சந்திர கிரகணத்தால் எந்த ஐந்து ராசிக்கு அதிகம் பாதிப்பு சந்திர கிரகணம் எப்போது ஏற்படுகிறது சந்திர கிரகணம் செய்ய கூடாதவை

சந்திர கிரகணத்தால் எந்த ஐந்து ராசிக்கு அதிகம் பாதிப்பு


          சந்திர கிரகணம் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், 12 ராசிகளில் அதிக பாதிப்புகளை சந்திக்க போகும் ராசியாக 5 ராசிகள் உள்ளன. இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிக கவனமும் விழிப்புணர்வும் சந்திர கிரகணத்தின் போதும் அதற்குப் பிறகும் தேவைப்படுகிறது.

     இந்த வருடம் இரண்டாவது சந்திரகிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி காலை 6.10 மணி முதல் 10.18 மணி வரை நீடிக்கிறது. சுமார் தோராயமாக நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடிக்க கூடிய இந்த சந்திர கிரகணத்தில் எதிர்மறையான சிந்தனைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

       பொதுவாக சந்திர கிரகணம் என்பது சூரியன் பூமி சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது படும்போது இந்த கிரகணம் நடைபெறுகிறது. ராகுவின் ஆதிக்கத்திலும் ராகுவின் பழிவாங்கல் காரணமாக கிரகணம் நடைபெறுவதாகவும் பார்க்கப்படுகிறது.

        சந்திர கிரகணத்தால் அதிக பாதிப்புகளை சந்திக்க போகும் ஐந்து ராசிகளைப் பற்றி பார்ப்போம்.

மீனம்:
       
      மீன ராசி பொருத்தவரைக்கும் உறுதியற்ற பல நிகழ்வுகளை தடுமாற்றத்துடன் செய்யக்கூடிய சூழல் உருவாகும். எதிர்பாராத தடைகளை அதிகமாக சந்திப்பதற்கான சூழல் சுவடிகள் திட்டமிடுதல் உள்ளிட்ட பல பணிகளில் ஏற்படும்.

கும்பம்:

      கும்பராசி பொருளாதார ரீதியாக சில தடைகளையும் கடன்சுமை அதிகரிப்பதற்கான சூழலும் ஒன்று குடும்பத்தில் உறவுகளிடம் மனவருத்தம் ஏற்படலாம். எதிர்பாராத விரைய செலவுகளையும் சில பொருளாதார ரீதியான சிக்கனம் சந்திப்பதற்கான சூழல் கும்ப ராசிக்கு உறவாகலாம்.

தனுசு:

  தனுசு ராசி உடல்நலம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் அலைச்சல் அதிகரிப்பதற்கான சூழல் உண்டு எந்த பணியை செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை திட்டமிடுதல் என்பது மிகவும் அவசியம். இந்த தருணத்தில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது தனுசு ராசிக்காரர்களுக்கு.

சிம்மம்:

      அதிக சிரமங்களை சந்திக்கும் ராசியில் சூரியனின் ஆட்சி வீடான சிம்ம ராசியும் உள்ளது சிம்ம ராசிக்காரர்களுக்கு பல்வேறு வகையான கிரகண தோஷங்களும் எதிர்பாராத தடைகளும் அதிகரிக்கும் திட்டமிட்டு செய்தால் கூட தோல்வியை சந்திப்பதற்கான சூழல் உண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

மேஷம்:
 
       மேஷ ராசியை பொறுத்த வரைக்கும் விரய செலவுகள் அதிகரிக்கும் இந்த தருணத்தில் சிறிய பணிகளை திட்டமிட்டு செய்தாலும் கூட அவற்றை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படலாம் எந்த காரியத்தையும் நினைத்தபடி செய்து முடிப்பதில் சிக்கல் உண்டாகும்.

    இந்த ஐந்து ராசிகாரர்களை பொறுத்த வரைக்கும் சந்திரகிரகணம் உடைந்ததற்கு பிறகு சில சிரமங்கள் அதிகரிக்கலாம். எனவே, அனைத்திலும் கவனம் மிகவும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது குறிப்பாக உங்களுக்கு சம்பந்தமில்லாத நிகழ்வுகளில் உங்களுடைய பங்களிப்பை கொடுக்க வேண்டாம். 

அதனால் பல சிக்கல்களை சந்திப்பதற்கான சூழலும் பொருளாதார நெருக்கடியும் ஒரு வாகனம் உருவாகலாம் எனவே இயன்றவரை அமைதியாக இந்த சந்திர கிரகணத்திற்கு பிறகு சற்று வளைந்து கொடுத்து நடப்பது நல்ல பலன்களை விரைவாக பெற்றுக் கொடுக்கும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?