புதன் உச்சம் பெற்றால் என்ன பலன்? புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அல்ல போகும் ராசிகள் எவை

புதன் உச்சம் பெற்றால் என்ன பலன்



           புதன் உச்சம் பெற்றால் வித்யா காரகன் உச்சம் பெறுவதால் சில தடைகளும் தொல்லைகளும், தொந்தரவுகளும் நிச்சயம் ஏற்படும். ஏனென்றால் காலச்சக்கரத்தில் ஆறு மற்றும் மூன்றாம் இடத்தை கொண்டவராக இருக்கிறார். எனவே, எதிர்பாராத தடைகள் சிரமங்கள் கூடுதலாக இந்த தருணத்தில் நிச்சயம் ஏற்படும்.

      ஆனால் ஒளி பொருந்திய கிரகம் ஆகவும் அறிவுக்கு அதிபதியாகவும் திகழக்கூடிய புதன் உச்சமும், ஆட்சி பலமும் பெறுவதால் வாழ்வில் எப்பேர்பட்ட பிரச்சனைகளை சந்தித்தாலும் அத்தனை பிரச்சனைகளையும் எளிதில் கடந்து செல்லக்கூடிய ஆற்றல், ஞானம், அறிவு மிக தெளிவாக கிடைக்கும்.

     ஏனென்றால், புதன் கொடுக்கக் கூடிய ஆற்றல் என்பது மனித வாழ்க்கையே தலைகீழாக புரட்டிப் போடுவதற்கான யோகம் உண்டு. மீள முடியாத வகையில் இன்னல்கள் சூழ்ந்தாலும் அத்தனை இன்னல்களையும் புதன் கொடுக்கக் கூடிய அறிவாற்றல் தகர்த்தெறியும் அதுமட்டுமல்லாது பெருமாளின் சாராம்சத்தை கொண்ட கிரகமாக இருக்கிறார். 

   எனவே, மதிநுட்பத்தை துல்லியமாக நுணுக்கமாக வெளிப்படுத்துவதற்கான யோகம் இந்த வேலையில் மிகவும் அபரிவிதமாக உண்டு. எனவே, எவ்வளவு இன்னல்கள் சூழ்ந்தாலும் அத்தனையும் எளிதில் கலந்து விட முடியும். அந்த வகையில் தற்போது தனது சொந்த ராசியான கன்னி ராசியில் உச்சமும் ஆட்சி பலமும் பெற்று அக்டோபர் ஐந்து வரை சஞ்சரைக்கப் போகிறார். இதனால், எதிர்பாராத அதிர்ஷ்ட யோக வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய ராசிகளாக எந்த ராசிகள் அமைந்துள்ளன என்ற பார்க்கும்போது.

       தனஸ்தானத்தை பெற்றுள்ள சிம்ம ராசி, சுகஸ்தானத்தை கொண்டுள்ள மிதுன ராசி, பஞ்சமஸ்தானத்தை கொண்டுள்ள ரிஷப ராசி, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஏழில் மீனம், தடைகள் அனைத்தையும் தகர்த்தெறியும் பாக்கியத்தில் மகர ராசி லாபத்தில் உச்சத்தை எட்டும் விருச்சிக ராசி ஆகிய ராசிக்காரர்களுக்கு உச்சயோக பலன்கள் இந்த வேலையில் உண்டு.


    ஜென்மத்தில் ஆட்சி பலம் பெற்றிருந்தாலும் கூட ராசியின் அதிபதியாக இருப்பதால் சில நன்மைகளை, சந்திப்பதற்கான யோகம் பெற்று மகிழும் வாய்ப்பு கன்னி ராசிக்கு உண்டு. தனஸ்தானத்தை வலு சேர்ப்பதால் சூரியனின் அதிகாரம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். தனரீதியான சிக்கல்கள் கடன் சுமை குறையும். 

    ராசியின் அதிபதியாக மிதுன ராசிக்கு இருக்கிறார். சுக ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் பல்வேறு வகையான சுப நிகழ்வுகள் திட்டமிட்டதை விட சிறப்பாக செய்து முடிப்பதற்கான யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு உண்டு. தாய் வழி உறவு முறைகளில் சந்தித்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும் உறவு பலப்படும். 

      பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு உச்சம் பெற்று இருப்பதால் இந்த தருணத்தில் தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். எதிர்பாராத புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஏழில் மீன ராசிக்கு இருப்பதால் இந்த வேளையில் காதல் திருமணம் கைகூடும். திருமண வாய்ப்பு மனப்பந்தம் மங்கள ஓசை நிச்சயமாக கேட்கும்.

      பாக்கியஸ்தானத்தை வலு சேர்ப்பதால் மகர ராசிக்காரர்களுக்கு கையில் எடுக்கக்கூடிய காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டு. வீண் அலைச்சல்கள் கணிசமாக குறையும் எதிர்பாராத தன ரீதியான முன்னேற்றம் சிறப்பாக கிடைக்கும்.

    விருச்சக ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தை வழி சேர்ப்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு உச்ச நன்மை உங்களுடைய வாழ்வில் உண்டு. ஏனென்றால் சூரியன், கேதுவும் லாபத்தில் இருக்கின்றன மும்மடங்கு மூன்று கிரக நிலைகள் லாபத்தை வலு சேர்ப்பதால் மிகப்பெரிய அளவில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொன்னான நேரமாக அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் நேரமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு அமைகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?