சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? சிம்மம் ராசி 2024 எப்படி இருக்கும்?
சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? சிம்மம் ராசி 2024 எப்படி இருக்கும்?
நம்ம ராசிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா குரு பெயர்ச்சி 2024 சிம்ம ராசி பலன்கள்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை பாக்கியஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்பதில் சஞ்சரித்த குரு இனி தொழில் ஸ்தானமாகிய பத்தில் நுழைகிறார். மே ஒன்றாம் தேதி முதல் 10 நுழையக்கூடிய குரு மிக வலுவாக தொழில் ஸ்தானம், ஜீவனஸ்தானம், கர்மஸ்தானம் என்று சொல்லக்கூடிய பத்தாம் இடத்தை வலுப்படுத்தகிறார். ஒன்பதில் இருப்பதைவிட பத்தாம் இடத்திற்கு வருவது சற்று சாதகம் அற்ற ஒரு அமைப்பாக தான் பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஜென்ம குரு போன்ற பல்வேறு விதமான சிரமங்களை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படாது. பத்திற்கு வருவது வற்றாத கடலும் வற்றும் என்ற சொல்லக் கூடிய வகையில் சில சிரமங்கள், ஏற்படும் என்பது பொதுவான அமைப்பாக பார்க்கப்பட்டாலும், கூட குரு ஜீவனஸ்தானத்தை, கர்ம ஸ்தானத்தை வலுப்படுத்தக் கூடிய வேளையில் அவரது, சுப பார்வை இரண்டு, நான்கு, ஆறு ஆகிய இடங்களை பலப்படுத்துகிறது. தனஸ்தானம், வாக்கு ஸ்தானம் ஆகிய குடும்ப ஸ்தானத்தை குருவின் சுப பார்வை வலுப்படுத்துவது என்பது, குடும்பத்தில் பல்வேறு வகையான சுப நிகழ்வுகளில் ஏற்படக்கூடிய தடைகள் விலகும்.
அதுமட்டுமல்லாது, நான்காம் இடமான சுகஸ்தானத்தை பார்ப்பதால் சுப நிகழ்வுகளில் ஏற்படக்கூடிய தடைகள் வெகுவளவில் விளக்குகிறது. ருண ரோக சத்ரு ஸ்தானமாகிய ஆறாம் இடத்தை குருவின் சுப பார்வை வலுப்படுத்துவதால் ஆரோக்கியத் தொல்லைகள், கடன் சார்ந்த தொல்லைகள் நிச்சயமாக குறைவதற்கான யோகம் உண்டு. குரு பார்க்கின் கோடி நன்மை என்று சொல்லக்கூடிய வகையில் குருவின் சுப பார்வை குருவின் சுப பார்வை, பல்வேறு இடங்களை வளப்படுத்தவதால் நிச்சயமாக பல பணிகளில் ஏற்படக்கூடிய சிரமம் விலகும்.
இருப்பினும், சிம்ம ராசிக்காரர்கள் கருமஸ்தானம் என்பதால் எந்த ஒரு முடிவையும் உடனடியாக எடுக்க வேண்டாம், சற்று ஆலோசித்து, எடுப்பது நிச்சயமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கலையும் விளக்கக் கூடிய வகையில் யோகத்தை உருவாக்கிக் கொடுக்கும். என்பதை, குருவின் சஞ்சார் அமைப்பு உறுதிப்படுத்துகிறது.
ராசியின் அதிபதியான சூரியனுக்கு நட்பு கிரகமாக இருக்கக்கூடிய குரு, தொழில் ஸ்தானத்தை வலுப்படுத்துவது என்பது நிச்சயமாக, சிரமம் ஏற்பட்டாலும் கூட அவற்றை துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கான யோகம், ஒரு வகையில் உள்ளது. அது மட்டுமல்லாது 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராசியின் அதிபதி உச்சம் பெற்றிருக்கக் கூடிய வேலையில் இந்த குரு பெயர்ச்சி நடைபெறுகிறது.
