மஹாளய அமாவாசை இன்று பித்ரு காலை வழிபட்டால் என்ன கிடைக்கும்? பித்ரு தோஷம் விலக நாம் என்ன செய்ய வேண்டும்?

மஹாளய அமாவாசை இன்று பித்ரு காலை வழிபட்டால் என்ன கிடைக்கும்?

    மஹாளய பட்சம் அல்லது மஹாளய அமாவாசை என்பது, ஆவணி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையில் துவங்கி புரட்டாசி மாதம் அமாவாசை நாளன்று முடியக்கூடிய இந்த 15 நாட்கள் மஹாளய பட்சம் எனப்படும்.

         மஹாளயம் என்பது கூட்டமாக கூடுவது என்றும் பச்சம் என்பது 15 நாட்கள் என்று பொருள்படும். அதாவது மறைந்த நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து புறப்பட்டு நம்மோடு தங்கும் இந்த 15 நாட்கள் மஹாளய பச்சம் என கூறப்படுகிறது.இந்தப் 15 நாட்கள் முடிய கூடிய நாள் மஹாளய அமாவாசை.

        ஒரு ஆண்டில் 12 முதல் 13 அமாவாசைகள் உள்ளன. இந்த 13 அமாவாசைகளில் மிக முக்கியமானது மூன்று அமாவாசை. அவை ஆடி அமாவாசை,மஹாளய அமாவாசை, தை அமாவாசை.

        ஆடி அமாவாசை அன்று பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நம் முன்னோர்கள் ஆவணி பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் பூலோகம் வந்தடைகிறார்கள்.அன்று முதல் 15 நாட்கள் அதாவது மஹாலயவற்றம் எனப்படும் 15 நாட்கள் நம்மோடு தங்கி நாம் கொடுக்கும் எள்ளும் நீரும் ஏற்று நமக்கு பலவிதமான ஆசைகளை நமக்கு மட்டுமில்லாமல் நமக்கு பின் வரக்கூடிய ஏழு தலைமுறைக்கும் வழங்கிவிட்டு மஹாலய அமாவாசை முடிந்தவுடன் பூலோகத்திலிருந்து பித்ருலோகத்திற்கு புறப்படுகிறார்கள். தை அமாவாசை அன்று பித்ருலோகத்தை சென்றடைகிறார்கள்.

   வருடத்தில் வரக்கூடிய மற்ற அமாவாசைகளில் திதி தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும் கூட வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த மகாலய அமாவாசை என்று நாம் கொடுக்கும் தர்ப்பணம் வருடம் முழுவதும் கொடுக்கும் திதி தர்ப்பணத்திற்கு சமமாக பார்க்கப்படுகிறது.

   மகாலய அமாவாசை ஆன இன்று முன்னோர்களை வழிபடா விட்டால் என்ன நடக்கும்? 

   மகாலய அமாவாசையான் இன்று முன்னோர்களை நாம் வழிபடாவிட்டால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள், சுபகாரிய தடங்கல்கள், புத்திர பாக்கிய தோஷம், திருமண தடைகள், தொழில் நஷ்டம், குடும்பத்தில் சஞ்சலங்கள், விபத்துக்கள், நிம்மதி இல்லாமை போன்றவை ஏற்படும். தொடர்ந்து இவ்வாறு நடக்கும் போது பித்ரு தோஷம் உள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம்.

     பித்ரு தோஷம் விலக நாம் என்ன செய்ய வேண்டும்? 

     பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு வருடம் முழுவதும் அமாவாசை நாளில் திதி கொடுக்க முடியவில்லை என்றாலும் கூட வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய ஆடி அமாவாசை மஹாளய அமாவாசை தை அமாவாசை ஆகிய தினங்களில் முன்னோர்களை வழிபடுவதன் மூலமாக குடும்பத்தில் ஏற்பட்டு வரும்சுப காரியங்கள் நீங்கும் புத்திர பாக்கிய தோஷம் நீங்கும் திருமணம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குதூகலமும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.

    குறிப்பாக இந்த பலன்கள் என்பது உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்களுக்கு பின் வரக்கூடிய ஏழு தலைமுறைக்கும் இந்த பலன் கிடைக்கும்.

என்பது ஐதீகம்.

