சுக்கிரன் பலம் அதிகரிக்க சுக்கிரன் ஆட்சி பெற்றால் என்ன? சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவது எப்படி
சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ஆறு ராசிகள் என்ன
நவகிரகங்களிலே மென்மை கிரகமும், சுக கிரகமாக இருப்பவர் சுக்கிரன். சுக்கிரன் இரு இடங்களில் ஆட்சி பலம் பெறுகிறார். ரிஷப ராசியிலும், துலாம் ராசியிலும் ஆட்சி பலம் பெறக்கூடிய சுக்கிரன் ரிஷப ராசியை விட துலாம் ராசியில் ஆட்சி பலம் பெறும்போது அதீத மென்மையான பலன்களை அள்ளிக் கொடுப்பார்.
இதற்கு மிக முக்கிய காரணம் கன்னி ராசியில் நீச்சம் பெற்று வலுவிழாந்து சஞ்சரைப்பார், அதற்குப் பிறகு ஆட்சி பலம் பெறுவது, அமோகமான மாற்றங்களை அள்ளிக் கொடுக்கும். மனித வாழ்வில் எதிர்பாராத பல நன்மை நிறைந்த யோகங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய ஒரே கிரகம் சுக்கிரன்.
தற்போது, ஆட்சி பலம் பெறக்கூடிய சுக்கிரன் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஆட்சி பலம் பெற்று வலுவாக சஞ்சரிக்கப் போகிறார். தனது சொந்த ராசியான துலாம் ராசியில், இதனால் 12 ராசிக்காரர்களுக்கும் பல மாறுதல்களை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறார் பொதுவாக சுக்கிரனின் ஆட்சி பலம் அனைத்து ராசிக்காரர்களுக்குமே நன்மையை பெற்று தந்தாலும், அவர் சஞ்சரிக்க கூடிய இடத்தை பொறுத்து பல அதிரடியான மாறுதல்கள் ஏற்படுகிறது.
அந்த வகையில் அதிர்ஷ்டத்தை அல்ல போகும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன என்று பார்க்கும் போது, ஆறு ராசிகளுக்கு மிகுந்த அதிர்ஷ்டம் நிறைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சுக்கிர பெயர்ச்சியில் அந்த வகையில் பார்க்கும்போது ரெண்டு, நான்கு, ஐந்து, ஏழு ஒன்பது மற்றும் 11 ஆகிய ராசிக்காரர்களுக்கு அமோக யோகம்.
அதன் அடிப்படையில், இரண்டாம் இடமான கன்னி ராசி, நான்காம் இடமான கடக ராசி, ஐந்தாம் இடமான மிதுன ராசி, ஏழாம் இடமான மேஷ ராசி, ஒன்பதாம் இடமான கும்ப ராசி, 11-ஆம் இடமான தனுசு ராசி. இந்த ராசிகளுக்கு நிறைந்த நன்மையும் யோகமும் உண்டு. ராசியின் அதிபதியாக இருப்பதால் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கும் இதில் விதிவிலக்கு உண்டு.
ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். தனஸ்தானத்தை வலு சேர்ப்பதால் பணப்புழக்கம் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிகரிக்கும் எதிர்பாராத பண வரவு உண்டு.
சுகஸ்தானத்தை வழி சேர்ப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு பல்வேறு வகையான சுப நிகழ்வுகள் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லைகள் குறையும் விரைய செலவுகள் கற்றுக்கொள் வரும் சுப விரயங்கள் அதிகரிக்கும்.
மிதுன ராசி பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனை விலகும், புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் சுமுகமாக தீர்வு காணப்படும். தந்தை வழி உறவு முறையில் ஒற்றுமை இனிதாக பிறக்கும் சப்தமஸ்தானம் களஸ்திர ஸ்தானம் என்ற சொல்ல கூடிய 7ல் மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் எதிர்பார்த்தபடி காதல் திருமணம், நிச்சயக்கப்பட்ட திருமணம் கைகூடும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
பாக்ய ஸ்தானத்தை வழி சேர்ப்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சியை பெற்று தரும். பல்வேறு வகையான தடைகள் அஷ்டம பாதிப்புகள் விலகி நல்ல முன்னேற்றம் கும்பராசிக்காரர்களுக்கு உண்டு. தனுசு ராசிக்கு லாபத்தை அலங்கரிப்பதால் எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் அவற்றில் லாபம் உண்டு. இந்த தருணத்தில் எதிர்பாராத தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். புதிய தொழில் துவங்க யோகமும் உண்டு.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you