எனவே, முழு சுப கிரகமாக இருக்கக்கூடிய குருவின் அமைப்பும் ராசியின் அதிபதியான நட்பு கிரகமாக இருக்கக்கூடிய குருவின் அமைப்பு, நல்ல வலுவான மாற்றத்தை நம்ம ராசிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா! என்று வியக்கக்கூடிய வகையில் ஏற்படுத்துவதற்கான சூழல் நிச்சயம் உண்டு.
குடும்பம், தொழில், உத்தியோகம், வியாபாரம், விவசாயம் என அனைத்து விதமான பணிகளிலும் தொழில் குருவால் ஏற்படக்கூடிய மாற்றம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
சிம்ம ராசி குடும்பம்;
சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்பம் சார்ந்த பணிகளில் நல்ல மாற்றம் நிறைந்து, கிடைப்பதற்கான வாய்ப்பு நிச்சயமாக உண்டு. என்பதை குருவின் சுப பார்வை குடும்ப ஸ்தானத்தை வலுப்படுத்துவதால் உறுதிப்படுத்துகிறது. எனவே, இல்லத்தில் தடைகள் ஏற்படுவதற்கான சூழல் இல்லை. என்பதை குரு தெளிவாக உறுதிப்படுத்துகிறார். எனவே, சில நிகழ்வுகள் உட்பட பல்வேறு விதமான பணிகளில் ஏற்படக்கூடிய தடைகள் விலகும். தொழில் குருவால், கர்ம குருவால், கர்ம பாதிப்புகள் குடும்பத்தில் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வழக்குகள், பூர்வீக சொத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சிரமங்கள் நிச்சயம் விலகும்.
குடும்ப வருமானம், உயரக்கூடிய வகையில் புதிய தொழில் வாய்ப்புகள் நிச்சயமாக உண்டு. கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிரமங்கள் விலகும். நெருங்கிய உறவினரிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகி மகிழ்ச்சி உண்டாகும். இருப்பினும் குடும்ப ரீதியான பணிகளில் திட்டமிடும்போது கர்ம குருவால், சற்று விழிப்புணர்வு நிச்சயமாக தேவை.
சிம்ம ராசி உத்தியோகம்;
உத்தியோகம் சார்ந்த பணிகளில் கர்ம குழுவால் சற்று பணிச்சுமை அதிகரிப்பதற்கான சூழல் உண்டு. ஆனால், அதே சமயம் நம்ம ராசிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா என்று வியக்கக்கூடிய வகையில் வேலை இல்லா திண்டாட்டம் குறையும். புதிய வேலைவாய்ப்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏற்படக்கூடிய தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும்.
இந்த தருணத்தில் அடுத்து வரக்கூடிய 365 நாட்களில் ஏற்படக்கூடிய சில சிரமங்களில் சற்று வளைந்து கொடுத்து எதிர்கொள்ளும்போது லாபகரவால் நிச்சயம், அடுத்த வருடத்தில் மிக சிறப்பான உத்தியோக சூழ்நிலை உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகள் தாமதம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியும், மன நிறைவும், உத்தியோகம் சார்ந்த பணிகளில் கிடைப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பார் கர்மகுரு.
