குருவின் வீட்டிற்குள் சுக்கிரன் நுழைவதால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? சுக்கிர பெயர்ச்சி பலன்
குருவின் வீட்டிற்குள் சுக்கிரன் நுழைவதால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்
சுக்கிர பெயர்ச்சி பலன்
Venus transit benefits
சுக்கிரன் தனுசு ராசியில் என்ன பலன்
பொதுவாக சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் ஒரு மாத காலம் தங்கி சஞ்சரைப்பார்.
அந்த வகையில் பார்க்கும்போது நவம்பர் 8ஆம் தேதி முதல் விருச்சக ராசியிலிருந்து விலகி குருவின் ஆட்சி வீடான தனுசு ராசிக்கு உள் நுழைகிறார்.
சுக்கிரன் பார்வையில் குரு சமகிரஹம் இருக்கிறார்.
சுக்கிரனுக்கு குருவே குரு தான் எனவே, அவருடைய வீட்டிற்கு செல்வதால் இந்த தருணத்தில் நல்ல மாற்றங்களை பொதுவாக அனைத்து ராசிக்காரர்களுக்குமே கொடுப்பார்.
இருந்தாலும் அவரது சஞ்சாரா அமைப்பின்படி சில மாறுபட்ட பலன்களையும் மனித வாழ்வில் ஏற்படுத்துவார்.
அதன்படி பார்க்கும்போது குடும்பம், சுபம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் மற்றும் லாபம் ஆகிய இடங்களில் அதிக நன்மையை அள்ளிக் கொடுப்பார்.
அப்படி பார்க்கும் போது, இந்த பட்டியலில் அதிக நன்மையை அல்லக்கூடிய முதன்மையான ஐந்து ராசிகளாக எவையெல்லாம் அமைந்துள்ளன என்றால் விருச்சிகம், கன்னி, சிம்மம், மிதுனம், மேஷம் மற்றும் கும்பம் ஆகிய இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு அமோகமான நல்ல மாற்றங்கள் நிறைவாக இந்த வேலையில் கிடைக்கும்.
அதிக நன்மைகளை அள்ளும் ராசிகள்:
விருச்சிக ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் நிலை கொள்வதால் சுப நிகழ்வுகள் தடையில்லாமல் கைகூடும்.
கொடுக்கல் வாங்கல் மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்கள் தடைகள் விலகும். கன்னி ராசிக்கு சுக ஸ்தானம் என்பதால் புதிய சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக அமையும் அதோட மட்டுமல்லாது சுக்கிரன் சுக ஸ்தானத்தில் நிலை கொண்டிருப்பதால் ஆடம்பர வசதி வாய்ப்பு அதிகரிக்க கூடிய வகையில் நல்ல மாற்றம் உண்டு.
சிம்ம ராசிக்கு ஐந்தில் சுக்கிரன் இருப்பதால், புதிய அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முதன்மையான யோகம் உண்டு.
பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனை கட்டுக்குள் வரும்.
எதிர்பாராத புதிய வாய்ப்புகள் சிறப்பாக கைகொடும்.
நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட நீண்ட நாள் இழுவையில் உள்ள பல பிரச்சனைகள் சமூகமாக தீர்வு காணப்படும்.
களஸ்திர ஸ்தானமாகிய எழில் மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அமைவதால் திருமணம் சிறப்பாக கூடும் காதல் திருமணம் நிறைவேறும்.
புதிய வேலைவாய்ப்பு தொழில் ரீதியான முயற்சிகள் போன்றவற்றில் நிறைவான வெற்றி கிடைக்கும்.
களஸ்திர ஸ்தானமாகிய எழில் மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அமைவதால் திருமணம் சிறப்பாக கூடும் காதல் திருமணம் நிறைவேறும்.
புதிய வேலைவாய்ப்பு தொழில் ரீதியான முயற்சிகள் போன்றவற்றில் நிறைவான வெற்றி கிடைக்கும்.
கும்ப ராசிக்கு ராசியின் அதிபதி ஜென்மத்தில் அமர்ந்திருக்கும் போது சுக்கிரன் லாபத்திற்கு வந்திருப்பதால் தொழில் உத்தியோக ரீதியான பல சிக்கல்கள் விலகி முன்னேற்ற வாய்ப்புகள் நிறைவாக கிடைக்கும். கலைத்துறை மற்றும் அரசியல் துறை சார்ந்த புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வருவதற்கான யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு உண்டு.
எந்த ராசிக்காரர்களுக்கு அதிக சிரமம்:
மற்ற அனைத்து ராசிக்காரர்களும் சற்று மிதமான பலன்களை பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.
ஜென்மத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கும் அஷ்டமத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கும் இருப்பதால் அனைத்து விதமான பணிகளில் ஒரு முறைக்கு இருமுறை கவனம் செலுத்துவது நல்லது.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you