ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்வது? ஆடி அமாவாசை விரத வழிபாடு முறையாக செய்வது எப்படி? ஆடி அமாவாசை எப்போது ஆடி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது
ஆடி அமாவாசை பலன்கள்
ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்வது?
ஆடி அமாவாசை விரத வழிபாடு முறையாக செய்வது எப்படி?
ஆடி அமாவாசை எப்போது ஆடி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
அமாவாசை:
அமாவாசை என்பது பிதூர்காரகன் என்று சொல்லக்கூடிய சூரியனும் மாதுர்காரகன் என்ற சொல்ல கூடிய சந்திரனும் இணையும் தருணம் அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
வருடத்தில் 12 அல்லது 13 அமாவாசைகள் வந்தாலும் சூரியன் சந்திரனின் ஆட்சி வீட்டில் இணையும் அம்மாவாசை ஆடி அமாவாசை எனப்படும்.
இந்த அமாவாசையில் சந்திரன் ஆட்சி பலம் பெற்று இருப்பது, மட்டுமல்லாது மொத்தமாக நான்கு கிரக நிலைகள் ஆட்சி பலம் பெற்றிருப்பது. கூடுதல் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சந்திரன் ஆட்சி பலம் பெற்று சூரியனுடன் இணைந்திருக்கிறார் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார்.
மிதுன ராசியில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார் வித்யா காரகரான புதன். தனது சொந்த ராசியான கும்ப ராசியில் ராகுடன் இணைந்து ஆட்சி பலம் பெற்ற அமைப்பில் வளம் பெறுகிறார் சனி. இப்படி மொத்தமாக நான்கு கிரகநிலைகள் ஆட்சி பலம் பெற்றிருப்பது. இந்த ஆடி அமாவாசையின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாது, இந்த அமாவாசை தினமானது ஆயில்யம் நட்சத்திரத்தில் வருகிறது, இந்த ஆயில்யம் நட்சத்திரம் என்பது விஷ்ணு பகவானுக்குரிய நட்சத்திரமாக பார்க்கப்படுகிறது.
பெருமாளின் நட்சத்திரத்தில் வரக்கூடிய இந்த அமாவாசையில் முன்னோர் தர்ப்பணம் சரியான முறையில் மேற்கொள்வது மட்டுமல்லாது, விரத வழிபாட்டை மேற்கொள்வதால் நிறைந்த பலன்களும் அதோடு மட்டுமல்லாது அன்றைய தினத்தில் அன்னதானம் செய்வதும் காக்கைக்கு உணவளிப்பதும் 21 தலைமுறை பித்ரு தோஷம் நீங்கி மகத்தான புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.
மேலும் இந்த அமாவாசையில் கூடுதல் சிறப்பு சேர்க்க கூடிய வகையில் வருடத்தில் பல வாஸ்து நாட்கள் வந்தாலும் மிகப்பெரிய வாஸ்து என்று சொல்லக்கூடிய ஆடி வாஸ்து இந்த அமாவாசை தினத்தில் வருகிறது.
வாஸ்து பகவான் அமாவாசை தினத்தில் கண்வலிக்கும் தருணம் இரட்டிப்பு நன்மை என்று சொல்லக்கூடிய வகையில் புதிதாக மிகப்பெரிய அளவிலான, கட்டிட பணிகள் உள்ளிட்டவற்ற துவங்கலாம் நீங்கள் நினைப்பதை காட்டிலும் வளர்ச்சிகரமாக அமையும் வாஸ்து பகவான் கண்களுக்கும் தருணம் என்பது, வாஸ்து பூஜைகளா மேற்கொள்ளலாம். என்பதால், எவ்விதமான தடையும் இல்லை, அதுமட்டுமல்லாது அம்மாவாசை தினத்தில் மேற்கொள்வதால் ரெட்டிப்பு நன்மை உண்டு.
இப்படி இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த ஆடி அமாவாசை தினம் என்பது, உறுதியாகவே முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வதால் பித்ரு தோஷம் நீங்கி தங்களுடைய வாழ்வில் ஏன் எதற்கு என்று தெரியாத பல சிரமங்கள் விலகும்.