சிம்ம ராசி தொழில் வியாபாரம்;
தொழில்துறை வியாபாரத் துறைக்கு உரித்தான பத்தாம் இடத்தில் குரு அமர்வது நிச்சயமாக தொழில் துறையில் சிறந்த மாறுதலை சிம்ம ராசிக்கு ஏற்படுத்துவது, அது மட்டுமல்லாது, நம்ம ராசிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா! என்ற வியக்கக்கூடிய வகையில் பல புதிய ஒப்பந்தங்கள், திட்டங்கள் சிறப்பாக கை போடுவதற்கான யோகம் உண்டு. அலைச்சல் அதிகரித்தாலும் கூட அதனால் ஆதாயம் நிறைந்து கிடைக்கும். பல்வேறு வகையான தடைகள் விலகி, எதிர்பார்க்கக் கூடிய தொழில் ரீதியான உறவுமுறை என்பது, சுமுகமாக அமையும். எனவே, கடன் சார்ந்த தொல்லை அனுமதி கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல சிக்கல்கள் விலகி நல்ல ஒரு மாற்றம், நிச்சயமாக சிம்ம ராசிக்கு உண்டு. என்பதை குரு உறுதிப்படுத்துகிறார். ஆனால், கண்ட சனியின் அதிகமும் நிறைந்திருப்பதால் மிகப்பெரிய அளவில் முதலீடு, அகல கால் வைப்பதை தொழில் துறையில் நிச்சயமாக சிம்ம ராசிக்காரர்கள் தவிர்க்க வேண்டும்.
சிறு சிறு வாய்ப்புகளாக இருந்தாலும் அவற்றை சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல வளர்ச்சி உண்டு. சனி, ராகு, கேது உட்பட பல கிரகநிலைகள் சாதகமற்ற இருக்கக்கூடிய இந்த வேலையில் சற்று நிதானமும் பொறுமையும் தேவை என்பதையும், அது மட்டுமல்லாது தனித்து செயல்படுவதை விட கூட்டு முயற்சியாக செயல்படுவது மிகவும் நல்லது, என்பதை குரு தெளிவாகவும் துல்லியமாகவும் உறுதிப்படுத்துகிறார். குருவின் சஞ்சார் அமைப்பு.
சிம்ம ராசி கலைத்துறை;
சிம்ம ராசிக்கு கலை துறையின் அதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரனின் ஆட்சி வீட்டில் குரு அமர்வது என்பது சற்று சாதகமற்ற ஒரு அமைப்பாக தான் கலைத்துறை சற்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ராசியின் அதிபதியான சூரியனின் பார்வையில் சுக்கிரன் பகை கிரகமாக பார்க்கப்படுகிறார். அவரின் ஆட்சி வீடான ரிஷப ராசியில் கர்மஸ்தானத்தில் அமர்வது இந்த தருணத்தில் சற்று வேலை பளு அதிகரிப்பதோடு, மட்டுமல்லாது எதிர்பார்க்கக்கூடிய புதிய வாய்ப்புகளிலும், தடை ஏற்படுவதற்கான சூழல் உண்டு.
ஆனால், நம்ம ராசிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா! என வியக்கக்கூடிய வகையில் உங்களுடைய திறமைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். திட்டமிட்ட பிரம்மாண்டமான பணிகளை படைப்பதற்கான யோகமும், மக்கள் மத்தியில் அதற்கு வரவேற்பும் கிடைக்கும். சில நேரங்கள்ல கலைத்துறை ரீதியான பணிகளில் மந்தமான சூழ்நிலை நிலவினாலும், அவை தற்காலிகமானது மட்டும் தான் என்பதை ஜீவனஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருக்க கூடிய குரு உறுதிப்படுத்துகிறார்.
சிம்ம ராசி விவசாயம்;
விவசாயம் சார்ந்த பணிகளில் கர்மஸ்தானத்தை குரு வலுப்படுத்துவதால் கடினமான வயல் சார்ந்த சூழ்நிலை ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் உண்டு. அக்கம் பக்கத்து நிலத்தாரின் பிரச்சனை, உட்பட நிலம் சம்பந்தப்பட்ட சில பிரச்சனைகள் தலை தூக்குவதற்கான சூழல் உண்டு. இருப்பினும், தொழில் ஸ்தானம் வலுவாக அமைவதால் நிச்சயமாக இந்த தருணத்தில் கால்நடை வளர்ப்பில் சிறந்த முன்னேற்றம், அபரிவிதமாக கிடைக்கும். விளைச்சலும், வருமானமும் உங்களுடைய கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை நிச்சயமாக கொடுக்கும்.
