லாப குரு என்றால் என்ன? கடக ராசி குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?


லாப குரு என்றால் என்ன? கடக ராசி குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? 

கடக ராசிக்கு அடுத்த 365 நாட்களுக்குள் பண மழை கொட்ட போவது உறுதி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 தமிழ்

 கடகராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி என் ஆதிக்கம் நிறைந்து இருக்கக்கூடிய, இந்த வேலையில் ராசியின் ராஜ யோகாதிபதியான குரு லாப ஸ்தானமாகிய 11ஆம் இடத்திற்கு வருவது பண மழையில் நனையக்கூடிய, அதிர்ஷ்ட யோக வாய்ப்புகள் நிறைந்த கடைக்கு கூடிய ஒரு தருணமாக மாறி உள்ளது, என்பதை தெளிவாக உறுதிப்படுத்துகிறார்கள் கடக ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும்.

 குருவிற்கு உச்ச வீடாக பார்க்கப்படுகிறது எனவே குரு லாபஸ்தானத்தில் அமர்வது, கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோக வாய்ப்புகளை நிறைந்து கொடுக்கக்கூடிய அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் மிகவும் அதீதமாக அள்ளிக் கொடுக்கிறார்.

 முழு சுப கிரகமான குருவைப் பொருத்தம் வரைக்கும் ரெண்டு, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது அபரிவிதமான வளர்ச்சியும், முன்னேற்றத்தையும் செல்வ செழிப்பையும், நிறைந்த கொடுப்பார் அதில் ஒரு இடமான லாப ஸ்தானமாகிய 11ஆம் இடத்தில் குரு அமர்வது கடக ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

 ஏனென்றால், சனி மட்டும் தான் சாதகமற்ற ஒரு அமைப்பில் இருக்கிறார், நிழல் கிரகமாக உள்ள ராகு, கேது மிகவும் வலுவாக ராகு ஒன்பதாம் இடத்திலும், கேது மூன்றிலும் சஞ்சரிப்பது முன்னேற்றத்தை அள்ளி கொடுக்கக் கூடிய ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது. 

 எனவே, ராஜ யோகாதிபதி ஆன குரு லாபத்தில் வந்திருப்பது குடும்பம் தொழில் என அனைத்திலும் மிகச் சிறந்த வளர்ச்சியும், முன்னேற்றமும் நிறைந்த கிடைக்கக்கூடிய, ஒரு இனிமையான தருணமாக கடக ராசிக்காரர்களுக்கு மாறியிருக்கிறது. 

எனவே, கடக ராசிக்காரர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் நீங்கள் திட்டமிட்டதை விட உட்சபட்ச வளர்ச்சியும், யோகமும் நிறைந்த கிடைக்கப் போகிறது.

 லாப குருவின் அமைப்பால் கடக ராசிக்காரர்களுக்கு குடும்பம், உத்தியோகம், தொழில் என அனைத்திலும் எப்பேர்பட்ட மாறுதல் ஏற்படுகிறது.

லாபகரவால் கடக ராசிக்கு குடும்பம்;

 குரு லாபத்தில் சஞ்சரிக்க கூடிய இந்த தருணம் மே 1 முதல் புதிதாக நின்னெல்லாம் ( வீடு, வாகனம் ) வாங்குவதற்கான அதிர்ஷ்ட யோகம் உண்டு. 

இல்லத்தில் பல்வேறு வகையான சுப நிகழ்வுகள் தங்கு தடை என்று நடைபெறுவதற்கான அதிர்ஷ்ட யோகம் உருவாகியுள்ளது, கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல்வேறு வகையான சிக்கல்கள் விலகுகிறது. லாபகரவால் புதிய சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்கான அதிர்ஷ்ட யோகம் உண்டு. 

 அஷ்டம சனியால் ஏற்பட்ட குடும்ப உறவுகளில் ஏற்பட்ட விரிசல்கள் விலகுகிறது, அது மட்டுமல்ல இனி குடும்பத்தில் ஒற்றுமையும், முன்னேற்றமும் நிறைந்த கிடைக்கும். பல்வேறு வகையான மகிழ்ச்சி இரட்டிப்பாக கூடிய யோகம் உண்டு. குடும்ப வருமானம் உயர்கிறது திட்டமிட்டபடி அனைத்து காரியங்களிலும் வெற்றி நிறைந்து கிடைக்கும்.

லாப குருவால் கடக ராசிக்கு உத்தியோகம்;

 லாபகுருவின் ஆதிக்கம் நிறைந்திருப்பதால் அஷ்டம சனியின் பாதிப்பு உத்தியோகம் சார்ந்த பணிகளில் நிச்சயமாக விலகும், கஷ்டம் குறைந்து பணி சார்ந்த சூழ்நிலைகளில் இனிமை அதிகரிப்பதற்கான வாய்ப்பு, மகிழ்ச்சியுடன் புதிய உதுவைக்கத்தான் பணிகளில் ஈடுபடுவதற்கான யோகமும் கிடைக்கிறது. இந்த தருணத்தில் மிக சிறப்பாக மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைப்பதால், திட்டமிட்டபடி வெற்றி கிட்டும். 

