மகாசிவராத்திரி என்றால் என்ன? மகாசிவராத்திரி வழிபாடு ஏன் செய்ய வேண்டும்? மகா சிவராத்திரி 2026 பலன் maha sivaraththiri palan tamil

மகாசிவராத்திரி வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?
மகாசிவராத்திரி என்றால் என்ன?
மகா சிவராத்திரி 2026 பலன் 
maha sivaraththiri palan tamil 


அனைவருக்கும் வணக்கம்.


ஒரு ஜாம பூஜையை மட்டும் தவறவிடாதீர்கள் என்ற வகையில் என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் ஏற்பட இருக்கு கிரக நிலைகளின் ரீதியாக அமைய இருக்கும் சாதகங்கள் என்ன பாதகங்கள் என்ன மேலும் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் எல்லாம் உங்களுடைய வாழ்வில் ஏற்பட இருக்கு என்பது குறித்தான முழுமையான பதிவைதான் இந்த வீடியோல நம்ம விரிவா பார்க்க போறோம் போகிறோம்.

 நேயர்களான உங்களுக்கு புண்ணியங்கள் தரும் சிவராத்திரியாக இந்த மகாசிவராத்திரி அமைகிறது சிவபெருமானுக்குரிய முக்கிய விரத வழிபாடுகளில் ஒன்றாக இந்த மகா சிவராத்திரி அமைகிறதுங்க இந்த மகாசிவராத்திரியில் சிவனை வழிபட்டால் பலவிதமான துன்பங்களில்ிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை அன்றைய தினம் சிவ பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழுத்து இருந்து சிவநாமத்தை உச்சரித்தபடி சிவனை வழிபடுவார்கள் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி தினம் வந்தந்தாலும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்தசி நாளையே மகாசிவராத்திரி என்று போற்றி வணங்குகிறோம். மகாசிவராத்திரி பற்றி பல புராண தகவல்கள் உள்ளன.

 அவற்றை என்ன என்று பார்க்கும்போது பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டன. இதை எடுத்து அன்றைய இரவு பொழுதில் பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிகளின் படி அர்ச்சனை செய்தார். ஆண் அம்பிகை இவ்வாறு சூரிய அஸ்தமன நேரம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை பூஜை செய்த காலமே மகாசிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது இந்த பூஜையில் முடிவில் பார்வதிக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார்.

 அவரிடம் சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தால் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று பார்வதி தேவி வேண்டினார் சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்தார் ஒரு சமயம் மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் இருவரில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டபோது சிவபெருமான் அடிமுடி காண முடியாத ஜோதிபளமாக உயர்ந்து நின்றார்.

 அதில் ஈசனின் முடியையோ அடியையோ காண்பவர்களை பெரியவர் என்று சொல்லப்பட்டது. இதை எடுத்து பிரம்மதேவன் அன்னப்பறவை உருவம் கொண்டு முடியை தேடியும் மகாவிஷ்ணு வராக உருவம் கொண்டு பாதாளத்தை தோண்டியபடி ஈசனின் அடியை தேடியும் புறப்பட்டனர். இந்த கோலத்தையே லிங்கோத்பவர் கோலம் என்பார்கள். மகாசிவராத்திரி நாளில் தான் இந்த திருக்காட்சி காண கிடைத்தது என்கிறார்கள். அதேபோல் கிருதயுகத்தில் துர்வாச முனிவர் தனக்கு மகாலட்சுமி அளித்த மாலையை இந்திரனுக்கு கொடுத்தார். அதை இந்திரன் தன் வாகனமான ஐராவதத்தை வாங்கச் சொல்ல யானையோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி காலில் போட்டு மிதித்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் இந்திரன் தன் செல்வத்தை இழந்து போவான் என்று சபித்தார். 

 செல்வத்தை இழந்த இந்திரன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டு இழந்த செல்வத்தை பெற முயற்சித்தான். அதன்படி இந்திரன் பூஜித்த காலமே இந்த மகாசிவராத்திரியும் என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேவர்கள் அமிர்தம் வேண்டி மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிராகவும் கொண்டு பார்கடலை கடைய முற்பட்டனர் ஆனால் தேவர்களால் பார்கடலை கடைய முடியவில்லை எனவே துணைக்கு அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் தேவர்களும் சேர்ந்து திருப்பார்கடலை கடைந்தபோது ஆலகாலம் என்ற கொடிய விஷம் வெளிபட்டது.

