சனி வக்ர நிவர்த்தியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் எவை? sani vakra nivarthi palangal

சனி வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? உங்கள் ராசி உள்ளதா? 

சனி வக்ர நிவர்த்தி பெற்று ஆட்சி பலம் பெறுகிறார். சனி நவம்பர் மாதம் முதல் ஆட்சி பலன் பெறக்கூடிய சனி அடுத்த வருடம் 2025 மார்ச் வரை ஆட்சி பலம் பெற்று சஞ்சரிக்கிறார். 

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி. எனவே, இந்த வேலையில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன, என்று பார்க்கும்போது, முதன்மையான யோகங்கள் 3, 6 மற்றும் 11 ஆகிய இடங்ளில் சஞ்சரிக்கும் ராசிகள் பெறுகின்றன. 

அந்த வகையில் பார்க்கும்போது தனுசு, கன்னி மற்றும் மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் யோகத்தின் உச்சியை பெறக்கூடிய வகையில் பல நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. 

அது மட்டுமல்லாது நடுநிலையான பலன்களை பெறும் இடங்களாக 5, 9 மற்றும் 10 ஆகிய இடங்கள் உள்ளன. இந்த இடத்தில் நல்ல மாறுதல் நிறைவாக உண்டு. 

அந்த வகையில் பார்க்கும்போது, துலாம், மிதுனம் மற்றும் ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்ல நிறைவான மாறுதல் இந்த சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிக்காரர்களை தேடி வரும்.

அதிக சிரமங்களுக்கு உள்ளாக கூடிய வகையில் மீதி உள்ள ஆறு ராசிக்காரர்கள் உள்ளனர். எனவே, அந்த ராசிக்காரர்கள் அடுத்த ஐந்து மாதங்களுக்கு அதிக கவனத்துடன் விழிப்புணர்வுடன் நிச்சயமாக செயல்பட்டாக வேண்டும்.

லாப சனி மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு, ஏழரை சனி துவங்க உள்ள இந்த ஐந்து மாதங்கள் ஒரு பொற்காலம் என்று சொல்லிவிடலாம். 

தொட்ட காரியங்கள் அனைத்தும் பொன்னாகும். எதிர்பாராத தன லாபம் உயரக்கூடிய யோகம் உண்டு. 

புதிய நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் புதிய தொழில் துவங்குவதற்கான யோகமும், நிறைவாக இந்த தருணத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். 

கடன் தொல்லை, கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல சிரமங்கள் நிச்சயமாக கட்டுக்குள் வருவதோடு, எதிர்பாராத சிறப்பான வாய்ப்புகள் நிறைவாக அமையும். இந்த தருணத்தில் மேஷ ராசிக்கு.

யோக சனி கன்னி:

கன்னி ராசிக்கு யோகங்களை கொடுக்கும் ஆறில் அமர்கிறார் வக்ர நிவர்த்தி பெற்று. எனவே, எதிர்பாராத வரவிற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. விரயச் செலவுகள் கட்டுக்குள் வரும் ஆரோக்கிய தொல்லை விலகும்.

கடன் சார்ந்த தொல்லைகள் விலகும். மறைமுகமாக மற்றும் நேரடியாக சந்திக்க கூடிய பெரிய அளவில் ஆன சிக்கல்கள் விலகி மகிழ்ச்சி குடும்பத்தில் பிறக்கும். நீதிமன்ற வழக்குகள் பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனை கட்டுக்குள் வரும். 

எதிர்பாராத நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் நிரந்தர தொழில் துவங்குவதற்கான யோகமும் தொழிலில் லாபத்தை உயர்த்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் உண்டு.

சகாய சனி தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு தைரிய ஸ்தானத்தை வெற்றிக்குரிய மூன்றாம் இடத்தை வலுப்படுத்துவதால் எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றிகரமாக அமையும். 

நீண்ட நாட்களாக இழுபறிகள் உள்ள பணிகளை சனி வக்கிர நிவர்த்தி பெறுவதால் துல்லியமாக செய்து முடிக்கலாம் . தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.

எனவே, சவால் நிறைந்த பணிகளை சிறப்பாக செய்யலாம். திருமணம் உள்ளிட்ட பல சுப நிகழ்வுகள் சிறப்பாக சிக்கல் இல்லாமல் அமையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?