வீரத்தை விளைநிலமாக கொண்ட செவ்வாயின் ஆட்சி வீட்டில் சுக்கிரன் எந்த ஐந்து ராசிக்காரர்கள் யோகத்தின் உச்சியில் அமர போகிறார்கள்?

சுக்கிர பெயர்ச்சி பலன்கள்



நவகிரகங்களிலே, திடீர் அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன். 

ஆட்சி பலத்தை இழந்து தனது சமகிரகமாக இருக்கக்கூடிய செவ்வாயின் ஆட்சி வீடான விருச்சிக ராசியில், அக்டோபர் 14ஆம் தேதி முதல் சஞ்சரிக்கப் போகிறார். 

இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு அமோக யோகம், யோகத்தின் உச்சியில் என்ற சொல்லக்கூடிய வகையில், இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம் உண்டு.

தனஸ்தானத்தில் சுக்கிரன் துலாம்:

துலாம் ராசியின், அதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரன் ஜென்ம ராசியை விட்டு விலகி இரண்டாம் இடம் ஆகிய தனஸ்தானத்தில் நுழைவது, பொருளாதார ரீதியாக உள்ள சிக்கல்களை விலக்கி விடுகிறார். 

இல்லத்தில், சுப நிகழ்வுகள் கைகொடும் திருமணம், காதுகுத்து, வளகாப்பு மற்றும் புதுமனை புகுதல் என பல நல்ல சுப நிகழ்வுகள் எந்த தடை இல்லாமல் கை கூடும். 

கடன் சுமை குறையும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

பஞ்சமத்தில் சுக்கிரன் கடகம்: 

பஞ்சமஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் இடத்தில் சுக்கிரன். எனவே, இந்த தருணத்தில் பூர்வீக சொத்துக்கள் பிரச்சனை சுமுகமாக தீரும். 

எதிர்பார்க்கக் கூடிய புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட எதிர்பாராத பல பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக இந்த தருணத்தில் தீர்வாகும். 

ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். தந்தை வழி உறவு முறையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் விலகும்.

எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யும் ஏழில் சுக்கிரன் ரிஷபம்: 

சப்தம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஏழாம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். 

நல்ல வரன் கிடைத்து திருமண பாக்கியம் புத்திர பாக்கியம் நிறைவாக கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும்.

ராசியின் அதிபதி ஏழில் எனவே இந்த வேளையில் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி.

ஒன்பதில் சுக்கிரன் மீனம்: 

ராசியின் உச்ச அதிபதியான சுக்கிரன் ஒன்பதில் சஞ்சரிப்பது, எண்ணற்ற நன்மைகளை உருவாக்கிக் கொடுக்கிறது. 

தடைகள் விலகும் சுப நிகழ்வுகள் கைகூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. வீண் விரைய செலவுகளை தவிர்த்து சேமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிடைக்கும்.

லாபத்தில் சுக்கிரன் மகரம்: 

தொழில் உபயோகத்தில் எதிர்பார்க்கக் கூடிய சலுகைகள் தானாக தேடி வரும். 

சிறு முயற்சி கூட பிரம்மாண்ட வெற்றியை ஏற்படுத்தும். கொடுக்கல் வாங்கல் சிக்கல் சீராகும். கடன் தொல்லைகள் விலகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?