நவகிரகங்களை எப்படி வழிபட வேண்டும் நவகிரகங்களை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?


நவகிரகங்களை எப்படி வழிபட வேண்டும் நவகிரகங்களை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் நவகிரகங்கள் வரிசை நவகிரகங்களை எப்படி சரியான முறையில் வழிபடுவது

 

      ஆலயத்தில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் மனதில் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை எப்படி சரியான முறையில் வழிபடுவது என்பதுதான்,

ஏனெனில் நவகிரகங்களை வழிபடும்போது பின்னோக்கி நகராத ஏழு கிரகங்கள் உள்ள சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும்.

இதேபோல பின்னோக்கி மட்டுமே சுற்றிக் கொண்டிருக்க கூடிய ராகுவையும் கேதுவையும் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்.

மேலும் இப்படி சுற்றுவது சரிதானா முறைதானா என்பதில் பலருக்கும் ஐயம் உள்ளது.

 உண்மையில் ஒன்பது கிரகங்களையும் இப்படித்தான் சுற்ற வேண்டுமா, நவகிரக வழிபாடு சரியான முறையில் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும், அப்படி சுற்றும்போது என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் போன்ற சந்தேகங்களுக்கு விளக்கமாக பதில் 

ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி, அவரவர் ஜனன கால ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும்.

எல்லாருக்கும் ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சிறப்பாக சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை.

இதனால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட ஆலயம் நோக்கி புறப்படுகிறோம். அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன அமைதி, மன நிம்மதி கிடைக்கிறது.

ஆனால் அப்படி கோயிலுக்குச் சென்று நவகிரகங்களை வழிபடுவதில் இன்னமும் பல்வேறு வகையான குழப்பங்களும், சந்தேகங்களும் பக்தர்களிடையே நிலவி வருகிறது. 

குறிப்பாக நவகிரகங்களை இரண்டு சுற்றுகள் இடமாகவும், ஏழு சுற்றுகள் வலமாகவும் சுற்ற வேண்டும் என்ற தவறான எண்ணங்கள், கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது.  

பொதுவாக நவகிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும் என்றும் ராகுவும் கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை மட்டும் இடமாகச் சுற்ற வேண்டும் என்றும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது முற்றிலும் தவறான கருத்து.

எனவே, இடம், வலம் என்ற கணக்கை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒன்பது முறை சுற்றினாலே போதும். அதேபோல எல்லா தெய்வங்களையும் முறையாக தரிசனம் செய்துவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் சிறந்த முறையாகும். 

எந்த கிரகத்தையும் நம் கரங்களால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக பொதுவாக பார்க்கப்படுகிறது

கிரக வழிபாடும் கிரக நிலைகளுக்கு ஏற்ற சிறப்பு பலன்களும்

சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், உயர் பதவிகளும், ஆளுமை திறனும், ஆரோக்கியமும் கிடைக்கும்

சந்திரனை வணங்கினால் பெயர், புகழ், வெற்றி மீது வெற்றி, குறித்த நேரத்தில் பணியை செய்தல் கிடைக்கும்

செவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் வீரமும், தைரியமும் அதிகரிக்கும், துணிச்சலுடன் எவ்வளவு பெரிய சவால் நிறைந்த காரியங்களையும் மேற்கொள்ளலாம்.

புதனை வழிபட்டால் நற்புத்தி, அறிவுக்கூர்மை கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும், நுணுக்கமாக செயல்பட்டு காரிய வெற்றி பெற முடியும்.

குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும், நேர்வழியில் செல்வம், சொத்துக்கள் பெருகும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம், அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவான் வழிபட்டால் வாழ்வில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஆபத்துக்கள் விலகும், ஆயுள் பலம்பெறும், பூரண ஆயுள் யோகம் உண்டு.

ராகுவை வணங்கினால் திடீர் அதிர்ஷ்டமும், முயற்சிகளில் காரியவற்றையும், பயணத்தால் நன்மை கிடைக்கும்.

கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; பிரச்சனைக்கு தீர்வு காணும் போது அவற்றின் நன்மை தீமை அறிந்து விடுக்க கூடிய ஆற்றல் கிடைக்கும், மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும், கற்பனையான பயம் எதிர்மறை சிந்தனை விலகும்.

கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்

பலன் தரும் பாடல்


திருஞானசம்பந்தரின் 'கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

இந்தப்பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும் சுபிட்சம் பெருகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?