குரு பெயர்ச்சி எப்படி கன்னி ராசிக்கு என்ன பலன் 2024 கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?

குரு பெயர்ச்சி எப்படி கன்னி ராசிக்கு என்ன பலன் 2024 கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்? 

கன்னி ராசி களத்தில் இறங்கி விட்டான் முழு சுப கிரக குரு, இனி நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. இது நடந்தே தீரும் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 தமிழ்.

    கன்னி ராசிக்கு குரு பெயர்ச்சி 2024 முதல் 2025 வரை, மிகப்பெரிய பொற்காலமாக அமைவதற்கான யோகம் உருவாகியுள்ளது. என்பதை, குரு பெயர்ச்சி உறுதிப்படுத்தகறது. ஏனென்றால் குரு மிக வலுவாக ஒன்பதாம் இ டமாகிய பாக்கியஸ்தானத்தில் வலுவாக அமருகிறார், குரு பொதுவாக 2, 4, 5, 7, 9  மற்றும் 11 ஆகிய இடங்களில் அபரிவிதமான வளர்ச்சியை கொடுப்பார். இதில் உச்சபட்ச வளர்ச்சியாக பார்க்கக் கூடிய இடம் 9. அப்படிப்பட்ட ஒன்பதாம் இடத்தில் குரு அமர்வது உச்சபட்ச வளர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நிறைந்து கிடைக்கக்கூடிய யோகம் உறவாகியுள்ளது. 

  எனவே, இந்த தருணத்தில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய குடும்பம், உத்தியோகம், தொழில், வியாபாரம், விவசாயம் என அனைத்து பணிகளிலும் உச்சபட்ச வளர்ச்சியும், முன்னேற்றமும் நிறைந்த கிடைப்பதற்கான யோகம் உள்ளது. என்பதை தெளிவாகவும், துல்லியமாகவும் உறுதிப்படுத்துகிறார். எனவே, கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மே 1 முதல் அடுத்த 375 நாட்களுக்கு பொற்காலமாக அமைவதற்கான அதிர்ஷ்ட யோகம் உண்டு. என்பதை தெளிவாகவும் துல்லியமாகவும் உறுதிப்படுத்துகிறார் குரு.

   குருவின் சஞ்சாரா அமைப்பு மட்டுமல்ல குருவின் சுப பார்வையும் மிக அதீதமாக ஜென்ம ராசி, வெற்றிக்கு உரித்தான மூன்றாம் இடம், லாப ஸ்தானமாகிய 11ஆம் இடம் ஆகிய இடங்களில் பதிவதால், பல்வேறு வகையான சிக்கல்கள் சிரமங்கள் விலகும். குறிப்பாக, குரு பார்க்கின் கோடி நன்மை என்று சொல்லக்கூடிய வகையில் திட்டமிட்ட அனைத்து விதமான பணிகளிலும் மிகப்பெரிய அளவில பிரம்மாண்டமான வெற்றி வாய்ப்பு கிடைப்பதற்கான யோகம் உண்டு. ஏனென்றால் தைரியஸ்தானத்தை அபரிவிதமாக பார்க்கிறார், 

  அது மட்டுமல்ல அது பல்வேறு வகையான தடைகள் சிக்கல்கள் விலகக் கூடிய வகையில் ஜென்ம ராசியில் குருவின் சுப பார்வை பதிவது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் வலுவான எதிர்காலம் சிறப்பாக கிடைப்பதற்கான யோகம் உண்டு. என்பதை துல்லியமாக உறுதிப்படுத்துகிறார். மேலும், லாப ஸ்தானமாகிய 11ஆம் இடம் பலப்படுவதால் எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் லாபம் அதிகரிக்கும். வருமானத்தை உயர்த்திக் கொள்வதோடு, பொருளாதார ரீதியான சிக்கல்கள் விலகுவதற்கான யோகம் மிகவும் அபரிவிதமாக கிடைக்கிறது.

கன்னி ராசி குடும்பம்;

 கன்னி ராசிக்கு 9ஆம் இடமான பாக்கியஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால், குடும்ப ரீதியாக ஏற்படக்கூடிய சிக்கல்கள் சிரமங்கள் விலகும். தடைகள் ஏற்பட்டாலும் பாக்கிய குரு அனைத்தையும் தகர்த்தரைகிறார். எனவே, குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிறைவதற்கான யோகம் உண்டு. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டு வந்த மனஸ்தாபம், கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிறைந்த கிடைப்பதற்கான யோகம் நிச்சயமாக உண்டு. 

