நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை? அதிக சிரமத்தை சந்திக்கும் ராசிகள் எவை?

நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை? 

sani vakra neverthi palangal


அனைவருக்கும் வணக்கம், 

சனி மிக வலுவாக வக்ர நிவர்த்தி பெற்று, ஆட்சி பலம் பெறுகிறார், கும்ப ராசியில் இதனால், நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை? 

அதிக சிரமத்தை சந்திக்கும் ராசிகள் எவை? என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது, அதிக நன்மையும் யோகத்தையும் பெறும் ராசிகள்.

அதிக யோகத்தை பெறும் ராசிகள்:

மேஷ ராசி கன்னி ராசி மற்றும் தனுசு ராசி இந்த மூன்று ராசிக்கு சனி பகவான் தைரியம், யோகம் மற்றும் லாப ஸ்தானத்தை வலுப்படுத்துவதால் பொருளாதார ரீதியான சிக்கல்கள் விலகி வாழ்வில் மகிழ்ச்சியும் பல்வேறு வகையான சுபண்டு நிகழ்வுகளும் அடுத்த ஐந்து மாதங்கள் நிறைவாக கிடைக்கும்.

நடுநிலை யோகத்தை பெறும் ராசிகள்:

சற்று நடுநிலையை விட கூடுதல் நன்மை பெறும் ராசிகள் துலாம், மிதுனம் மற்றும் ரிஷபம் ஆகிய இந்த மூன்று ராசிகள் உள்ளன எனவே, இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகப்பெரிய நன்மை இல்லை என்றாலும் மிகப்பெரிய அளவுல சிரமம் இல்லாமல் எதிர்பார்க்கக் கூடிய வெற்றி உண்டு.

பரிகாரம் செய்து நன்மை பெறும் ராசிகள்:

பரிகாரம் செய்து நன்மை பெறும் ராசிகள். மகரம் மற்றும் விருச்சிகம் இந்த ராசிக்காரர்களுக்கு சிரமம் வந்தாலும் கட்டுக்குள் இருப்பதற்கான சூழல் உண்டு.

ஏனென்றால், பாத சனி, சுகசனி மற்றும் சப்தம சனி ஆக வெற்றி இருப்பதால் நிச்சயம் சிரமம் கட்டுக்குள் வரும்.

அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய ராசிகள்:

அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய ராசிகள். மீனம், கும்பம், சிம்மம், மற்றும் கடகம். இந்த ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் நிச்சயமாக செயல்பட வேண்டும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பணிகளில் ஈடுபடக் கூடாது.

ஏனென்றால், விரய சனி, ஜென்ம சனி, கண்ட சனி மற்றும் அஷ்டம சனி. இதனால், எதிர்பாராத பொருளாதார ரீதியான இழப்புகள் ஏற்படலாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?