ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்போது? குரு பெயர்ச்சி 2024 மேஷ ராசிக்கு எப்படி இருக்கும் ரிஷப ராசிக்கு என்ன பலன்?

ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்போது? குரு பெயர்ச்சி 2024 மேஷ ராசிக்கு எப்படி இருக்கும் ரிஷப ராசிக்கு என்ன பலன்? ரிஷப ராசிக்கு குரு எழுதிய தலைவிதி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 முதல் 2025.

ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி 2024 

ரிஷப ராசிக்கு சூறாவளி போல் சிதறிய வாழ்க்கையில் குரு பெயர்ச்சி 2024 சக்கபோடு போடும் நேரமாக ஜென்ம குருவால் எந்த விஷயங்கள் அமையப்போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம் இந்த பதிவில்.

பொதுவாக ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசிக்கு மிகவும் சகாயமானவராக பார்க்க முடியாது குரு எனவே அவர் ஜென்ம ராசிகள் அமருவது சற்று வரவேற்கத்தக்க நிகழ்வாக பார்க்க முடியாது. இருந்தாலும் குருவின் சுப பார்வையால் சில சிரமங்கள், விலகி நல்ல மாறுதல் கிடைப்பதற்கான யோகம் நிச்சயமாக உண்டு. 

பொதுவாக குரு ஜென்மத்தில் அமரும்போது நல்ல பலன்கள் நன்மைகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. ஏனென்றால் ராமர் வனவாசம் செல்லும்போது குரு ஜென்மத்தில் அமர்ந்து இருக்கும் போது தான் இந்த நிகழ்வானது ஏற்பட்டது. தெய்வங்களுக்கு பல சிரமங்கள் ஏற்படக்கூடிய வேலைகள் சாதாரண மனிதர்களுக்கு சில சிரமங்கள் ஆட்கொள்வதற்கான சூழலை உண்டு இருப்பினும் ரிஷப ராசிக்காரர்களுக்கு மற்ற கிரக நிலைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது சனி கர்ம ஸ்தானமாகிய பத்தாம் இடத்திலும் ராகு லாப ஸ்தானமாகிய 11லும் பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய ஐந்தில் கேதுவும் இருப்பது நிச்சயமாக பல சிரமங்கள் விலகக் கூடிய அமைப்பு நிச்சயமாக உண்டு.

எனவேதான் சூறாவளி போல் சிதறியவாள் கயல் சக்க போடு போடும் நேரமாக மாறுவதற்கான யோகம் உண்டு. இருப்பினும் குருவின் சுப பார்வை ஐந்து ஏழு ஒன்பது ஆகிய இடங்களில் பதிவதால் சில தடைகள் நீங்கி நல்ல சுபிட்சம் வாழ்வில் கிடைக்கும்.

குடும்பம் உத்தியோகம் தொழில் வியாபாரம் அரசியல் கலைத்துறை விவசாயத்துறை என அனைத்திலும் எப்பேர்பட்ட மாறுதல் ஏற்படுகிறது.

குடும்பம்;

ஜென்ம குருபால் சில தடைகளை சந்திப்பதற்கான சாத்திய கூறுகள் உண்டு சங்கிலி தொடர்பில் கடன் சார்ந்த தொல்லைகள் நீலக்குடிய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் குரு சுப பார்வை ஐந்தில் பதிவதால் குடும்ப ரீதியான பல பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை சிறப்பாக எதிர் கொண்டு முன்னேற்றமாக மாற்றிக் கொள்ள முடியும். 

நல்ல பலன் கிடைத்து திருமண பாக்கியம் நடைபெறுவதற்கான யோகம் ஜென்ம குருவின் ஆதிக்கம் இருந்தாலும் உண்டு. புத்திர பாக்கியத்தில் தடை இல்லை, குருவின் சப்தம பார்வை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும், புதிதாக நில உள்ளங்கள் வாங்கக்கூடிய யோகத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அன்றாட வாழ்வில் அலைச்சல் அதிகரித்தாலும் எதிர்பார்க்கக் கூடிய சுப நிகழ்வுகள் வெற்றிகரமாக அமையும்.

உத்தியோகம்;

உத்தியோகம் சார்ந்த பணிகளில் ஜென்ம ராசிகள் குரு இருப்பதால் சற்று கடினமான சூழ்நிலையாக இருக்கிறது. எடுத்தோம் கவுதம் என்று அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. சற்று வளைந்து கொடுத்து சென்றால் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய வாய்ப்புகள் நிறைந்த கிடைக்கும். கர்மஸ்தானத்தை சளி வலுப்படுத்துவதால் தசாபுத்திகள் வலுவாக இருப்பின் நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும் யோகம் உண்டு.

தொழில்;

வியாபாரம் தொழில் வியாபாரம் சார்ந்த பணிகளில் அகல கால் வைக்க வேண்டாம். மிகப் பெரிய முதலீடுகளை நிச்சயமாக தவிர்க்க வேண்டும், எந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுத்த வேண்டிய தருணமாக ஜென்ம குருவின் அமைப்பு உள்ளது. 