  குருவின் சுப பார்வை ஜென்ம ராசியில் பதிவதால் இந்த தருணத்தில் மங்களகரமான பல சுப நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறும். புதிய அசையும், அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் நிச்சயமாக கிடைக்கிறது. என்பதை தெளிவாக உறுதிப்படுத்துகிறார். புதிதாக வீடு, நிலம், வீட்டுமனை, வாகனம், ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை வாங்குவதற்கான யோகம் உண்டு. 

      வெற்றி ஸ்தானத்தை குருவின் சுப பார்வை பலப்படுத்துவதால் நிச்சயமாக பல்வேறு வகையான சுப நிகழ்வுகள் நடைபெறுவது மட்டுமல்லாது காரிய தடைகளும் விலகி, நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய நல்ல முன்னேற்றம் நிறைந்த கிடைப்பதற்கான யோகம் உருவாகி உள்ளது.

கன்னி ராசி உத்தியோகம்;

     பாக்கிய குருவின் அமைப்பு மிக வலுவாக இருக்கக்கூடிய இந்த தருணத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும் யோகம் உண்டு. விரும்பிய வேலை வாய்ப்பு மிக சிறப்பாக கிடைக்கும். அது மட்டுமல்லாது, வெளிநாட்டு வேலை வாய்ப்பு உட்பட கன்னி ராசிக்காரர்களுக்கு, உத்தியோக ரீதியான சிறப்பான நன்மைகள் நிறைந்த கிடைப்பதற்கான யோகம் நிச்சயமாக உருவாகியுள்ளது பாக்கிய குருவால். 

  கன்னி ராசிக்காரர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விருப்ப இடமாறுதல், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல பணிகள் தாமதம் இல்லாமல் கிடைக்கும். உங்களுடைய கருத்துக்கள் அங்கீகரிக்கப்படும். நீங்கள் எதிர்பாரக்குறபடி மிகச் சிறப்பான முறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு, அதற்கான சூழ்நிலையும் உருவாக்கிக் கொடுக்கிறார்கள் குரு.

கன்னி ராசி தொழில் வியாபாரம்;

தொழில் துறை வியாபார துறையில் குரு ஒன்பதில் அமர்ந்திருப்பது மட்டுமல்லாது லாப ஸ்தானத்தை மிக வலுவாக பார்க்கிறார். எனவே, தொழில் துறை வியாபாரத்துறை ரீதியாக ஏற்படக்கூடிய நிதி சார்ந்த சிக்கல்கள் விலகும். கடன் சார்ந்த சூழ்நிலை விலகும். பங்குதாரர்கள், வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கனகச்சிகமாக கிடைப்பதால் எதிர்பார்த்தபடி ஒப்பந்தங்கள் சிறப்பாக அமையும். லாபம் அதிகரிக்கும், புதிய கிளை திறத்தல் மற்றும் புதிதாக பல திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்தல் போன்றவற்றில் வெற்றி மிக வலுவாக கிடைக்கும். 

     எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க கூடிய மத்திய மாநில அரசின் சலுகை உட்பட பல சலுகைகள் நிறைந்த கிடைக்கும்.

கன்னி ராசி கலைத்துறை;

   கன்னி ராசிக்காரர்களுக்கு கலைத்துறை ரீதியான பணிகளில் மிக வலுவான முன்னேற்றம் ஏற்படுகிறது. பல சிரமங்கள் சூழ்ந்த நிலையில் மாற்றத்தை பெறுவதற்கான யோகம் உண்டு. உங்களுடைய திறமையை வெளிக் கொணர்வது மட்டுமல்லாது, அங்கீகாரம் கிடைக்கக்கூடிய வகையில் மாநில, தேசிய மற்றும் உலக விருதுகளை பெறுவதற்கான யோகமும் இந்த தருணத்தில் மிகச் சிறப்பாக உண்டு. 

   கன்னி ராசிக்கு குரு பாக்கியஸ்தானத்தில் இருப்பதால் மிகப் பிரம்மாண்டமான படைப்புகளை செய்வதற்கான யோகம் கிடைக்கிறது. உங்களுடைய படைப்புகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவற்றிற்கு மிகப்பெரிய அளவில் லாபம் நிறைந்து கொடுக்கிறார். குரு அதிலும் குறிப்பாக நகைச்சுவை, கருத்து, அரசியல் என எதுவாக இருந்தாலும் அவற்றில் மிக அதிகப்படியான பார்வையாளர்களை கவருவது மட்டுமல்லாது பொருளாதார ரீதியான முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

கன்னி ராசி அரசியல்;

   கன்னி ராசி அரசியல் துறை சார்ந்த படிகளில் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் மிக சிறப்பாக கையாளக்கூடிய யோகம் வலுவாக கிடைக்கிறது. ஏனென்றால், சனி ஆறிலும், சுக்கிரன் மிக வலுவாக பெரும்பாலும் சாதகமாக சஞ்சரைக்கிறார். இப்படிப்பட்ட, இந்த வேலையில் ஒன்பதில் குரு சஞ்சரிப்பதன் காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு அரசியல் சார்ந்த சூழ்நிலைகள் மிகவும் சாதகமாக அமைவதற்கான அதிர்ஷ்ட யோகம் உண்டு. 

