சனி வக்ர நிவர்த்தியால் நல்ல நேரத்திற்கான அறிகுறி எந்த ராசிக்காரர்களுக்கு?

சனி வக்ர நிவர்த்தி பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025

நவகிரகங்களில் நீதி தவறாத நடுநிலை தவறாத சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன. என்று பார்க்கும்போது பொதுவாக சனி 3, 6 மற்றும் 11 ஆகிய இடங்களில் அபரிவிதமான நன்மைகளை அள்ளிக் கொடுப்பார்.

அந்த வகையில் பார்க்கும்போது, இந்த தருணத்தில் நவம்பர் 4 முதல் வக்ர நிவர்த்தி பெறக்கூடிய சனியால் தனுசு கன்னி மற்றும் மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு முதன்மையான யோகங்கள் நிறைவாக உண்டு.

லாப சனி வக்ர நிவர்த்தி மேஷம்:

லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11ஆம் இடத்தில் சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் வளம் அதிகரிக்கும், லாபம் உயரக்கூடிய வகையில் பல வாய்ப்புகள் எளிதாக தேடி வரும்.

எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் அடுத்த ஐந்து மாதம் பொன்னான ஒரு தருணமாக அமையப் போகிறது.

ஏழரை சனி ஆரம்பிப்பதற்கு முன் இந்த வேலையில் அதை எதிர்கொள்ள கூடிய வகையில் நல்ல வாய்ப்புகளை நிறைவாக அள்ளிக் கொடுக்கப் போகிறார்.

எதிர்பார்க்கக் கூடிய திருமணம் காதுகுத்து வளைகாப்பு புதுமனை புகுதல் என பல்வேறு வகையான சுபணி நிகழ்வுகள் மிகச் சிறப்பாக கைக்கூடும். 

கடன் சுமை குறைந்து பொருளாதார ரீதியாக வளர்ச்சி நிறைவாக கிடைக்கும்.

யோக சனி கன்னி:

யோகத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய ஆறாம் இடத்தில் வக்கிர நிவர்த்தி பெறுவதால் சனியன் அமைப்பால் பல யோகங்கள் உங்களைத் தேடி வரும். குறிப்பாக கடன் சுமை பெரியளவுல கட்டுக்குள் வரும்.

எதிர்பார்ப்பதை விட ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் நிறைவாக கிடைக்கும் எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் யோகம் உண்டு ஆறில் சனியும் ஒன்பதில் குருவும் இருப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு அடுத்த ஐந்து மாதம் யாராலும் அசைக்க முடியாத பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை நிச்சயம் தேடி வரும்.

மனதில் நினைக்கக்கூடிய காரியங்களை மறுகணமே செய்து முடிக்க கூடிய யோகம் நிறைவாக கன்னி ராசிக்காரர்களுக்கு உண்டு.

தொழில் வியாபாரம் லாபம் நிறைவாக பெறுவதோடு, எதிர்பார்த்தபடி புதிய அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்.

சகாய சனி தனுசு ராசி:

சனி வெற்றிக்கு உரிதான மூன்றாம் இடத்தில் வக்கிர நிவர்த்தி பெறுவதால் எடுக்கக்கூடிய காரியம் எதுவாக இருந்தாலும் மிகப் பெரிய அளவுல வெற்றி உண்டு.

இந்த வேலையில் தனுசு ராசிக்காரர்கள் உடைய சிறு முயற்சி கூட மிகப் பெரிய அளவிலான பொருளாதார ரீதியான வளர்ச்சியை அள்ளிக் கொடுக்கும்.

தடைகள் தாமதங்கள் தோஷங்கள் போன்றவை நீங்கி எந்தவிதமான பணியாக இருந்தாலும் மகிழ்ச்சி இரட்டிப்பாக மாறுவதற்கான முதன்மையான யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு உண்டு.

நீண்ட நாட்களாக சந்தித்து வரக்கூடிய பல சிரமம் விலகும் எதிர்பார்க்கக் கூடிய காரியம் பொருளாதார ரீதியாக உச்ச வளர்ச்சியை பெற்று தரக்கூடிய வகையில் அமைகிறது சனி வக்கிர நிவர்த்தி பெறுவதால்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?