நன்மை? குரு பெயர்ச்சி 2024 யாருக்கு பாதிப்பு?


குரு பெயர்ச்சி பலன்கள் 2024 

அதிக நன்மை பெறக்கூடிய ராசிகளின் வரிசை பட்டியல்

அனைவருக்கும் வணக்கம், 

       குரு பெயர்ச்சி 2024 எந்தெந்த ராசிகளுக்கு அதிக நன்மை தரக்கூடிய வகையில் அமைந்தது, எந்தெந்த ராசிகளுக்கு மிக சாதகமாக அதிர்ஷ்டம் நிறைந்த வகையாகவும், அதேசமயம் துரதிஷ்டமான ராசிகளாகவும் எவை பார்க்கப்படுகின்றன. என்று, பார்த்தால் கடகம், கன்னி, மேஷம், விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளுக்கு குரு உடைய சஞ்சார நிலையானது மிகவும் சாதகமாக அதீத நன்மைகளை அள்ளித் தரக்கூடிய வகையில் அமைந்து இருப்பதால் நல்ல பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏப்ரல் 2025க்குள் பெறுவது உறுதி செய்யப்பட்டது.

 குருபகவானின், இந்த ரிஷப ராசி சஞ்சாரத்தில் மிகவும் சாதகமாக இந்த ஆறு ராசிகளுக்கு அமைந்திருப்பதால், குடும்ப சூழ்நிலைகளை பொருத்தவரைக்கும் பெரிய அளவிற்கு எந்தவித சிரமம், தொல்லை, தொந்தரவு, பிரச்சனையும் ஏற்படாமல், ஒரு சுமூகமான நிலையானது நிலவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அது மட்டுமல்லாது அசுர வளர்ச்சியை முன்னேற்றமும் நிறைந்த கடைப்பதற்கான யோகம் பல்வேறு விதமான பணிகளில் மிகவும் அபரிவிதமாக கிடைக்கிறது.

 தொழில், வியாபாரத்தை பொருத்தவரைக்கும் குருபகவான் சுப பார்வை பல்வேறு ஸ்தானங்களை வலுப்படுத்துவதால், மிக விசேஷமான தருணங்களாக அமைகிறது. இந்த ஆறு ராசிகளுக்கு அமோகமான வளர்ச்சி கிடைக்கும். எனவே, தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய உள்ளது. புதிய தொழில் துவங்குதல் புதிய கிளை திறத்தல் மற்றும் உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கக் கூடிய சலுகை உட்பட பல நன்மைகள் நிறைந்து கிடைக்கும்.

        கலைத்துறை மற்றும் அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு தடைகள் விலகி நல்ல பல வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் கிடைப்பதற்கான வாய்ப்பு இந்த ஆறு ராசிகாரர்களுக்கு மிக அருமையாக யோகத்தின் உச்சியை தொடுவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.

     கல்வியில் மிகவும் சாதகமாக கவனத்துடன் ஞாபக சக்தியை அதிகரித்து கிரகிக்கும் தன்மையை அதிகரித்து படிப்பதற்கான கிரகநிலைகள் அமைந்திருப்பதால் வெற்றி, என்பது தேர்வுகள் அனைத்திலும் கிடைப்பது உறுதி உறுதியாக செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்க்காத, அளவிற்கு திடீர் மாற்றமும் யோகமும் கிடைக்கக் கூடிய அமைப்பு கடகம், கன்னி, மேஷம், விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளுக்கு அமைந்துள்ளது.

     குருபகவானின் சஞ்சார நிலை காரணமாக மிகவும் நடுநிலையாக நன்மை தீமை கலந்த அமைப்பில் சுமாரான நன்மைகளை பெறக்கூடிய ராசிகளாக மூன்று ராசிகள் இடம்பெற்றிருக்கின்றன தனுசு, சிம்மம் மற்றும் மீனம்.

    பெரிய அளவிற்கு பலன்களும் லாபங்களும் கிடைக்காத ராசிகள் அதிகளவு பரிகாரங்கள் மேற்கொண்டு பலனை பெற வேண்டிய ராசிகள் என மூன்று ராசிகள் மிதுனம், துலாம் மற்றும் ரிஷபம், ஆகிய மூன்று ராசிகளில் மிகப்பெரிய அளவிற்கு பலன் கிடைக்காத ஒரு சூழ்நிலைதான் இந்த ஆறு ராசிகளுக்கும் அமைந்திருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?