சூரிய கிரகணம் என்றால் என்ன சந்திர கிரகணம் என்றால் என்ன கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்? சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது?
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சந்திர கிரகணம் என்றால் என்ன?
கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்?
சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது?
பொதுவாக சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்பது சூரியன் மற்றும் சந்திரனை ராகு கேது பழி வாங்கும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
சூரிய கிரகணத்தின் போது சூரியன் வலுவிழக்கம் தருணமாக அமைகிறது சந்திர கிரகணத்தின் போது சந்திரன் வலு விளக்கம் தருணமாக அமைகிறது.
சூரிய கிரகணம்;
சூரிய கிரகணம் என்பது சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் பூமியின் மீது படுவது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கிரகணத்தின் போது சூரியன் உண்மையில் வலுவிழக்கிறாரா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை ஆனால் சூரியனுடைய ஒளி தடையில்லாமல் நாம் வசிக்கும் பூமிக்கு கிடைக்கும், ஆனால் கிரகணம் நடைபெறக்கூடிய நேரத்தில் முழுமையாக கூறிய வழி பூமியை வந்தடையாமல் சந்திரன் தடுத்து விடுகிறார்.
இந்த நிகழ்வின் காரணமாக சந்திரனுடைய நிழல் பூமியின் மீது படுவதோடு சூரியனுடைய ஆற்றல் முழுமையாக பூமிக்கு கிடைக்கவில்லை எனவே, தான் சூரியன் வலு விளக்கம் தருணமாக பார்க்கப்படுகிறது.
சந்திர கிரகணம்:
சந்திர கிரகணத்தின் போது சந்திரன் வலு விளக்கம் தருணமாக அமைகிறது இயற்கையாகவே சந்திரன் சூரிய ஒளியை பெற்று பிரகாசிக்கும் தன்மையை வெளிப்படுத்துவார்.
ஆனால், சந்திர கிரகணத்தின் போது அவர் பிரகாசிக்கும் தன்மையை இழக்கிறார் இதுதான் சந்திர கிரகணம் அதாவது சூரியன் பூமி சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழலானது சந்திரனின் மீது படுவது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
உண்மையில் இங்கு நடைபெற கூடிய நிகழ்வு சூரியனுடைய ஒளி முழுமையாக சந்திரனை சென்றடையாமல் பூமி தடுக்கிறது. இதனால், சூரியன் பிரகாசிக்கும் தன்மையை இழந்து மங்கலாகவோ, கருமையாகவோ அல்லது ஒளிரும் தன்மையை அற்றம் போகிறார் சில நேரங்களில் சிவப்பு நிறத்திலும் தோன்றுகிறார்.இது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த வேலையில் முழுமையாக சந்திரன் தனது ஆற்றலை இழக்கிறார் இந்த இரு நிகழ்வும் நிழல் கிரகமான ராகு கேதுவின் பழிவாங்கல் நிகழ்வாக தான் பார்க்கப்படுகிறது அதற்கு மிக முக்கிய காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
பாற்கடல் அமிர்த பிரச்சனை;
பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து அமிர்தத்தை எடுத்து அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும். என்று விஷ்ணு மோகினி அவதாரத்தில் அதைக் கொடுத்து வருகிறார்.
இதை கவனித்த அசுரர் ஒருவர் தேவர் வடிவம் கொண்டு தேவர் வரிசையில் அமர்ந்து அந்த அமிர்தத்தை பெற்று அருந்துகிறார்.
இதை விஷ்ணுவும் கவனிக்கவில்லை மோகினி அவதாரத்தில் இருந்த சூழலில் அந்த நிலையில் சூரியனும், சந்திரனும் தான் விஷ்ணுவிற்கு இவர் தேவர் இல்லை என்பதை உணர்த்துகிறார். அதை உணர்ந்த விஷ்ணு மோகினி அவதாரத்தில் அந்த அசுரரை தலை ஒருபுறமும் உடல் ஒரு புறமும் சென்று விடும்படி உடலை துண்டித்து விடுகிறார்.
பிறகு அமிர்தத்தை பெற்ற உடலும் தலையும் கடுமையாக தவம் இருந்து இறைவனிடம் மன்றாடி பாம்புவின் தலையையும் பாம்புவின் வால் பகுதியையும் பெற்று உடல் இல்லாத தலைப்பகுதிக்கு பாம்பு பின் உடல் கிடைக்கிறது.
தலையில்லாத பகுதிக்கு பாம்புவின் தலை கிடைக்கிறது இப்படித்தான் பாம்பு கிரகம் என்று நிழல் கிரகமான ராகு கேது உருவாகிறது.
கடுமையாக தவம் இருந்து நவகிரக அந்தஸ்தை பெறுவது மட்டுமல்லாது சுக்கிரனுக்கு இணையான அதீத நன்மையை அள்ளிக் கொடுக்கும் ஆற்றலையும் சந்திரனுக்கு இணையான மதிநுட்பத்தையும் கொடுக்கக் கூடிய ஆற்றல் இருந்தாலும் கூட அவர்கள் வாழ்வில் நடைபெற்ற இந்த நிகழ்வால்
சூரியனையும் சந்திரனையும் அவ்வபோது பழிவாங்கும் நிகழ்வாக தான் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் நடைபெறுகிறது இந்த வேளையில் ராகு மற்றும் கேது பலம் பெறும் இறைவனே பலம் இழப்பார்.