முன்பு இல்லாததை விட இந்த தருணத்தில் மிகுந்த கவனமும், பொறுமையும் நிச்சயமாக தேவை கடன் சார்ந்த தேவைகள் ஏற்படும். போது அத்தியாவசியம் மற்றும் அனாவசியம் என உணர்ந்து. அதற்கு, ஏற்றார் போல் முடிவடைவது, எதிர்கால நலனை மிகச் சிறப்பாக அமைப்பதற்கான யோகம் கிடைக்கும்.
சிம்ம ராசி பெண்கள்;
சிம்ம ராசி பெண்மணிகளை பொறுத்த வரை முழு சுப கிரகமான குரு கர்ம ஸ்தானத்தில் அமருவதால் பெண்மணிகளுக்கு, தொழில்துறை, வியாபார துறை, உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதனை புரிவதற்கான யோகம் நிச்சயம் உண்டு. தங்களுடைய திறமை என்னவென்று கண்டுபிடிப்பதற்கான யோகத்தை உருவாக்கி கொடுக்கிறார் குரு. எனவேதான், இந்த குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்கார பெண்மணிகளுக்கு, எப்படி ஒரு அதிர்ஷ்டமா! என்ற வியக்கக்கூடிய மாறுதலை நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது. பெண்மணிகள் எதிர்பார்க்கக்கூடிய சுப நிகழ்வுகளும் மிக சிறப்பாக கை கூடும்.
குடும்பம் சார்ந்த மனவருத்தம், வேதனை, கவலை மறைவதற்கான பல சந்தர்ப்பங்கள் உருவாகும். சுப நிகழ்வுகளில் சின்ன சின்ன தடைகள் ஏற்பட்டாலும், கூட காரியவற்றே நிச்சயமாக பெண்மணிகளுக்கு உண்டு.
சிம்மராசி அரசியல்;
அரசியல் சார்ந்த பணிகளில் கர்ம ஸ்தானத்தில் குரு வலுவாக அமர்ந்திருப்பதால், கர்மா பூமராங் என்ற சொல்லக் கூடிய வகையில் ஏற்கனவே செய்த தவறுகளின் பாதிப்புகளை, அதிகமாக சந்திப்பதற்கான சூழல் உண்டு.
ஏனென்றால், பெரும்பான்மையான கிரக நிலைகளின் அமைப்பு சாதகமற்று இருக்கும்போதும், குரு கர்மத்தில் அமர்வது நிச்சயமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு அரசியல், ஆளுமையும், அதிகாரமும் சில சிக்கலையும் மாற்றத்தையும் சந்திப்பதற்கான சூழ்நிலை உண்டு. எனவே, எதை செய்தாலும் முன் எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டிய ஒரு தருணமாக அமைந்துள்ளது. என்பதை குரு தெளிவாகவும் துல்லியமாகவும் உறுதிப்படுத்துகிறார். தேவையற்ற வாக்குறுதிகளையும், சக்திக்கு மீறிய செயல்பாட்டையும் முயற்சி செய்யாமல் இருப்பது சிறப்பான ஒரு அமைப்பாக நிச்சயமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு அமையும்.
சிம்ம ராசி பரிகாரம்;
குரு கர்ம தொழில் என்று சொல்லக்கூடிய பத்தாம் இடத்திற்கு வந்திருப்பதால் குரு பெயர்ச்சி துவங்கியவுடன் ஆலங்குடி திருத்தலம், சென்று குருபகவானை தரிசித்து வாருங்கள் நிச்சயம் சிம்மராசிக்காரர்களுக்கு, ஏற்படக்கூடிய தடைகள் மந்தமான சூழலை விலகி நல்ல முன்னேற்ற வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழலை குரு பகவான் அமைத்துக் கொடுப்பார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you