சூரிய கிரகணத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? சூரிய கிரகணத்தில் சிரமத்தை சந்திக்க போகும் ராசிகள் எவை?

இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் மகாளய அமாவாசை அன்று


மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம்

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் மகாளய அமாவாசை அன்று அதாவது, மகாளய பட்சத்தில் இறுதி நாளாக இருக்கக்கூடிய அமாவாசை தினத்தன்று நிகல இருக்கிறது. இதனால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்.

பொதுவாக சூரிய கிரகணம் (solar eclipse) என்பது, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் துணைக்கோளான சந்திரனின் நிழல், பூமியின் மீது படுவது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. 

இந்த, சூரிய கிரகணம் என்பது ராகு கேதுவின் பழிவாங்கல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதிலும், இந்த வருடத்தில் சூரியன், சந்திரன் இணைந்து கன்னி ராசியில் சஞ்சரிக்கும் போது ஏற்படுகிறது. 

அதைவிட மிக முக்கியமாக அமைப்பாக பார்க்கப்படுவது அங்கு சந்திரன், சூரியனுடன் இணைந்து புதன் ஆட்சி பலமும் உற்சவம் பெற்று சென்றிருக்கிறார் மற்றும் யோகங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய நவகிரகங்களிலே மோட்ச காரகன், என்று அழைக்க கூடிய கேதுவும், அங்கு வீற்றிருக்கிறார் இதுதான் கூடுதல் சிறப்பு.

எனவே, இந்த சூரிய கிரகணத்தினால் நான்கு கிரக நிலைகள் ஒரே இடத்தில் சஞ்சரிக்கும் போது, எப்பேர்பட்ட மாறுதல் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏற்படுகிறது. 

சூரிய கிரகணத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? :

என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது அதிக அதிர்ஷ்டங்களை அல்லக்கூடிய ராசிகளின் பட்டியலில், கடகம், மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகள் அமோகமான, வளர்ச்சியை பெறக்கூடிய யோகத்தை இந்த சூரிய கிரகணம் உருவாக்கிக் கொடுக்கிறது. 

இந்த மூன்று ராசிக்காரர்களும் எடுத்த காரியங்களில் வெற்றி தடையில்லாமல் கிடைக்கும். நினைத்த காரியங்களை மறுகணமே முடிப்பதற்கான யோகமும் கிடைக்கும்.

சூரிய கிரகணத்தில் சிரமத்தை சந்திக்க போகும் ராசிகள் எவை? :

அதிக சிரமங்களை சந்திக்க கூடிய ராசிகளில் கன்னி ராசி, மிதுன ராசி, கும்ப ராசி மற்றும் துலாம் ராசி இந்த ராசிக்காரர்கள் அதிக ஆசிரமங்களையும் எதிர்பாராத தடையும் சந்திப்பதற்கான சூழல், சூரிய கிரகணத்தினால் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

எனவே, இந்த நான்கு ராசிக்காரர்கள் அதிக கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட்டாக வேண்டும். 

சூரிய கிரகணத்தில் நடுநிலை ஆன பலன் பெறும் ராசிகள் எவை? :

பெரிய அளவிலான சிரமங்களை சந்திக்காத ராசிகளாக மற்ற ஐந்து ராசிக்காரர்கள் உள்ளனர்.

ரிஷபம், சிம்மம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பெரிய அளவிலான சிக்கல் இல்லை. எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. நடுநிலையான பலனை பெறுவதற்கான யோகம் கிடைக்கும்.

இருந்தாலும், இந்த கிரகணம் நடைபெறும் போது அனைத்து ராசிக்காரர்களுமே கவனத்துடன் இருக்க வேண்டும். அதிலும் அக்டோபர், இரண்டாம் தேதி இரவு 9:13 மணிக்கு துவங்கி அடுத்த நாள் அதிகாலை 3:16 மணி வரை நீடிக்கிறது. இந்த சூரிய கிரகணம் நடைபெறும் போது அனைத்து ராசிக்காரர்களுமே கவனத்துடன் இருக்க வேண்டும். 

இரவு வேளையில் நடைபெறுவதால் பெரிய அளவிலான சிக்கல்கள் எதுவும் இல்லை. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.

ஆனால், உலகில் மற்ற பல நாடுகளில் பார்க்க முடியும் குறிப்பாக அமெரிக்காவின் தென்பகுதிகளிலும், அர்ஜென்டைனா, பிரேசில் போன்ற நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தை காண இயலும். அதே போன்று பசுபிக் பெருங்கடலிலும் சில பகுதிகளில் பார்க்கலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?