புதன் உச்சம் எப்போது புதன் பெயர்ச்சி எப்போது
புதன் உச்சம் எப்போது புதன் பெயர்ச்சி எப்போது
இயற்கை சுப கிரகமாக இருக்கக்கூடிய புதன் பாவ கிரக சேர்க்கையால் அபசு பலன்களை கொடுப்பார். தற்போது, சுபத்துவ பாதையில் அவரது உச்ச வீடு மற்றும் ஆட்சி வீடான கன்னியில் செப்டம்பர், 23 ஆம் தேதி முதல் உச்சம் பெறுகிறார். பொதுவாக, புதன் 2, 4, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய இடங்களில் அற்புதமான பலன்களை அள்ளிக் கொடுப்பார்.
அதே வேளையில், கன்னி ராசி அவரது உச்சவிடாக பார்க்கும்போது, இந்த இடங்களை தவிர்த்து கன்னி ராசிக்கும் நிறைந்த நன்மை உண்டு. அந்த வகையில் பார்க்கும்போது இரண்டாம் இடம் ஆகிய சிம்மம், நான்காம் இடமாகிய மிதுனம், ஐந்தாமிடம் ஆகிய ரிஷபம், ஏழாம் இடம் ஆகிய மீனம், ஒன்பதாம் இடமாகிய மகரம் மற்றும் பதினோராம் இடமாகிய விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு புதனின் உச்சம் என்பது மிகப்பெரிய அதிரடியான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது.
பொதுவாக, காலச்சக்கரத்தின் ஆறாம் இடத்தின் அதிபதி உச்சம் பெறுவதால் பிரச்சனைகள் எதிர்பாராத வகையில் வந்து சேரும். பிரச்சனைகள் அதிகமாக இருந்தாலும் கூட அவற்றை எளிதில் கையாளக் கூடிய வகையில் மிக சிறந்த அறிவாற்றல் கிடைக்கும். புதனின் உச்சம் நுணுக்கமான அறிவாற்றலை இந்த ராசிக்காரர்களுக்கு அதீதமாக அள்ளி கொடுப்பதால், தங்கள் வாழ்வில் சந்திக்க கூடிய மிகப் பெரிய பிரச்சனைகளுக்கு கூட நல்ல தீர்வு கிடைக்கும்.
புதன் உச்சமடைவதால் வாழ்வில் செல்வ வளங்களும், புதன் உச்சம் அடையும் இந்த தருணத்தில் வாழ்க்கையில் பொருளாதார ரீதியான முன்னேற்றமும், நிறைவாக அமையும். இந்த ராசிக்காரர்களைத் தவிர சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய ராசிகள் எவை என்று பார்க்கும்போது மேஷம், கடகம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.
சில எதிர்பாராத சிக்கல்களை சந்திப்பதற்கான சூழல் உருவாகலாம் நிதானமும், பொறுமையும் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு நிச்சயமாக புதனின் உச்சம் பெறும் காலத்தில் அவசியமாக தேவைப்படுகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you