 அதன் சக்தியால் அனைத்து உயிர்களும் வெப்பத்தில் துன்பப்பட்டன இதை கண்டு பார்வதி தேவி பரமேஸ்வரனிடம் முறையிட்டார் உடனே பரமேஸ்வரன் அந்த ஆளகால விஷத்தை எடுத்து உண்டார் இதனால் மயங்கி சரிவது போல் இருந்த நீலகண்டரை கண்ட தேவர்கள் பயந்து சுவாமி தாங்கள் கண் விழித்து எங்களை காக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர் அவ்வாறு தேவர்கள் சிவபெருமானை பூஜித்த காலமே மகாசிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது அதேபோல முன்பொரு சமயம் வேடன் ஒருவன் காட்டில் வேட்டையாடி தன் குடும்பத்தை காப்பாற்ற காற்றி வந்தான். ஒருமுறை காட்டில் வேட்டையாடவன் சென்றபோது வேடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

 எனவே விலங்குகளை தேடி நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றான். அவ்வேளையில் வேடனை தாக்க ஒரு புலி பாய்ந்து வந்தது. இதனால் பதறி போன வேடன் அருகிலிருந்து மரத்தின் மேல் ஏறி அமர்ந்தான். இரவு முழுவதும் புலி அந்த மரத்தை சுற்றி வந்தது. வேடன் எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் அந்த மரத்தின் கிளைகளை பற்றியபடியே இருந்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் வேடன் வீடு திரும்பினான் பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த வேடன் வயது முதிர்ச்சியால் இறந்தான் அந்த வேடனின் ஆன்மா எமலோகம் சென்றது பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாவக் கணக்கில் எதுவும் இல்லை என்று சித்திரகுப்தன் சொன்னது எமதர்மனுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது.

 வேடன் செய்த புண்ணியம் என்ன என்று பார்க்க முன்பு புலிக்கு பயந்து வேடன் ஏறி அமர்ந்து வில்வ மரமாகும். அன்றைய தினம் மகாசிவராத்திரி. பயத்தில் கைகள் நடுங்க கிளைகளை பற்று இருந்ததால் அந்த நடுக்கத்தில் வில்வ இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தன. வில்வ விளைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது. மகாசிவராத்திரி அன்று சாப்பிடாமல் வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது என்பது என்பதை எமதர்மனும் சித்திரகுப்தனும் அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களும் பாவங்களுடன் தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம்.

 சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். வருடம் முழுவதும் விரதம் மேற்கொள்வது 100 அஸ்வமேத யாகம் செய்வது பலமுறை. கங்கையில் நேராடுவது ஆகியவை கூட ஒரு சிவராத்திரி விரதத்திற்கு ஈடாகாது. சிவராத்திரிக்கு முன்ினம் ஒரு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி சூரிய உதயத்தின் போது வீட்டில் பூஜை செய்ய வேண்டும்.

 அதன்பின் சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் அலங்காரங்களை கண்டுகளிக்க வேண்டும். அப்போது இறைவனின் திருநாமத்தை தவிர வேறு எதையும் உச்சரிக்க கூடாது இரவு முழுவதும் கண் விழித்திருக்க வேண்டும். ஆலயத்திற்கு சென்றுதான் கண் விழித்திருக்க வேண்டும் என்று கிடையாது. வீட்டிலும் கூட மகாசிவராத்திரி அன்று நான்கு ஜாமங்களிலும் முறைப்படி பூஜை செய்து ஈசனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது உரிய பலனை தரும்.

 மகாசிவராத்திரி விரதம் தருபவர்கள் ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை 108 முறை அல்லது 1008 முறை உச்சரித்து பூஜிக்க வேண்டும். நான்கு ஜாம பூஜைகளையும் முடிந்த பிறகு மறுநாள் காலையில் நீராடி இறைவனுக்கு படைத்த நெய்வேத்தியங்களை தானம் அளித்ததும் விரதம் இருப்பவர்கள் உண்டும் விரதத்தை முடிக்க வேண்டும்.

 தொடர்ச்சியாக 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவகதி அடைவார்கள் என்பது ஐதீகம். அத்துடன் அவர்களின் 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தி அடைவார்கள்.

 பல புண்ணியங்கள் செய்த பலன் கிடைக்கும் என்கின்றது புராணங்கள். அந்த வகையில் கன்னிராசிநேயர்களான நீங்கள் இந்த மகாசிவராத்திரியான இன்று சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து மனதார சிவபெருமானை நீங்கள் வழிபடுவதன் மூலமாக எண்ணற்ற நன்மைகள் நிச்சயம் உங்களுடைய வாழ்வில் ஏற்படும் என்பத கிரகங்களுடைய சஞ்சார நிலைகள் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துக்காட்டுது உங்களுடைய வாழ்வில் ஏற்படும் என்பத கிரகங்களுடைய சஞ்சார நிலைகள் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துக்காட்டு பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?