 பல்வேறு வகையில சந்தித்து வந்த உத்தியோக ரீதியான நற்பல விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகுகிறது. 

எனவே, இந்த தருணத்தில் கடக ராசிக்காரர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் நிறைந்து கிடைப்பதற்கான யோகம் உருவாகியுள்ளது. 

புதிய வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆகிய அனைத்தும் இந்த தருணத்தில் கிடைப்பதற்கான யோகம் லாபகுருவின் அமைப்பால் நிறைந்த கிடைக்கப் போகிறது. 

கடக ராசிக்காரர்களுக்கு உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கக் கூடிய நிரந்தர வேலைவாய்ப்பு, அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான யோகம் உண்டு.

லாப குருவால் கடக ராசிக்கு தொழில்;

 வியாபாரம் கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை லாப ஸ்தானத்தில் குரு வலுவாக அமர்ந்திருப்பதால் தொழில்துறை, வியாபார துறையில் லாபம் அதிகரிக்க கூடிய வகையில் புதிய ஒப்பந்தங்கள் நிறைந்த கிடைக்கும். 

 தடை இல்லாமல் நிறைந்து கிடைப்பதற்கான யோகம் உண்டு பல்வேறு வகையான கொடுக்கல் வாங்கல் ரீதியான சிக்கல்கள் கடக ராசிக்கு விளங்குகிறது. அஷ்டம சனியின் ஆதிக்கம் நிறைந்திருந்தாலும் கூட இந்த தருணத்தில் பல்வேறு வகையான தடைகள் சிரமங்கள் விலகி பல அதிரடி ஆன நன்மைகள் இந்த தருணத்தில் நிச்சயமாக கிடைப்பதற்கான யோகம் கடக ராசிக்கு உண்டு. 

தொழில், வியாபாரம் சார்ந்த பணிகளில் கடந்த சில ஆண்டுகளாக அஷ்டம சனியின் பிடியில் சிக்கித் தவித்த கடக ராசிக்காரர்களுக்கு ராஜ யோகாதிபதியான குரு லாபத்திற்கு வந்திருப்பதால் தடைகள் விலகி, முன்னேற்றம் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாக்கி உள்ளது. 

சில்லரை, மொத்த என வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் இரட்டிப்பாக உயரக்கூடிய தருணமாக அமைந்துள்ளது. 

தொழில் வியாபாரத்தில் உள்ள தடைகள் விலகுகிறது, சிக்கல் விலகி எதிர்பார்க்கக் கூடிய புதிய ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் நிறைந்த கிடைப்பதற்கான யோகம் கடக ராசிக்காரர்களுக்கு உண்டு.

லாப குருவால் கடக ராசிக்கு கலைத்துறை;

கலைத்துறையின் நாயகனாக உள்ள சுக்கிரனின் ஆட்சி வீட்டிற்கு குரு வந்திருப்பதால் கலை துறையில் எதிர்பாராத அதிர்ஷ்ட யோக வாய்ப்புகள் கிடைக்கும். லாப ஸ்தானம் வலுப்பெறுவதால் கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் நிறைந்த கிடைக்கும். உங்களுடைய படைப்புகளுக்கு விருதுகளை பெறக்கூடிய அளவிற்கு உச்ச வளர்ச்சி நிறைந்த கிடைக்கும். 

 கலைத்துறையில் விருதுகளை பெறக்கூடிய அளவிற்கு உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். நாதஸ்வர கலைஞர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள், ஓதுவ மூர்த்திகள், நடிகர், நடிகை, நாட்டிய கலைஞர்கள் என அனைவருக்கும் தங்களது திறமையை வெளிக்கொணரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

 மிகப் பெரிய அளவிலான பல்வேறு வகையான நன்மைகள் அதிர்ஷ்டம் உண்டு. செல்வ செழிப்பு, சவுகரியம் நிறைந்த கிடைக்க கூடிய வகையில் உங்களுடைய படைப்புகளுக்கு மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும்.

லாப குருவால் கடக ராசிக்கு அரசியல் துறை;

 லாபகரவால் கடக ராசிக்காரர்களுக்கு அரசியல் துறையில் உச்சபட்ச வளர்ச்சியை கிட்டும் எதிர்பார்க்கக் கூடிய தேர்தல் வெற்றிகள், இன்ப செய்திகள் நிறைந்த கிடைக்கும். 

 இதுவரை இல்லாத வகையில் அரசியல் சார்ந்த பணிகளை சிறப்பாக கையாளுவதற்கான வாய்ப்பு நிச்சயமாக கிடைக்கிறது. உங்களுடைய சிறு சிறு முயற்சிகளும் திட்டமிடக்கூடிய காரியங்களும் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்றுத் தருவதோடு, புகழ் அதிகரிக்க கூடிய நல்ல வாய்ப்பு முன்னேற்றமும், நிறைந்த கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் உண்டு. 