   அதேபோல் இன்றைய தினம் தானம் கொடுப்பது பல மடங்கு புண்ணியத்தை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் அந்த வகையில் 12 ராசிக்காரர்கள் என்ன தானம் செய்யலாம்என்று பார்க்கும் போது:

மேஷம்:

     மேஷ ராசி நேயர்களான உங்களுக்கு உங்களுடைய ராசைக்கு சொந்தக்காரர்கள் செவ்வாய் ஆனால் சூரியன் உங்களுடைய ராசியில் உச்சம் பெறுவதால் மஹாலய அமாவாசையான இன்றைய தினத்தில் நீங்கள் கோதுமை தானம் கொடுப்பது சிறப்பு.

ரிஷபம்:

    ரிஷப ராசி நேயர்கள் ஆன உங்களுக்கு உங்களுடைய ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் என்பதால் வெள்ளை பொருட்கள் தானம் கொடுப்பது சிறப்பு அதாவது தயிர் சாதம் பால் சாதம் ஆகியவற்றை நாணம் கொடுப்பதால் ஈனற்ற நன்மைகள் உங்களுடைய வாழ்வில் ஏற்படும்.

மிதுனம்:

    மிதுன ராசியினர்களான உங்களைப் பொறுத்த வரைக்கும் உங்கள் ராசிக்கு ராசிநாதன் புதன் ஆக இந்த மகாளய அமாவாசையான இன்றைய தினத்தில் நீங்கள் பச்சைப் பயிறுதானம் கொடுப்பது மிகவும் சிறப்பு.

கடகம்:

   கடக ராசி நேயர்களான உங்களை பொறுத்த வரைக்கும் உங்களுடைய ராசிக்கு நாதன் சந்திரன் எனவேசந்திரனுக்கு உகந்த பால்அருகிலுள்ள கோவிலுக்கு அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுப்பது சிறப்பு.

சிம்மம்:

    சிம்மராசி நாய்களான உங்கள் ராசிக்கு நாதன் சூரியன் எனவே மகாளய அமாவாசை ஆன இன்றைய தினம் நீங்கள் கோதுமை தானம் கொடுப்பது என்ற நன்மைகளை ஏற்படுத்தும்.

கன்னி: 

 கன்னிராசனையர்களை பொருத்தவரைக்கும் உங்களுடைய ராசிக்கு நாதனான புதன் உங்களுடைய ராசியில் உச்சம் பெறுகிறார் அதனால் சிவாலயத்திற்கு தேவையான அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது நன்மைகளை ஏற்படுத்தும்.

துலாம் :

     உங்களுடைய ராசிக்கு 12ல் கேதோ ஆறில் ராகு சஞ்சரிக்க கூடிய இத்தருணங்கள்ள நீங்கள் அருகம்புல்லால் அர்ச்சனை செய்வதும் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுப்பதும் என்ற நன்மைகளை வழங்கும்.

விருச்சிகம்:

     விருச்சிக ராசிக்காரர்கள் சுமங்கலிக்கு வஸ்திர தானம் செய்வதுசுப காரிய தடங்கல்கள் விலகி முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

தனுசு:

        10-ல் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், கேதுவும் 4-ல் ராகு சஞ்சரிப்பதால் துர்க்கையை வழிபாடு செய்ய வேண்டும் துர்க்கைக்கு எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்வது சிறப்பு.

மகரம்:

    2-ல் சனிபகவானும் 3-ல் ராகுவும் 9-ம் இடத்தில் சூரியன் சுக்கிரன் புதன் கேது ஆகிய கிரகங்கள் சஞ்சரிப்பதால் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று கருப்பு உளுந்து நல்லெண்ணெய் பச்சரிசி முதலான தானம் தருவது நல்லது.

கும்பம்: 

        1-ல் சனி 2-ல் ராகு 4-ல் குரு 5-ல் செவ்வாய் என அமர்ந்திருக்கும் இந்த காலத்தில்நீர்நிலைகளில் இருக்கும் மீன்களுக்கு பொறியிடுவது பசு மாட்டுக்கு உணவு அளிப்பது ஆகியவை நற்பலன்களை வழங்கும்.

மீனம்:

       ராசியில் ராகு 7ல் சூரியன், சந்திரன் புதன், சுக்கிரன் கேது அமைந்திருப்பதால்ராகு காலத்தில் பைரவருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பு மேலும் ஆதரவற்றவர்களுக்கு ஆடைகள் தானம் செய்யலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?