மகாளய அமாவாசை என்றால் என்ன மகாளய அமாவாசை வழிபாடு என்ன மஹாளய வழிபாட்டின் பலன் என்ன

மகாளய அமாவாசை என்றால் என்ன?

மகாளய அமாவாசை வழிபாடு என்ன?

 மஹாளய வழிபாட்டின் பலன் என்ன?

முன்னோர் சாபம் பித்ரு தோஷம்;

 அம்மாவாசை தினத்தில் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வதால் முன்னோர் சாபம் பித்ரு தோஷம் என்ற சொல்லக்கூடிய இந்த தோஷமானது நீங்கும்.
 உண்மையில் நமது முன்னோர்கள் நமக்கு சாபம் கொடுப்பார்களா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை நமது முன்னோர்கள் எப்படி நாம் நல்லா இருக்கக் கூடாது என்று சபிப்பார்கள் அது ஒருபோதும் இல்லை.
அப்படி இருக்க எப்படி பித்ரு தோஷம் ஏற்படுகிறது என்று கேட்டால் உறுதியாகவே முன்னோர்களின் வருத்தம் என்ற சொல்லலாம் முன்னோர்கள் நாம் இப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் நாம் அதை செய்வத தவறி விடுகிறோம் எனவே அவர்கள் வருத்தமானது வித்ரு தோஷமாக அமைகிறது 

மஹாளய அமாவாசை:

மஹாளய அமாவாசை என்பது முன்னோர்கள் என்று சொல்லக்கூடிய பித்ரு கலை நினைத்து வழிபாடு செய்யும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

வருடத்தில் 365 நாட்கள் இருந்தாலும் 96 தடவை பித்ருக்கள் வழிபாடு செய்ய வேண்டும் அப்படி செய்ய முடியவில்லை என்றாலும் குறைந்தது சூரியனும், சந்திரனும் இணையும் அமாவாசை தினங்களில் ஆவது இந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

அதுவும் முடியவில்லை என்றால் ஆடி புரட்டாசி மற்றும் தை ஆகிய மூன்று அமாவாசை தினத்தில் ஆவது நிச்சயமாக முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் ஏனென்றால் ஆடி அமாவாசையில் பித்ருக்கள் பூலோகத்தை நோக்கி வருகிறார்கள்.

 புரட்டாசி அமாவாசையில் பித்ருக்கள் பூலோகத்தில் இருக்கிறார்கள் மீண்டும் தை அமாவாசையில் பித்ருக்கள், பித்ருலோகத்தை அடைகிறார்கள் பூலோகத்தில் இருந்து பித்ருலோகத்திற்கு பித்ருக்கள் செல்லக்கூடிய வேலையில் அவர்களுக்கு ஒளி கிடைப்பதற்காக தான் தீபாவளி கார்த்திகை உள்ளிட்ட பல ஒளித்திர நாட்கள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

 இப்படி மிக முக்கிய இந்த மூன்று நாட்களில் ஆவது முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் அப்படியும் முடியவில்லை என்றால் மறந்தவனுக்கு மாகாலயம் என்ற சொல்வார்கள்.

 அந்த வகையில் மஹாளய அமாவாசை தினத்தில் ஆவது உறுதியாக முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும் இந்த முன்னோர் வழிபாடு தென்புலத்தார் வழிபாடு என்று அழைக்கப்படுகிறது தென்புலத்தார் வழிபாட்டிற்கு பிறகு தான் இறைவழிபாடு என்ற சொல்லப்பட்டதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

மற்ற மதங்களில் முன்னோர் வழிபாடு; 

இந்து முறைப்படி மட்டும் தான் இந்த முன்னோர் வழிபாடு செய்யப்படுகிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை உலகில் உள்ள அனைத்து மதத்தினரும் அவரவர் மத முறை படியும் சடங்குகள் படியும் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.

