ஆட்சி பலத்தை புதன் இழப்பதால் என்ன நடக்கும்? ஆட்சி பலத்தை இழக்கும் போது அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை?
புதன் பெயர்ச்சி பலன்கள்
நவகிரகங்களிலே அறிவுக்கு அதிபதியாக திகழ்கிறவர் வித்யா கரகரான புதன். அவர் கொடுக்கக்கூடிய அறிவாற்றல் என்பது எதிரிகளை விவேகத்துடன் எதிர்கொள்ள கூடிய வலிமையை கொடுக்கும்.
இதனால், வாழ்வில் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை எளிதில் சுலபமாக கடந்து வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.
அதேசமயம், புதன் கெட்டால் புத்தி கெடும் என்பார்கள், புதன் சரியாக இல்லை என்றால் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளை ஏற்படுத்தக்கூடிய ஒருவராகவும் இருக்கிறார் விதியாக்கரகரான புதன்.
ஆனால், அதே சமயம் அவர் வலிமையாக சஞ்சரைக்கும்போது மனித வாழ்வில் மிகப்பெரிய சிரமம் சந்தித்தாலும் கூட அவற்றை எளிதில் கடந்து வருவதற்கான வாய்ப்பை உருவாக்குவார்.
தற்போது, அக்டோபர் ஆறாம் தேதி முதல் ஆட்சி பலத்தையும் உச்ச பலத்தையும் இழக்கும் புதனால் அனைத்து ராசிக்காரர்களும் சந்திக்கக்கூடிய மாற்றம் என்ன? எந்த ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம் உண்டு என்று பார்க்கும் போது.
புதன் பெயர்ச்சியால் அதிக நன்மைகளை பெறும் ராசிகள்:
புதன் பொதுவாக இயற்கை சுப கிரகமாக பார்க்கப்படுகிறார் அசுப பலன்களை பாவ கிரக சேர்க்கையால் ஏற்படுத்தினாலும் அவர் ஒரு இயற்கை சுப கிரகம் இருப்பது சிறப்பு அந்த வகையில் பார்க்கும்போது தற்போது சுக்கிரனுடன் இணைந்து மிக வலுவாக புதன் சுக்கிர யோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறார் துலாம் ராசியில்.
பொதுவாக புதன் 2 4 5 7 9 மற்றும் 11 ஆகிய இடங்களில் நற்பலன்களை அள்ளிக் கொடுப்பார்.
ஆனால், அதீத நன்மையை ரெண்டு ஐந்து 11 ஆகிய இடங்களில் அதிகமாக நன்மைகளைக் கொடுப்பார். அந்த வகையில், பார்க்கும்போது தனஸ்தானத்தை கன்னி ராசிக்காரர்களுக்கும் பஞ்சமஸ்தானத்தை மிதுன ராசிக்காரர்களுக்கும் லாபஸ்தானத்தை தனுசு ராசிக்காரர்களுக்கும் வலு சேர்க்கிறார்.
எனவே, இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அமோகமான நன்மை நிச்சயம் உண்டு உணர்ச்சிவசப்படாமல் அனைத்து விதமான முடிவுகளையும் தெளிவாக சிந்தித்து முடிவெடுப்பதால் நன்மைகள் நிறைவாக உண்டு அதிலும் குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு தனஸ்தானத்தை வழிபடுத்துவதால் குடும்பத்தில் பல்வேறு வகையான சுப நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.
குடும்ப வருமானம் உயரும் மிதுன ராசிக்காரர்களுக்கு பஞ்சமஸ்தானத்தை வலு சேர்ப்பதால் குடும்ப ரீதியாக சந்திக்க கூடிய சொத்துக்கள் ரீதியான பிரச்சனை கட்டுக்குள் வரும்.
லாப ஸ்தானத்தை தனுசு ராசிக்காரர்களுக்கு வலு சேர்ப்பதால் எதிர்பாராத தொழில் ரீதியாக நல்ல முன்னேற்ற வாய்ப்புகளும் உங்களுடைய திட்டங்கள் எளிதில் நிறைவேறுவதற்கான யோகமும் உண்டு.
புதன் பெயர்ச்சியால் நடுநிலையான பலன் பெறும் ராசிகள்:
கடக ராசி மேஷ ராசி மற்றும் கும்ப ராசி இந்த மூன்று ராசிக்காரர்கள் ஒரு நடுநிலையான பலனை பெறுவதற்கான யோகம் இந்த தருணத்தில் உண்டு.
புதன் பெயர்ச்சியால் அதிக கவனம் தேவையான ராசிகள்:
ஜென்மத்தில் துலாம் ராசிக்கும் அஷ்டமத்தில் மீன ராசிக்கும் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களும் விரயத்தில் சஞ்சரைக்கக்கூடிய விருச்சிக ராசிக்காரர்களும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஏனென்றால் எதிர்பாராமல் உணர்ச்சிவசப்பட்டு சில சிக்கல்களில் மாட்டிக்கொள்வதற்கான சூழல் உண்டு என்பதை புதன் பெயர்ச்சியானது உறுதிப்படுத்துகிறது.
புதன் பெயர்ச்சியால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாத ராசிகள்:
ரிஷபம் சிம்மம் மற்றும் மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் சிக்கல் இல்லை தடையாக இருக்கக்கூடிய காரியங்கள் கூட சாதகமாக மாறுவதற்கான சூழலும் உண்டு.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you