புத சுக்கிர யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை புத சுக்கிர யோகம் என்றால் என்ன?
புதன் பெயர்ச்சி பலன்கள்
புத சுக்கிர யோகம்:
புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து ஒரு இடத்தை வலுப்படுத்துவது, புத சுக்கிர யோகம் எனப்படும்.
இந்த புத சுக்கிர யோகத்தால் பல்வேறு காரியங்களில் வெற்றி வாய்ப்புடன் கூடிய அதிர்ஷ்டமும், செல்வ வளமும், அதிகரிப்பதற்கான யோகம் உருவாகும். எண்ணிலடங்காத பல நன்மைகள் உங்களுடைய சிறு முயற்சியிலே கிடைப்பதற்கான யோகம் கிடைக்கும்.
அறிவுத்திறனையும், ஆடம்பரத்தையும் பயன்படுத்தி அற்புதமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சூழல் உருவாகும்.
தற்போது, புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து புதன் சுக்கிர யோகத்தை உருவாக்குவதால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிக யோகம் கிடைக்கிறது.
அந்த வகையில் பார்க்கும்போது இரண்டு ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் 11 ஆகிய ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம், வளர்ச்சி கிடைக்கும்.
அந்த வகையில் பார்க்கும் போது, இந்த தருணத்தில் மிக வலுவாக துலாம், கடகம், ரிஷபம், மீனம் மற்றும் மகரம் இந்த ராசிக்காரர்களுக்கு புத சுக்கிர யோகத்தால் அதிக நன்மை உண்டு.
தன ஸ்தானத்தில் துலாம்:
குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானம், தனஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு புத சுக்கிர யோகம்
உருவாகக்கூடிய இந்த தருணத்தில் குடும்பத்தில் பல்வேறு வகையான சுப காரியங்கள் தடையில்லாமல் கைகூடும். பண வரவுக்கான சந்தர்ப்பம் நிறைவாக உண்டு.
ஐந்தில் புதன் சுக்கிர யோகம் கடக ராசி:
பஞ்சமஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் இடத்தில் புத சுக்கிர யோகம் நிறைவாக கிடைப்பதால் கடக ராசி காரர்களுக்கு குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும்.
பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனை நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றில் நல்ல மாறுதல் உண்டு.
புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் இந்த தருணத்தில் நிறைவாக கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்.
ஏழில் ரிஷப ராசிக்கு புத சுக்கிர யோகம்:
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஏழாம் இடம் சப்தமஸ்தானத்தில் புதன் சுக்கிர யோகம் நிறைவாக கிடைப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்களை மறுகணமே செய்வதற்கான யோகம் நிறைவாக உண்டு.
தங்கள் வாழ்வில் சந்திக்க கூடிய திருமண தடைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் விலகி சுப நிகழ்வுகள் சிறப்பாக கைக்கூடும்.
ஒன்பதில் மீன ராசிக்கு புதன் சுக்கிர யோகம்:
மீன ராசிக்காரர்களுக்கு பாக்கியஸ்தானத்தை ராசியின் உச்ச அதிபதியும் நீச்ச அதிபதியும் வலு சேர்ப்பதால் எதிர்பாராத அதிரடியான வாய்ப்புகள் நிறைவாக உண்டு.
நீண்ட நாள் தடை சந்தித்து வந்த பாதியில் தடைபட்ட பணிகள், தற்போது விரைவாக நடைபெறுவதற்கான யோகம் உண்டு.
மகிழ்ச்சி நிறைந்த நல்ல செய்தி கிடைக்கும் உறவுகளுக்கு இடையே உறவு பலப்படும் நண்பர்கள் வட்டாரம் விரிவடையும் எதிர்பாராத தொழில் வாய்ப்புகள் எதிர்கால நலனை சிறப்பாக மாற்றி அமைக்கும்.
லாபத்தில் புத சுக்கிர யோகம் மகரம்:
மகர ராசிக்கு அதீத நன்மையை கொடுக்கக்கூடிய லாப ஸ்தானத்தில் புதன் சுக்கிர யோகம் கிடைப்பதால் இரட்டிப்பு நன்மை உண்டு.
ராசியின் அதிபதியான சனிக்கு இரண்டு கிரகங்களுமே நட்பு கிரகங்கள் அவை இரண்டும் லாபஸ்தானத்தை வலுப்படுத்தக்கூடிய இந்த வேலை உச்சபட்ச நன்மை மகர ராசிக்காரர்களுக்கு உண்டு
உங்களுடைய சிறு முயற்சி நிறைவான லாபத்தை இந்த தருணத்தில் தொழில்துறை உத்தியோகத்தில் பெற்று தரும் எதிர்பாராத பண வரவுக்கான சாத்தியக் கூறுகள் உண்டு
கடன் சுமை விலகும் நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல காரியங்கள் தடையில்லாமல் தற்போது கிடைக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you