 கிறிஸ்தவ முறைப்படி கல்லறை திருநாள் என்ற ஒரு நாளில் முன்னோர்களுக்கு சிறப்பு விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் மேற்கொள்கிறார்கள் அன்றைய தினத்தில் விரதம் இருந்து அன்னதானம் உள்ளிட்ட பல நற்காரியங்களையும் மேற்கொள்கிறார்கள்.

இப்படி உலகில் உள்ள அனைத்து மதத்தினரும் இந்த முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வது கூடுதல் சிறப்பு வாய்ந்த ஒன்று.

மகாலய வழிபாடும் புராணமும்; 

இந்த மகாலய அமாவாசை வழிபாடு பகவத் கீதை கருட புராணம் மகாபாரதம் உள்ளிட்ட பல புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது மாகாளயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து குலதெய்வ வழிபாட்டை பல புராணங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கருட புராணத்தில் மஹாலய பட்சத்தின் போது தர்ப்பணம் கொடுத்தல் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்ற சொல்லப்பட்டிருக்கிறது இப்படி பல புராணங்களிலும் இந்த மகாலய அமாவாசையில் முக்கியத்துவமானது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பித்ரு பூஜை பலன்; 

முன்னோர் வழிபாடு செய்வதில் சிறு சந்தேகம் வரலாம் ஏனென்றால் நாம் பித்ருபூஜை என்ற சொல்ல கூடிய முன்னோர் வழிபாட்டை செய்யக் கூடிய வேளையில் ஒருவேளை நமது முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தால் இந்த பூஜை வீணாகி விடவா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.

ஏனென்றால் 21 தலைமுறை மறுஜென்மம் எடுத்திருந்தாலும் கூட வித்ருலகத்தின் தேவதை இந்த வழிபாட்டை முழுமையாக ஏற்றுக் கொண்டு நிறைந்த ஆசீர்வாதத்தை கொடுப்பார் எனவே உறுதியாகவே அமாவாசை விரத வழிபாடு என்றைக்கும் வீண் போகாது.

யார் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் செய்யக்கூடாது; 

தாய் தந்தை இல்லாத ஆண்கள் கட்டாயம் செய்ய வேண்டும் 

தாய் தந்தை இல்லாத பெண்கள் சகோதரர் இருக்கும் பட்சத்தில் செய்யக்கூடாது 

திருமணம் ஆகாத பெண்கள் சகோதரர் இல்லையென்றால் வழிபாட்டை மேற்கொள்ளலாம் 

திருமணம் ஆகிய பெண்கள் கணவர் இறக்கும்போது இந்த வழிபாட்டை நிச்சயமாக மேற்கொள்ளக்கூடாது 

இந்த தினத்தன்று விரதம் இருக்கலாம் தங்களால் இயன்ற நற்காரியங்களா செய்யலாம் அதனால் நன்மை உங்களைத் தேடி வரும்.

கார்ணீக பித்ரு தோஷம்; 

மற்ற அமாவாசைகளை காட்டிலும் இந்த அமாவாசையில் கூடுதல் சிறப்ப உண்டு மகாலயத்தின் போது காரணிக பித்ருக்கள் என்று சொல்லக்கூடிய பெரியப்பா, சித்தப்பா மாமன், மைத்துனர், அண்ணன், தம்பி அக்காள், தங்கை, உங்களது நலம் விரும்புகள் உங்களது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என யாரும் இல்லாதவர்களுக்கு இந்த தினத்தில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதோடு நிறைந்த நன்மை உங்களுடைய வாழ்வில் அற்புதமாக கிடைக்கும் .

தர்ப்பணம் செய்யும் முறை; 

அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து நீர் நிலைக்கு சென்று நீராடி எல்லாம் நீரும் இரைத்து முன்னுரை மனதார வழிபாடு செய்ய வேண்டும் அப்படி வழிபாடு செய்வதால் அவர்களுடைய வருத்தம் நீங்கி மிக சிறப்பான வளர்ச்சி உறுதியாகவே உங்களுடைய வாழ்வில் அற்புதமாக கைவிடும்.

