குரு பெயர்ச்சி 2024 எப்போது? குரு பெயர்ச்சி யாருக்கு சாதகம்?

 


குரு பெயர்ச்சி 2024 எப்போது? குரு பெயர்ச்சி யாருக்கு சாதகம்?

குரு பெயர்ச்சி 2024 முதல் 2025 வரை

மே மாதம் ஒன்றாம் தேதி தமிழில் சித்திரை 18 ஆம் தேதி குரு பகவான் தனது நட்பு கிரகமான செவ்வாயின் ஆட்சி வீடான மேஷ ராசியில் இருந்து தனது பகை கிரகமான சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷப ராசிக்கு மாறி ஒரு வருட காலம் அங்கு சஞ்சரிக்கப் போகிறார்.

பொதுவாக குருவுக்கு வக்கிரம் மற்றும் அதிசார பாதிப்புகள் இல்லை என்றாலும் சூரியன் குரு இருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு வந்ததிலிருந்து ஒன்பதாம் இடத்திற்கு செல்லும் வரை குரு வக்ர பெயர்ச்சி காலகட்டமாக பார்க்கப்படுகிறது.

எனவே குரு வக்ரத்தில் இருப்பதைவிட அதற்கு முன்னதாக முதல் ஐந்து மாதங்களில் வலுவாக பல மாறுதல்களை ஏற்படுத்திக் கொடுப்பார். வக்ரகதிகள் சஞ்சரிக்கும் போது சற்று நிதானமான பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. 

ஒன்பது மாதத்திற்கு பிறகு மீண்டும் வலுப்பெறக்கூடிய குரு மூன்று மாதங்கள் மிக வலவாக சஞ்சரித்து நல்ல பலன்களையும் முன்னேற்றங்களையும் அந்த இடத்திற்கான மாறுதலையும் பெற்றுத் தருவார்.


அதற்க்கு பிறகு அடுத்த இடத்திற்கு தன்னுடைய சஞ்சார நிலையை பூர்த்தி செய்து மாறுவார்.

இப்படி குருவினுடைய மாறுதல் இருக்க சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷப ராசியில் அமருவதால் எந்த ராசிக்காரர்களுக்கு எப்பேற்பட்ட மாறுதல்கள் கிடைக்க போகிறது என்பதை பார்க்கலாம். 


பொதுவாக முழு சுப கிரகமாக இருக்கக்கூடிய குரு 2, 4, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய இடங்களில் அமோகமான வளர்ச்சியை அள்ளிக் கொடுப்பார். 

அந்த வகையில் மேஷம், கும்பம், மகரம், விருச்சகம், கன்னி மற்றும் கடகம் ஆகிய ராசிகளுக்கு அமோகமான வெற்றி வாய்ப்பும் எதிர்பாராத பொருளாதார ரீதியான முன்னேற்றமும் நிறைந்து கிடைக்கக்கூடிய யோகம் உண்டு.

மேஷ ராசிக்கு:

தன குருவால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சியும், பொருளாதார ரீதியான முன்னேற்றமும் உண்டு. 

கும்ப ராசிக்கு:

சுபஸ்தான குருவால் கும்ப ராசிக்காரர்களுக்கு பல்வேறு வகையான சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறக்கூடிய யோகம் உண்டு. 

மகர ராசிக்கு:

பூர்வ புண்ணிய குருவால் பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனை விலகும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும், புதிய ஆசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. 

விருச்சிக ராசிக்கு: 

சப்தம குருவால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் காதல் திருமணம் திருமண வைபோகம் மங்களகரமான நிகழ்வுகள் உண்டு தொழில் உத்தியோகத்தில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசிக்கு:

பாக்கிய குருவால் அனைத்திலும் வெற்றி கொண்டு இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகி முன்னேற்றம் நிறைந்த ஒரு தருணமாக அமைகிறது. உச்சபட்ச நன்மையும் வளர்ச்சியும் நிறைந்து கிடைக்கும் யோகம் கன்னி ராசிக்கு உண்டு.

கடக ராசிக்கு: 

அஷ்டம சனியின் பாதிப்புகள் விலகும் லாபகுருவால் தொழில் உத்தியோகத்தில் மிகச் சிறந்த மாறுதல் உண்டு. பொருளாதார ரீதியான சிக்கல்கள் விலகும் உறவுகளுக்கு இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கி உறவு பலப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?