நவராத்திரி ஏன் கொண்டாட வேண்டும்? இந்த நவராத்திரியில் ஒவ்வொரு நாளும்எ ப்படி வழிபட வேண்டும்? ஒன்பது நாட்கள் நாம் என்ன செய்ய வேண்டும்?

நவராத்திரி ஏன் கொண்டாட வேண்டும்? 


இந்த நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எப்படி வழிபட வேண்டும்? 

ஒன்பது நாட்கள் நாம் என்ன செய்ய வேண்டும்? 

நவராத்திரி என்பது 9 இரவுகள் கொண்ட வழிபாடுசிவனை வழிபட சிவராத்திரி என்றால் சக்தியை வழிபட இந்த நவராத்திரி.

இந்த நவராத்திரியில், கொலு வைத்து கொண்டாடுவது வழக்கம். இந்த நவராத்திரியை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை பார்ப்போம்.

நவராத்திரி என்றால் என்ன? 

சர்வமும் சக்தி மயம் என்று கூறுவார்கள் நவராத்திரி என்பது 9 இரவு என்று பொருள்.

ஆக, ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை அல்லது சக்தியை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி.

அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்வதற்காக இந்த ஒன்பது நாட்கள் கடும் தவம் நோற்ற காலம்தான் இந்த நவராத்திரி முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலை மகள் கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிஷாசுரனை வதம் செய்த நாள் தான் இந்த நவராத்திரி.

நவராத்திரியின் ஒன்பது நாளும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்:

இந்த ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான அமிர்த நெய்வேத்தியம் அம்பாளுக்கு சாற்ற ஒரு நாளைக்கு ஒவ்வொரு விதமான மலர் இந்த ஒன்பது நாளும் வாசிப்பதற்கு ஒன்பது வகையான வாத்தியங்கள் அம்பாளுக்கு பூஜிக்க இந்த ஒன்பது நாளும் ஒன்பது வகையான திரு மந்திரங்களும் உள்ளன.

நவராத்திரியின் முதல் நாள்:

நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்பாளை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜையில் வேண்டும்.

அன்று அம்பிகையை வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பான பலன்களை தருவது மட்டுமல்லாமல் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.

முதல் நாளில் அரிசி மாவில் பொட்டுக் கோலம் இட வேண்டும் இன்று மிருதங்கம் வாசிக்க தெரிந்தவர்கள் தோடி ராகம் இசைப்பது நன்று.

நவராத்திரியின் உடைய முதல் நாள் அம்பிகைக்கு வெண்பொங்கல் நிவேதியம் செய்து கொலுவை பார்க்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

இதனால், எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் நவராத்திரியின் உடைய முதல் நாள் அம்பிகையை குமாரியாக பூஜை அதன் மூலமாக நமக்கு எதிரி கடன் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதுடன் ஆயுள் விருத்தியும் செல்வ விருத்தியும் ஏற்படும் என்பது ஐதீகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?