பரிகாரம்; 

ஐந்து ரூபாய் பிஸ்கட்டை வாங்கி விரதத்தை நிவர்த்தி செய்வதற்கு முன் நிச்சயமாக காகத்திற்கு கொடுக்கவும் காகத்திற்கு உணவளிப்பது நல்லது.

உணவளிக்க முடியவில்லை என்றால் ஐந்து ரூபாய்க்கு ஏதேனும் உணவு வாங்கிக் கொடுத்தால் 51 தலைமுறை சாபம் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும்.

 காய்கறிகள் அரிசி பருப்பு போன்றவற்றை தானமாக கொடுக்கலாம் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது மகத்தான புண்ணியத்தை பெற்று தரும்.

 அன்றைய தினத்தில் அன்னதானம் கொடுக்கும் போது ஐந்து ரூபாய்க்கு எல் மிட்டாய் வாங்கி சேர்த்துக் கொடுப்பது பல மடங்கு வளர்ச்சியை உங்களுடைய வாழ்வில் கொடுக்கும்.

மஹாளய அமாவாசை பலன்கள்;

 மகாலய அமாவாசை விரத வழிபாட்டை மேற்கொள்வதால் பயம் நீங்கும், எதிரிகள் அற்ற வாழ்க்கை கிடைக்கும், திருமண தடை நீங்கும், செல்வம் பெயர் புகழ் அதிகரிக்கும் அறிவாற்றல் அதிகரிக்கும், திருமண தடை நீங்கி சிறப்பாக குடும்பம் வலுப்பெறும் உங்களது தனித்திறமை மேம்படும், ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும் உடல்நல ஆரோக்கியம், நல்ல வேலை நல்ல தொழில் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும், எதிர்கால சந்ததியினரும் மகிழ்ச்சியாக வாழ வழி கிடைக்கும்.

அமாவாசை விரத வழிபாடு இல்லை புண்ணிய காரியங்களை செய்கிறேன் பலன்; 

என்னால் அமாவாசை விரத வழிபாட்டை மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் நான் இயன்றவரை அன்னதானம் உள்ளிட்ட பல புண்ணிய காரியங்களை செய்து வருகிறேன்.

 அதனால் பலன் கிடைக்குமா என்று கேட்டால் நிச்சயமாக பலன் கிடைக்கும் ஆனால் பித்ருக்களின் வருத்தம் நீங்குமா என்றால் நீங்காது எனவே நிச்சயமாக இந்த மகாலய வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

மகாபாரதத்தில் மஹாளயம்; 

நாம் அனைவருக்குமே கர்ணனை தெரியும் கர்ணன் கொடுப்பதில் கொடை வள்ளல் என்று அழைக்கப்படுகிறார் தனது வாழ்நாள் முழுவதும் தனக்கு கிடைத்த அனைத்தையும் மற்றவர்களுக்கு தானதர்மமாக கொடுக்கிறார்.

 அப்படிப்பட்டவர் மகாபாரத போரில் இறந்ததற்கு பிறகு சொர்க்கம் செல்கிறார் சொர்க்கம் சென்றாலும் அவருக்கு அங்கு தீராத பசி ஏற்படுகிறது அதற்கு காரணம் அவருடைய வாழ்வில் பல தானங்களை செய்தாலும் அன்னதானம் செய்யவில்லை அதை மட்டும் அல்லாது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவில்லை என்பது தெரிய வருகிறது.

 உடனே 15 நாட்கள் பூமியில் வாழ்வதற்கு வரம் வாங்கி பூலோகத்திற்கு வந்து 15 நாட்களும் முன்னோர் வழிபாடு செய்து அன்னதானத்தை முழுமையாக கொடுக்கிறார்.

 அப்படி கர்ணன் பூமிக்கு வந்து வழிபாடு செய்த இந்த 15 நாட்கள் தான் மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது எனவே இந்த 15 நாட்களில் முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு அப்படி முடியவில்லை என்றாலும் மகாலய தினத்தில் மட்டுமாவது செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?