 அஷ்டம சனியின் ஆதிக்கத்தால் இதுவரை நீங்கள் சந்தித்த பல்வேறு வகையான சிரமங்கள், நீதிமன்ற வழக்குகள், சட்ட சிக்கல் உட்பட அனைத்தும் விலகி நல்ல முன்னேற்றம் அரசியல் சார்ந்த பணிகளில் நிச்சயமாக உண்டு.

லாப குருவால் கடக ராசிக்கு விவசாய துறை;

 விவசாயத் துறையின் அதிபதியான செவ்வாயின் நட்பு கிரகமாக இருக்கக்கூடிய குரு லாபத்தில் அமருவது கடக ராசிக்காரர்களுக்கு விவசாயம் சார்ந்த பணிகளில் நிறைந்த லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். 

புதிதாக அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான யோகமும், புதிய நிலம், வீடு, பண்ணை நிலம் அமைத்தலக்கான அதிர்ஷ்ட வாய்ப்பும் லாபகரவால் கடக ராசிக்காரர்களுக்கு உண்டு. 

 கால்நடை வளர்ப்பில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்ச லாபமும் முன்னேற்றமும் நிறைந்த கிடைக்கக்கூடிய யோகம் லாபகுருவால் நிறைந்துள்ளது. கடக ராசிக்கு விவசாயத்துறை சார்ந்த பணிகளில் நவீன இயந்திரங்கள் வாங்குவதற்கான புதிய வாய்ப்புகளை லாபகுரு ஏற்படுத்தக் கொடுக்கிறார். 

விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் பெறக்கூடிய வகையில் அக்கம் பக்கத்தை நிலத்தாரின் பிரச்சனை, பாகப்பிரிவினை, நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் விலகி, நல்ல ஒரு சிறப்பான சூழ்நிலை உருவாகக்கூடிய யோகம் விவசாயத் துறையினருக்கு மிக சிறப்பாக உருவாக்கிக் கொடுக்கிறார் லாபகுரு. 

 விவசாயம் சார்ந்த பணிகளில் அலைச்சல் குறையும், விளைச்சலும், வருமானமும் உயரக்கூடிய தருணமாக அமைந்துள்ளது.

லாப குரு கல்வித்துறை கடக ராசிக்கு;

 கடக ராசிக்காரர்களுக்கு குரு லாபத்தில் அமருவதால் கல்வியில் ஞாபக சக்தி அதிகரிக்கும் கிரகிக்கும் தன்மை அதிகரிப்பதால் மிக கடினமான பாடங்களை கூட எளிதாக புரிந்து கொள்வதோடு, நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவதற்கான யோகமும், உயர்கல்வி சார்ந்த பணிகளும் சிறப்பாக நடைபெறும். 

 இந்த தருணத்தில் வெளிநாடு சென்று உயர்கல்வி பயில்வதற்கான யோகமும் கிடைக்கிறது.

பெண்மணிகளுக்கு லாப குருவினால்;

 கடக ராசிக்கார பெண்மணிகளுக்கு நலனில் பொறுப்பேற்ற முக்கியமானவராக இருப்பவர் குரு, அவர் லாபத்தில் அமருவது மட்டுமல்லாது சுக்கிரனும் பெரும்பாலும் மிகவும் வலுவாக சஞ்சரித்துக் கொண்டு இருப்பது கடக ராசிக்கார பெண்மணிகளுக்கு இரட்டிப்பு நன்மையை அள்ளிக் கொடுக்கக்கூடிய அதிர்ஷ்டமும், யோகமும் உண்டு. 

 எனவே, குடும்பத்தில் பல்வேறு வகையான சுப நிகழ்வுகளும், தொழில்துறை வியாபார துறையில் திட்டமிட்டதை விட மிக சிறந்த வளர்ச்சியும், முன்னேற்றமும், கிடைப்பதற்கான யோகமும் உண்டு. 

குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும், அதிகரிக்கும் அஷ்டம சளியின் ஆதிக்கம் நிறைந்திருந்தாலும் பெண்மணிகளுக்கு குருவின் அமைப்பு காரணமாக திருமண பாக்கியமும், புத்திர பாக்கியமும் தடையில்லாமல் கிடைக்கும். 

 லாபகுருவின் ஆதிக்கம் மிக வலுவாக கிடைப்பதால் பெண்மணிகள் செய்யக்கூடிய, சிறு முயற்சியில மிகப்பெரிய அளவுல வெற்றி வாய்ப்பும், குடும்ப ஒற்றுமையும் நிறைந்த கிடைக்கக்கூடிய யோகம் உண்டு.

கடக ராசிக்கு பரிகாரம்;

 லாபகுருவின் ஆதிக்கம் நிறைந்திருப்பதால் கடக ராசிக்காரர்கள் வாரத்தில் வியாழக்கிழமை விரதம் இருந்து அருகாமையில் உள்ள குரு பகவான் அல்லது நவகிரக சன்னதி சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். 

 அஷ்டம சனியின் பாதிப்பு குறைவதோடு மட்டுமல்லாது லாபகுருவின் ஆதிக்கம் நிறைந்த கிடைக்கும். பல பணிகளில் முன்னேற்றமும், சுபிட்சமும் நிறைந்த கிடைப்பதற்கான யோகம் நிச்சயமாக உருவாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?