அதோடு மட்டுமல்லாது, சொத்துக்கள் ரீதியான பிரச்சனை விலகும், எதிர்பார்ப்பதை காட்டிலும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் கைகூடும், பெரியளவுல காரிய தடைகள் விலகி, பொருளாதார ரீதியான வளர்ச்சியும் முன்னேற்றமும் நிறைவாக கிடைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும்.
பொதுவாக வருடத்தில் பல அமாவாசைகள் வந்தாலும் மிக முக்கியமான அமாவாசையாக ஆடி அமாவாசை தை அமாவாசை மற்றும் மகாலய அமாவாசை இந்த மூன்று அமாவாசைகளும் பார்க்கப்படுகின்றன.
அதில் ஆடி அமாவாசை பெற்றுருலோகத்தில் இருந்து பித்ருக்கள் பூலோகத்திற்கு வரும் நாளாக பார்க்கப்படுகிறது.
மஹாலயா அமாவாசை அன்று பூலோகத்தில் பித்ருக்கள் வாசம் செய்வார்கள்.
தை அமாவாசை அன்று பூலோகத்தில் இருந்து பித்ருலோகம் புறப்பட்டு செல்வார்கள்.
இப்படி மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மூன்று அமாவாசையில் மிக முக்கியமானதாக இந்த ஆடி அமாவாசை பார்க்கப்படுகிறது.
இந்த அமாவாசை விரத வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்றால்,
அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி எள்ளும் நீரும் இறைத்து, முன்னோரை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும் முன்னோரை நினைத்து வழிபடுவதால் நினைத்த காரியம் வெற்றிகரமாக அமையும்.
அதோடு மட்டுமல்லாது, முன்னோரின் ஆசிர்வாதம் நிறைவாக கிடைக்கும் குறிப்பாக முன்னோர்கள் மறுஜென்மம் எடுத்திருந்தால் பித்ரு தேவதையின் ஆசிர்வாதமும் அருளும் நிறைவாக கிடைக்கும் முன்னோர்கள் மறுஜென்மம் எடுக்கவில்லை, என்றால் அவர்களுடைய ஆசிர்வாதம் நிறைவாக பெறும். அற்புதமான தருணமாக அமையும்.
இந்த தென்புலத்தார் வழிபாடு என்று சொல்லக்கூடிய முன்னோர் வழிபாட்டை மேற்கொண்டதற்கு பிறகு இறை வழிபாடு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம் இந்த வழிபாட்டை நிவர்த்தி செய்வதற்கு முன் உறுதியாகவே காகத்திற்கு உணவளிப்பது, மகத்தான புண்ணியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
தங்களால் இயன்றவரை காகத்திற்கு உணவளியுங்கள் குறைந்தது, ஒரு ரூபாய்க்கு எந்த உணவு பொருள் வாங்க முடியுமா அதை வாங்கி அளிப்பதன், மூலம் 21 தலைமுறை சாபம் நீங்கி குபேர யோகம் கிடைக்கும் தருணமாக இந்த ஆடி அமாவாசை மிகவும் சிறப்பாக அமையப் போகிறது சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அனைவரும்.
அதோடு மட்டுமல்லாது அன்றைய தினத்தில் அன்னதானம் செய்வது இரட்டிப்பு நன்மையை தங்களுடைய வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும்.
அமாவாசை விரத வழிபாட்டை யார் செய்ய வேண்டும்;
1. தாய் தந்தை இல்லாத ஆண்கள் செய்யலாம்
2. தாய், தந்தை இல்லாத பெண்கள் சகோதரர் அல்லது கணவர் இறக்கும் நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளக்கூடாது.
3. கணவர் இல்லாத பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் பெண்களும் இந்த ஆடி அமாவாசை விரத வழிபாட்டை முறையாக இருப்பதன் மூலம் நிறைந்த நன்மை கிடைக்கும்.
இந்த வழிபாட்டை மேற்கொள்ள இயலாதவர்கள் வீட்டிலேயே விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொள்ளலாம் அப்படி செய்வதன் மூலம் நிறைந்த நன்மையும் முன்னேற்றமும் உண்டாகும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you