குரு வக்ர பெயர்ச்சியால் எந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு தானாக நடக்க போகும் நல்லவை? அதில் உங்கள் ராசி உள்ளதா?
guru vakra peyarchi palangal
குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்
நவகிரகங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரகங்களில் முதன்மையான முழு சுப கிரகமாக திகழ்கிறவர் குரு.
தற்போது, அவர் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். பொதுவாக குருவிற்கு அதிசார பெயர்ச்சியும், வக்கிர பெயர்ச்சியும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
என்றாலும் கூட, அவர் சஞ்சரிக்க கூடிய இடத்தை பொறுத்து வேறு பலன்கள் கிடைப்பதற்கான சூழல் உண்டு.
வானியல் அரசன், நவகிரகங்களின் தலைவன், எந்த ஒரு கிரகமும் குருவை பகை கிரகமாக பார்ப்பதில்லை, எனவே குரு வக்ரம் பெற்றாலும் நேர் கதியில் சஞ்சரித்தாலும் குரு எப்போதுமே குரு தான்.
பொதுவாக குருவின் சஞ்சாரா அமைப்பு இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் 11 ஆகிய இடங்களில் அபரிவிதமான நன்மையை அள்ளிக் கொடுக்கும்.
ஆனால், வக்ரம் பெறும் போது குரு பகவான், மூன்று, ஆறு, எட்டு, பத்து மற்றும் பன்னிரெண்டு ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் ராசிக்காரர்களுக்கு அமோகமான வளர்ச்சியை அள்ளிக் கொடுப்பார்.
அந்த வகையில், பார்க்கும்போது அதிக நன்மைகளை பெறக்கூடிய ராசிகளின் பட்டியலில் உள்ள ராசிகள்.
அதிக நன்மையை அள்ளும் ராசிகள்:
மீன ராசி, தனுசு ராசி, துலாம் ராசி, சிம்ம ராசி மற்றும் மிதுன ராசி இந்த ஐந்து ராசிகள் குரு வக்ரம் பெறுவதால் அமோகமான நன்மையை பெறுகின்றன.
ஏனென்றால், குரு பகவான் பின்னோக்கி நகர்வதால் இந்த இடங்களில் சஞ்சரிக்க கூடிய ராசிக்காரர்களுக்கு நன்மை நிறைவாக உண்டு அதிலும் குறிப்பாக,
மீனம்:
மீன ராசிக்கு அதிபதியான குரு தைரியத்தில் வக்ரம் பெறுவதால் தனஸ்தானம் வலுப்பெறுகிறது.
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் சிறப்பாக கைகொடும், பொருளாதார ரீதியான நெருக்கடிகள் இந்த தருணத்தில் குறையும்.
தனுசு ராசி:
ஆறாம் இடத்தில் வக்ரம் பெறுவதால் நீதிமன்ற வழக்குகள் சாதகமாக அமையும்.
பூர்வீக சொத்துக்கள் பிரச்சனை சுமூகமாக தீரும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் கிடைக்கும்.
துலாம் ராசி:
அஷ்டம ஸ்தானத்தில் குரு வக்கிரம் பெறுவது முதன்மையான நற்பலன்களை கொடுக்கிறது. துலாம் ராசிக்காரர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்த நினைத்தாலும் அதை மறுகணமே செய்வதற்கான யோகம் கைகூடும்.
சிம்மராசி:
சிம்மராசிக்காரர்களுக்கு கர்ம ஸ்தானத்தில் குரு பகரம் பெறுகிறார், குரு ஒன்பதில் இருந்தால் எப்படி நன்மை கிடைக்குமோ? அந்த அளவிற்கு பத்தில் குரு பகிராம் பெறுவதால் அனைத்து வகையான காரியங்களிலும் வெற்றி கிட்டும்.
சிம்மராசிக்கார பெண்மணிகளுக்கு சுப நிகழ்வுகள் மிகச் சிறப்பாக கைக்கூடும்.
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களுக்கு விரயத்தில் வக்கிரம் பெறக்கூடிய குரு லாபத்தை நோக்கி நகர்கிறார். எனவே, தொழில் மற்றும் உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத உயர்வும், லாபமும் நிறைவாக கிடைக்கும்.
புதிய தொழில், புதிய வேலைவாய்ப்பு போன்றவை சிறப்பாக இந்த தருணத்தில் கைகூடும் மிதுன ராசிக்காரர்களுக்கு.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you