     பல்வேறு வகையில் ஏற்பட்டு வந்த அரசியல் துறை ரீதியான சிரமங்கள் விலகுவதோடு மட்டுமல்லாது, எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க கூடிய பொறுப்புகள் மற்றும் உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும். மக்கள் மத்தியிலும் செல்வாக்கு அதிகரிக்கும், மிகவும் சிறப்பான முறையில் குடும்பம் மற்றும் அரசியல் சார்ந்த பணிகளை கையாளுவதற்கான வாய்ப்பை மிக வலுவாக கொடுக்கிறார் குரு. நீதிமன்ற வழக்குகள், சாதகமற்ற சில தவறான தகவல்கள் போன்றவற்றில் நல்ல மாறுதலை சந்திப்பதற்கான யோகம் உண்டு.

கன்னி ராசி பெண்கள்;

    பெண்மணிகளின் நலனுக்கு பொறுப்பேற்ற குரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகநிலைகளின் அமைப்பை பார்க்கும் போது அடுத்த ஒரு வருடத்திற்கு குரு மிக வலுவாக சஞ்சரிக்கிறார். சுக்கிரனும் பெரும்பாலும் சாதகமாக வீற்றிருக்கிறார். எனவே, பெண்மணிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க கூடிய திருமண பந்தம் ஏற்படுவதற்கான யோகமும், புத்திர பாக்கியம் நிறைந்த கிடைப்பதற்கான வாய்ப்பும் மிகவும் வலுவாக கிடைக்கக்கூடிய அற்புதமான தருணமாக அமைகிறது. 

 குரு ஒன்பதில் இருப்பதால் பெண்மணிகளுக்கு குடும்ப ரீதியான பல சிக்கல்கள் விலகி மகிழ்ச்சி நிறைந்த கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. விரும்பியபடி காதல் திருமணம் அல்லது நிச்சயக்கப்பட்ட திருமணம் நடைபெறுவதற்கான யோகமும் மங்கள ஓசை இல்லத்தில் கேட்பதற்கான வாய்ப்பு நிச்சயம் பெண்மணிகளுக்கு உண்டு. பெண்மணிகள் சந்திக்கக்கூடிய பொருளாதார ரீதியான சிக்கல்கள் விலகி நல்ல முன்னேற்றம் கிடைப்பதற்கான வாய்ப்பை பாக்கிய குரு உறுதிப்படுத்துகிறார்.

கன்னி ராசி விவசாயம்;

 குரு ஒன்பதாம் இடமாகிய பாக்கியஸ்தானத்தில் அமருவதால் இந்த தருணத்தில் புதிதாக நிலம் பண்ண நிலம் வாங்கக்கூடிய யோகம் வலுவாக கிடைக்கிறது. விவசாயம் சார்ந்த பணிகளில் அலைச்சல் குறையும் விளைச்சலும், வருமானமும் இரட்டிப்பாக உயரும். மத்திய, மாநில அரசின் சலுகைகள் கிடைப்பதற்கான யோகம் உருவாகிறது. 

     கால்நடை வளர்ப்பில் புதிதாக ஆடு, மாடு வாங்குவதற்கான யோகம் கிடைக்கிறது. அது மட்டும் அல்லாது அசுர வளர்ச்சி பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. கால்நடை அபிவிருத்தியாக கூடிய தருணமாகவும், கடன் சார்ந்த தொல்லைகள் உள்ளிட்ட பல சிரமங்கள் விலகுகிறது.

கன்னி ராசி பரிகாரம்;

   கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் வலுவாக குரு ஒன்பதாம் இடத்தில் அமர்வதால் பெரிய அளவிற்கு பரிகாரங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் குரு வக்ரகதிகள் திரும்பக் கூடிய காலகட்டத்தில் வியாழக்கிழமை விரதம் இருந்து அருகாமையில் உள்ள குரு பகவான் அல்லது நவகிரக ஆலயம் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய தடைகள் விலகி பரிபூரண வளர்ச்சி பாக்கிய குருவால் நிச்சயமாக நிறைந்த கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?