       ஜென்மத்தில் குரு இருந்தாலும் குருவின் சுப பார்வை ஒன்பதாம் இடத்தை வலுப்படுத்துவதால் புதிய வாய்ப்புகளும் மிகப்பெரிய அளவில் கிளைகளைத் திறத்தல் உள்ளிட்ட பணிகள் சிறப்பாக அமையும் தனித்து செயல்படுவதை விட கூட்டு முயற்சியாக ஈடுபடும்போது மிகப் பெரிய அளவில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் ரிஷப ராசிக்காரர்களுக்கு.

கலைத்துறை;

கலைத்துறை ரீதியான பணிகளில் ஜென்மத்தில் குரு இருப்பதால் சற்று கடினமாக உழைக்க வேண்டிய தருணமாகவும், சக்திக்கு மீறிய செயல்பாடுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணமாகவும் அமைந்துள்ளது. 

   

     இந்த குரு பெயர்ச்சி துவங்கிய உடனே ராசிய நதிவதையும் ஜென்ம ராசியில் குருடன் இணைவதால் புதிய வாய்ப்புகளுக்கு நிச்சயமாக பஞ்சமில்லை நாதஸ்வர இசைக் கலைஞர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள், நாட்டிய கலைஞர்கள், ஓதுவ மூர்த்திகள், நடிகர், நடிகைகள் என அனைவருக்கும் தங்களுடைய திறமையை வெளிக் கொணர்வதற்கான நல்ல சந்தர்ப்பம் நிச்சயமாக உண்டு. புதிய வாய்ப்புகள் கிடைப்பதோடு அவற்றின் மூலம் வருவாயை உயர்த்திக்கொள்ளக் கூடிய யோகமும் கலைத்துறையில் நிச்சயமாக உண்டு.

அரசியல்;

அரசியல் சார்ந்த பணிகள் ஜென்மத்தில் குரு இருப்பதால் கட்சி சார்ந்த பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்யும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். 

         ஜென்மத்தில் குரு இருப்பதால் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட மறைமுக தொல்லைகள் சற்று சந்திப்பதற்கான சூழ்நிலை கொண்டு ஆனால் அவற்றை திறமையாக எதிர்கொள்ள கூடிய யோகத்தை கொடுக்கிறார், குரு எதிர்பார்த்தபடி மக்கள் மத்தியில் செல்வாக்கும், வெற்றி வாய்ப்பும் தேடி வரக்கூடிய குரு பெயர்ச்சியாக ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவின் ஆதிக்கம் உள்ளது.

விவசாயம்;

விவசாயம் சார்ந்த பணிகளில் ஜென்ம குருவின் ஆதிக்கம் நிறைந்திருக்க கூடிய இந்த வேளையில் வயல் சார்ந்த பணிகள் கடுமையாக இருக்கும், விவசாயம் சார்ந்த பணிகளை ஈடுபடுவதற்கு முன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவு எடுத்து செயல்படுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் கால்நடை வளர்ப்பில் சில விரயத்தை சந்திப்பதற்கான சூழல் உண்டு. எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் அக்கம் பக்கத்து நிலத்தாரின் பிரச்சனை உள்ளிட்ட சில எதிர்பாராத சிரமங்களும் ஏற்படுவதற்கான சூழல் உண்டு.

கல்வி;

மாணவ மாணவியரின் கல்வியில் ஜென்ம குருவின் ஆதிக்கம் இருந்தாலும் துளி அளவு பாதிப்பு ஏற்படாது. எதிர்பார்க்கக் கூடிய உயர்கல்வி வாய்ப்புகள் கட்டும் வெளிநாடு சென்று படிப்பதற்கான யோகமும் உண்டு கவன சிதறல்கள் ஏற்பட்டாலும் கூட இந்த தருணத்தில் மனதை ஒருநிலைப்படுத்தி அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவதற்கான யோகமும் கிடைக்கிறது ரிஷப ராசிக்காரர்களுக்கு.

பெண்மணிகளுக்கு;

பெண்மணிகளின் நலனை பாதுகாக்க கூடிய குரு ஜென்மத்தில் அமருவதால் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் சற்று விழிப்புணர்வு தேவை அலைச்சல் அதிகரிப்பதற்கான சூழல் உண்டு. குடும்பத்தில் சற்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

     முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பல சிரமங்கள் விலகும் ஜென்ம குருவின் ஆதிக்கம் நிறைந்திருந்தாலும் பெண்மணிகள் எதிர்பார்க்கக் கூடிய திருமணம் புத்திர பாக்கியம் இரண்டும் கிடைப்பதற்கான யோகம் நிச்சயமாக உண்டு. குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு சற்று கடினமாக போராட வேண்டிய ஒரு தருணமாக தான் ரிஷப ராசிக்கார பெண்மணிகளுக்கு உள்ளது.

பரிகாரம்;

குரு ஜென்மத்தில் அமருவதால் ஆலங்குடி திருத்தலம் சென்று குரு பகவானே தரிசித்து வாருங்கள் குருவால் ஏற்படக்கூடிய தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் வாழ்வில் சுபிட்சம் நிறைந்த கிடைப்பதற்கான யோகம் உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?