அடுத்த சந்திர கிரகணம் எப்போது சந்திர கிரகணம் அன்று செய்ய கூடாதவை சந்திர கிரகணம் 2024 எப்போது
அடுத்த சந்திர கிரகணம் எப்போது சந்திர கிரகணம் அன்று செய்ய கூடாதவை சந்திர கிரகணம் 2024 எப்போது
சந்திர கிரகணம் இந்த ஆண்டு இரண்டாவது, சந்திரகிரகணமாக செப்டம்பர் 18ஆம் தேதி நிகழ்கிறது. முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் இரண்டாவது சந்திரகிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறுவது, குறிப்பிடத்தக்கது இந்த சந்திர கிரகணம் தமிழ்நாடு நேரப்படி காலை 6.11 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி காலை 10.17 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியுமா?
இந்த சந்திர கிரகணம் முழுமையாக பகல் நேரத்தில் நடைபெறுவதால் தமிழகத்தில் பார்க்க முடியாது. சந்திர கிரகணம் உலகின் எந்த பகுதிகள் எல்லாம் தெரியும் சந்திர கிரகணம் உலகில் ஐரோப்பிய, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் ஆசியாவில் உள்ள சில பகுதிகள் வட அமெரிக்கா தென்னமெரிக்கா அண்டார்டிக் இந்திய பெருங்கடல் போன்ற பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியும்.
சந்திர கிரகணம் எந்த ராசிக்கு எல்லாம் பாதிப்பு
இந்த சந்திர கிரகணம் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழ்வதால் குருவின் ஆட்சி வீடான தனுசு மீனம் மற்றும் சனியின் ஆட்சி வீடான கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய ஒரு சந்திர கிரகணமாக அமைகிறது.
அதோடு மட்டுமல்லாது ஜோதிடத்தின் படி ராகுவின் பழிவாங்கல் நிகழ்வாக சந்திர கிரகணம் பார்க்கப்படுகிறது தற்போது ராகு மீனராசிகள் நிலை கொண்டிருப்பதால் அவர் சஞ்சரிக்க கூடிய இடத்தின் படி பார்க்கும்போது ராகுவால் இந்த சந்திர கிரகணத்தின் போது இந்த ராசிக்காரர்களுக்கும் சில சிரமம் ஏற்படுவதற்கான சூழல் உண்டு.
அதில் மீனம் கும்பம் தனுசு மிக முக்கியமான ராசிகளாகவும் இதற்கு அடுத்ததாக சிம்மம் மிதுனம் மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்களும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். பொதுவாகவே இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான சிந்தனைகள் தோன்றும் எதிர்மறையான செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளும் தேவையற்ற வீண் வாக்குவாதங்களும் ஏற்படலாம் எனவே இந்த ராசிக்காரர்கள் விட்டுக் கொடுத்த செல்வது நல்லது.
அதுமட்டுமல்ல, அது ஒரு விதமான இனம் புரியாத மனக்கலக்கம் ஏற்படலாம் எனவே, இந்த நேரத்தில் ஆன்மீக வழிபாடு செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you