சூரியனும் சந்திரனும் பலம் இழப்பதால் தான் மனிதர்கள் ஆகிய நாமும் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம்.
சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது;
ஒன்று;
வெறும் கண்களால் சூரியனை பார்க்கக்கூடாது சந்திர கிரகணத்தின் போது சந்திரனை பார்க்கலாம் ஆனால் சூரிய கிரகணத்தின் போது சூரியனை பார்க்க கூடாது சூரியனிடமிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
இரண்டு;
கர்ப்பிணிகள் குழந்தைகள் இந்த கிரகணத்தை கூடுதல் கவனத்துடன் அணுக வேண்டும் அதேபோன்ற நோய்வாய் பட்டவர்களும் சற்று கவனத்துடன் இருப்பதே நல்லது.
மூன்று;
உணவு சமைத்தல் காய்கறிகளை வெட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள கூடாது கிரகணம் நடைபெறும் போது இது போன்ற பணிகளை தவிர்ப்பது நல்லது அதேபோன்று உணவு சாப்பிடுதல் நீர் அருந்துதல் போன்றவற்றையும் கிரகணம் நடைபெறக்கூடிய வேளையில் தவிர்ப்பது நல்லது
நான்கு;
அழகை பராமரித்தல் அழகு சார்ந்த பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்ற தவிர்ப்பது நல்லது நகம் வெட்டுதல் முடி வெட்டுதல் பல் துவக்குதல் குளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளக்கூடாது
ஐந்து;
வீடு சுத்தம் செய்தல் வீடு பராமரித்தால் போன்ற பணிகளையும் கிரகணம் நடைபெறக்கூடிய வேளையில் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது
ஆறு;
மிக முக்கியமாக வெளியில் செல்லுதல் வெளியில் சுற்றுதல் போன்ற மற்ற தவிர்க்க வேண்டும் கிரகணத்தினால் ஏற்படும் கதிர்வீச்சு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் கவனத்துடன் இருப்பதை நல்லது
ஏழு;
கூர்மையான ஆயுதங்கள் உபகரணங்களை பயன்படுத்தக்கூடிய பணிகளில் இருப்பவர்கள் கிரகணம் நடைபெறும் போது விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது
எட்டு;
சுப காரியங்கள் சுப காரியத்தை நடத்துவதோ அல்லது துவங்குவதோ சுப காரிய பேச்சு வார்த்தைகள் மேற்கொள்வதோ தவிர்ப்பது நல்லதாக அமையும் ஏனென்றால் கிரகணம் நடைபெறும் போது எதிர்மறையாக அவை அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு
ஒன்பது;
தவிர்க்க முடியாத பயணம் என்றால் கிரகணதோஷத்தை குறைக்க கூடிய வகையில் உடன் தர்ப்பை எடுத்துச் செல்லுங்கள் அதனால் சில பாதிப்புகள் குறையும்
பத்து;
கிரகணம் நடைபெறும் போது தேவையற்ற வாக்குவாதங்களையும் குடும்ப உறுப்பினர்கள் பணிபுரியக்கூடியவர்கள் என யாரிடமும் மேற்கொள்வது தவிர்ப்பது நல்லதாக அமையும் கருத்து மோதல் பெரும் பிரச்சனையில் உருவாக்கலாம் எனவே கவனத்துடன் இருப்பது நல்லது
கிரகணத்தின்போது என்ன செய்ய வேண்டும்:
உறுதியாகவே சூரிய கிரகணம் நடைபெறும் போது இறைவனும் வலுவளப்பதால் ஆலயங்கள் பூட்டப்பட்டு இருக்கும் எனவே அந்த வேலையில் வீட்டில் இருப்பது சால சிறந்தது வீட்டில் இருந்து அமைதியாக தியானம் செய்யலாம் உங்களது இஷ்ட தெய்வம், குலதெய்வத்தை நோக்கி மன்றாடலாம். அதனால், நிறைந்த நன்மை கிடைக்கும்.
பல சிக்கல்கள் உங்களது வாழ்வில் விளக்கம் நேர்மறையான எண்ணத்துடன் பல நிகழ்வுகளை சிந்தித்துக் கொண்டிருப்பது சிறப்பாக அமையும் கிரகணம் நடைபெறக்கூடிய வேளையில் அது மட்டுமில்லாமல் கிரகணம் நடைபெறும் போது கிரகண தோஷத்தை குறைக்கும் தர்ப்பையை மற்றும் துளசி உடன் வைத்திருந்தால் சில பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும் எதிர்பார்ப்பதை காட்டிலும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
கிரகணம் முடிந்ததற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்;
சூரிய கிரகணம் முடிந்ததற்கு பிறகு உறுதியாகவே குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்துவிட்டு வீட்டில் இருக்கக்கூடிய தண்ணீரை எடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து வீடு முழுவதும் தெளிப்பதால் கிரகண தோஷங்களும் பாதிப்புகளும் விலகும்.
இப்படி வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து எளிய பரிகாரம் மேற்கொண்டால் கிரகணதோஷ பாதிப்புகள் விலகுவதோடு கிரகணத்திற்கு பிறகு வாழ்க்கை சுபிட்சமாகவும் நிறைந்த நன்மை கிடைப்பதற்கான சந்தர்ப்பமும் உங்களைத் தேடி வரும். இதுபோன்று சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தின்போது சற்று கவனத்துடன் இருப்பதே நல்லதாக அமையும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you