மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி எப்போது? குரு பெயர்ச்சி 2024 மேஷ ராசிக்கு எப்படி இருக்கும் மேஷ ராசிக்கு என்ன பலன்?

மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி எப்போது? குரு பெயர்ச்சி 2024 மேஷ ராசிக்கு எப்படி இருக்கும் மேஷ ராசிக்கு என்ன பலன்?

மேஷ ராசிக்கு குரு எழுதிய தலைவிதி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 முதல் 2025

குரு பெயர்ச்சி 2024 மே 1 முதல் குரு ஜென்ம ராசியை விட்டு மேஷ ராசிக்கு விளக்குகிறார். இது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது, ஏனென்றால் பொதுவாகவே ஒரு கிரகம் ஜென்மத்தில் அமருவதை விட ஜென்மத்தை விட்டு விலகுவது நல்ல பலனை கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பாக நிச்சயமாக பார்க்கப்படுகிறது,

அதிலும் முழு சுப கிரகமான குரு இரண்டாம் இடம் ஆகிய தன குடும்ப மற்றும் வாக்கு ஸ்தானமாகிய இரண்டாம் இடத்திற்கு வருவது நிச்சயம்.

சிறப்பான முன்னேற்றமும், வளர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பாக உள்ளது.

குடும்பம் உத்தியோகம் தொழில் அரசியல் கலைத்துறை மாணவ மாணவியர் பெண்மணிகள் விவசாயத் துறையினர் என அனைவருக்கும் எப்பேர்பட்ட மாறுதல்கள் ஏற்படுகிறது.

குடும்பம்;

குடும்ப ஸ்தானத்தில் குரு வலுவாக அமர்வது குடும்பத்தில் எல்லா கூடிய பல்வேறு விதமான சுப தடைகள் விலகுகின்றது. எதிர்பாக்குற படி நல்ல வரன் கிடைத்து மங்கல பாக்கியம் உண்டு காதல் திருமணம் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் புத்திர பாக்கியம் நிறைந்த கிடைக்கும்.

     

     தனஸ்தானம் வலுவடைவதால் கடன் சார்ந்த தொல்லைகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகள் அகலும் சொத்துக்கள் ரீதியான பிரச்சினை விலகுவதோடு, புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் ஏற்படக்கூடிய வீண்பாக்குவாதங்கள் கருத்து வேறுபாடுகள் மறைந்து, குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். 

உத்தியோகம்;

உத்தியோக ரீதியான பணிகளில் குரு தனஸ்தானத்திற்கு வந்திருப்பதால் நிரந்தர வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான யோகம் உண்டு. உத்தியோகரீதியாக எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல நன்மைகள் தசா புத்திகள் வலுவாக இருப்பின் கிடைப்பதற்கான யோகம் நிச்சயம் உண்டு. பணி சார்ந்த சூழ்நிலைகளில் உள்ள சிரமங்கள் விலகி சக பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் உடன் ஒரு ஒற்றுமை பல படக்கூடிய தருணமாக அமைகிறது.

தொழில், வியாபாரம்;

தொழில் துறை வியாபார துறையில் தன குருவால் புதிய வாய்ப்புகள் நிறைந்த கிடைக்கும் தனஸ்தானம் வழிபடுவதால் கொடுக்கல் வாங்கல் ரீதியான சிக்கல்கள் விலகும் கடன் தொல்லை விலகும். மூலதனம் முதலீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்பு கிட்டும் ஒன்றிய, மாநில அரசின் சலுகைகள் கிடைக்கும். 

கலைத்துறை;

கலைத்துறையின் நாயகனாக உள்ள சுக்கிரனின் ஆட்சி வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் கலைத்துறையில் பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்படுவதற்கான யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு உண்டு. தனஸ்தானம் பலப்படுவதால் புதிய வாய்ப்புகள் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கக்கூடிய வகையில் அமையும். 

   உங்களது சொந்த தயாரிப்பில் எடுக்கக்கூடிய முயற்சிகள் மிகப்பெரிய அளவுல மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. லாபம் அதிகரிக்கும், புகழ்பெற்ற கலைத்துறை ரீதியான நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பணியாற்றக் கூடிய வாய்ப்பு உண்டு. 

அரசியல்;

அரசியல் சார்ந்த பணிகளில் எதிர்பார்க்கக் கூடிய வெற்றி வாய்ப்புடன் துவங்கும் தருணமாக முன்னேற்றத்தை பெறக்கூடிய ஒரு குரு பெயர்ச்சியாக மேஷ ராசிக்காரர்களுக்கு உள்ளது. தனக்குரு பெயர்ச்சி மக்கள் மத்தியில் செல்வாக்கும் கட்சியில் அங்கீகாரமும் கிடைக்கும். எதிர்பார்க்கக்கூடிய புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடிய தருணம் கட்சியில் ஏற்பட்ட மறைமுக தொல்லைகள் விலகி ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலை கட்சி சார்ந்த பணிகளில் கிடைப்பதற்கான யோகம் உண்டு. 

மாணவ, மாணவியருக்கு;

கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு, அதிக மதிப்பனுடன் தேர்ச்சியும் எதிர்பார்க்கக் கூடிய உயர்கல்வையும் மிகச் சிறப்பாக அமையும். எதிர்பார்க்கக் கூடிய கல்வி உதவித் தொகையும் இந்த தருணத்தில் கிட்டும். கவன சிதறலுக்கு வழிவகை செய்தாலும் கூட மனதை ஒருநிலைப்படுத்தி படித்து ஞாபக சக்தி அதிகரிக்கும் தருணமாக மாறுகிறது. 

விவசாயம்;

விவசாயத் துறையின் அதிபதியான செவ்வாய் குருவிற்கு நட்பு கிரகம் அவர் தனஸ்தானத்தில் நுழைந்திருப்பதால் புதிய நிலம், பண்ணை நிலம் அமைத்தல் யோகம் உண்டு. தனஸ்தானம் வலுப்பெறுவதால் அலைச்சல் குறையும் விளைச்சலும், வருமானமும் இரட்டிப்பாகும் யோகம் உண்டு. மேஷ ராசிக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும். 

    புதிதாக விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும், நவீன இயந்திரங்கள் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு வாங்குவதற்கான யோகமும் மேஷ ராசிக்கு உண்டு.

பெண்மணிகளுக்கு;

பெண்மணிகளின் நலனுக்கு பொறுப்பேற்ற குரு தனஸ்தானம் குடும்ப ஸ்தானம் வாக்கு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ரெண்டிற்கு வருவது பெண்மணிகள் சந்தித்து வரக்கூடிய தடைகள் தொல்லைகள் விலகும் தருணம் என்பதை குரு உறுதிப்படுத்தகிறார். மங்களகரமான பல சுப நிகழ்வுகளும் புத்திர பாக்கியம் கிடைக்கும் தருணமாகவும் அமைந்துள்ளது. 

     மேஷ ராசிக்கார பெண்மணிகளுக்கு வாக்கு ஸ்தானம் வலுவடைந்து இருக்கக்கூடிய இந்த தருணத்தில் பெண்மணிகள் மிக சிறந்த முறையில உங்களுடைய கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்கக்கூடிய ஆற்றல் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த தொல்லைகள் விலகி, முன்னேற்றம் வாழ்வில் நிறைந்து கிடைக்கும் சுபிட்சத்தை தனகுரு ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

பரிகாரம்;

வாரத்தில் வியாழக்கிழமை விரதம் இருந்து அருகாமையில் உள்ள குரு பகவான் அல்லது நவகிரக சன்னதி சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய தடைகள் விலகி சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்து கிடைக்கும் தன குருவால்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?