ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? ஆடியில் புது வீடு குடி போகலாமா? aadi matha rasi palan
ஆடி மாத ராசி பலன்கள்
ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை?
ஆடி மாதத்தில் எந்த விஷயத்தை செய்யக்கூடாது?
ஆடியில் பால் காய்ச்சலாமா?
ஆடியில் புது வீடு குடி போகலாமா?
ஆடியில் வீடு கட்ட துவங்கலாமா?
ஆடியில் மிகப்பெரிய வணிகவளாகம் கட்ட துவங்கலாமா?
ஆடிப்பெருக்கென்று என்ன செய்ய வேண்டும் ஆடி மாத ராசி பலன்கள்.
ஆடி மாதத்தில் கிரக நிலை:
ஆடி மாதத்தில் கிரக நிலைகளின் அமைப்பை பார்க்கும் போது மிகவும் வலுவாக குரு பகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.
முழுமையாக சூரியன் மிதுன ராசியை விட்டு விலகி சந்திரனின் ஆட்சி வீடான கடக ராசியில் வலம் வரும் மாதம் ஆடி மாதம் என்று அழைக்கப்படுகிறது.
சந்திரனின் ஆட்சி வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் கூடுதல் கவனம் உடல் நலனில் தேவை வித்யா காரகன் புதன் வக்ரகதிகளும், வக்கிர நிவர்த்தி பெற்றும் கடக ராசியில் வலம் வருகிறார்.
சுக்கிரன் முற்பகுதியில் ஆட்சி பலம் பெற்று ரிஷப ராசியிலும் பிற்பகுதியில் குருவுடன் இணைந்து குரு சுக்கிர யோகத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்.
இந்த ஆடி மாதத்தில் செவ்வாய் முற்பகுதியில் சூரியனின் ஆட்சி வீடான சிம்ம ராசியிலும் பிற்பகுதியில் புதனின் ஆட்சி வீடான கன்னி ராசியிலும் வாசம் செய்கிறார்,
சனி ராகு உடன் இணைந்து வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வக்ரம் பெற்ற அமைப்பில் கும்ப ராசியில் ஆட்சி பலம் பெற்று வருகிறார். திருக்கணிதத்தின் படி சனி மிக வலுவாக மீன ராசியில் வலம் வருகிறார்.
மோட்சகாரகரான கேது சிம்ம ராசியில் முழுமையாக இந்த ஆடி மாதத்தில் பலம் பெறுகிறார். இப்படி நவகிரக நிலைகளின் அமைப்பும் இந்த ஆடி மாதத்தில் உள்ளது.
ஆடியில் புது வீடு குடி போகலாமா?
ஆடியில் வீடு கட்ட துவங்கலாமா?
ஆடி மாதத்தில் புது வீடு பால் காய்ச்சுவதை தவிர்ப்பது நல்லது. ஆடி மாதத்தில் புது வீடு கட்ட துவங்குவதை தவிர்ப்பதும் நல்லது. ஆனால், மிகப்பெரிய அளவில் வணிகவளாகம் அல்லது மிகப் பெரிய கட்டிடங்களை கட்டும் போது சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். அதிலும் குறிப்பாக மிகப்பெரிய வாஸ்து என்று சொல்லக்கூடிய ஆடி வாஸ்து செய்வது அமோகமான நன்மையை நிறைவாக அள்ளிக் கொடுக்கும்.
அதிக நன்மை பெறும் ராசிகள்:
ரிஷப ராசி துலாம் ராசி மற்றும் கும்ப ராசி
அதிக சிரமம் பெரும் ராசிகள்:
கடகம் மிதுனம் மற்றும் மீனம்
நடுநிலையான பலனை பெரும் ராசிகள்: இந்த ஆறு நாசிகளை தவிர்த்து மற்ற ஆறு ராசிக்காரர்களுக்கு நடுநிலையான பலன் உண்டு.
மேஷ ராசி;
சூரியன் சுகஸ்தானத்தில் இருப்பதால் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. குரு தைரியத்தில் இருக்கக்கூடிய இந்த வேலையில் சுக்கிரனும் அவருடன் இணைவதால், எந்த ஒரு பணியை மேற்கொண்டாலும் ஒரு முறைக்கு இருமுறை திட்டமிடுதல் நல்லது.
யோக ஸ்தானத்தில், ராசியின் அதிபதியான செவ்வாய் வருவதால் திடீரென புதிய அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் நிறைவாக, இந்த ஆடி மாதத்தில் உண்டு.
மனதில் பிடித்த பல காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பதோடு, ஆன்மீக பணி சார்ந்த நிகழ்வுகளில் சிறப்பான முன்னேற்றம் நிச்சயம் மேஷ ராசிக்காரர்களுக்கு உண்டு.
ரிஷப ராசி;
சூரியன் வெற்றிக்கு உரித்தன மூன்றில் வளம் வருவதால் இந்த வேளையில், எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் வெற்றி உறுதியாக கிடைக்கும்.
சூரியன் மட்டுமல்ல குரு தனஸ்தானத்திலும், லாப ஸ்தானத்தில் சனி என பல கிரக நிலைகள் வாசம் செய்வதால் நினைத்த காரியம், அனைத்தும் அம்மனின் அருள் பெற்ற இந்த ஆடி மாதத்தில் பரிபூரணமாக கிடைப்பதற்கான சந்தர்ப்பம் உறுதியாகவே, ரிஷப ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு உண்டு.
எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் தடையில்லாமல் மகிழ்ச்சி நிறைந்தவையாகவும் பிரம்மாண்ட படைப்புகளாகவும் மாற்றுவதற்கான யோகம் நிறைவாக உண்டு. 12 ராசியில் முதன்மையான யோகம் ரிஷப ராசி ஆகிய உங்களுக்கு கிடைக்கிறது.
மிதுன ராசி;
ஜென்மத்தை விட்டு சூரியன் விலகுவதால் சற்று சிரமம் விலகுவதற்கான சந்தர்ப்பம் உண்டு. ஆனால், அதே வேளையில் குரு ஜன்மத்தில் இருக்கும்போது சுக்கிரனும் ஜென்மத்திற்குள் வருவதால் அதிக கவனமும், நிதானமும் பொறுமையும் மற்ற ராசிகாரர்களை காட்டிலும் சற்று கூடுதலாகவே இந்த வேளையில் மிதுன ராசிக்காரர்களுக்கு தேவை.
எந்த ஒரு சூழலிலும் பொறுமையை இழந்து செயல்படாமல் இருப்பது தங்களுடைய வாழ்வில் நிச்சயம் எதிர்கால நலனை சிறப்பானதாக மாற்றி கொடுக்கும்.
கடக ராசி;
சூரியன் ஜென்மத்தில் வாசம் செய்வதால் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு பணியை மேற்கொண்டாலும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய சூழல் உண்டு.
சனி ஒன்பதில் இருப்பதால் சற்று சிரமம் குறைவும் என்பதில் சந்தேகமே வேண்டாம் திட்டமிடக்கூடிய பல பணிகளில் அலைச்சல் கூடுதலாக இருந்தாலும் நிறைவான வெற்றி வாய்ப்பு இந்த தருணத்தில் கடக ராசிக்காரர்களுக்கு உண்டு.
இதுவரை சந்தித்த பல நெருக்கடிகளில் சிறப்பான மாற்றத்தை சந்திக்கும் நேரம் இந்த ஆடி மாதம்.
சிம்ம ராசி;
தொட்ட காரியம் அனைத்தும் சற்று அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய சூழல் விரயத்தில் நுழையும் ராசியின் அதிபதியான சூரியனின் அமைப்பால் உண்டு.
ஆனால், குரு உள்ளிட்ட பெருவாரியான கிரக நிலைகள் சாதகமான அமைப்பில் வலம் வருகின்றன. லாபத்தில் குரு இருப்பதால் நினைப்பதை காட்டிலும் இரட்டிப்பு நன்மை இந்த வேலையில் உண்டு.
மேலும் பெருவாரியான கிரக நிலைகள் சற்று சாதகமாக இருப்பதால் சிரமத்தைக் காட்டிலும் நன்மை நிறைவாக ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் இந்த ஆடி மாதத்தில் நிறைவாக கிடைக்கிறது சிம்மராசிக்காரர்களுக்கு.
கன்னி ராசி;
சூரியன் லாபத்தில் இருப்பதால் நிறைந்த தன லாபம் கன்னி ராசிக்காரர்களுக்கு உண்டு குரு சனி உள்ளிட்ட கிரகநிலைகள் தொழில் வளம் சிறப்பாக மாற்றிக் கொடுப்பதால், புதிய வாய்ப்புகள் வருமானத்தை இரட்டிப்பாக மாற்றிக் கொள்ளக் கூடிய வகையில் கைகூடும்.
நினைப்பதை காட்டிலும் பல காரியங்களை எளிதில் செய்யக்கூடிய அற்புதமான வாய்ப்பு கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதத்தில் உண்டு.
துலாம் ராசி;
கர்ம ஸ்தானத்தில் சூரியன் முழுமையாக அமரக்கூடிய எந்த வேளையில் ராசியின் அதிபதியான சுக்கிரன், குருவுடன் இணைந்து பாக்ய ஸ்தானத்தை வலுப்படுத்துவதால் பல வகையில நன்மை உங்களை தேடி வரும்.
ஒன்பதில் குரு மற்றும் சுக்கிரன் இருப்பதால் துலாம் ராசிக்கார பெண்மணிகளுக்கு முதன்மையான யோகம் இந்த வேளையில் ஆடி மாதத்தில் நிறைவாக கிடைக்கிறது.
இதுவரை முயற்சி செய்தும் வெற்றியடையாத பல காரியங்களில் உறுதியாக வெற்றி கிடைக்கும். சிறப்பு விருந்தினராக பங்கு பெறுவதற்கான யோகமும் நிறைவாக துலாம் ராசிக்காரர்களுக்கு உண்டு.
விருச்சிகம் ராசி;
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஸ்டமத்தை விட்டு சூரியன் விலகுவதால் உடல் நலத்தில் பரிபூரண ஆரோக்கியம் கிடைக்கும்.
திட்டமிடுவதை காட்டிலும் பல சிரமங்கள் உறுதியாக விலகும் ஆனால், குரு சுக்கிரன் அஸ்தமத்தில் இருப்பதால் கலைத்துறை மற்றும் அரசியல் துறையில் அதிக கவனம் தேவை.
எதை செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டிய காலகட்டமாக விருச்சக ராசிக்காரர்களுக்கு உண்டு. நீண்ட நாள் திட்டமிட்ட பல வாய்ப்புகள் இந்த தருணத்தில் உங்களைத் தேடி வரும். சற்று அலைந்து திரிந்தாவது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் உறுதியாக சிறப்பான மாற்றம் இந்த ஆடியில் தேடி வரும்.
தனுசு ராசி;
ராசியின் அதிபதியான குரு சப்தமத்தில் இருக்கும்போது அவருடன் சுக்கிரனும் இணைவதால் இரட்டிப்பு நன்மை, என்ற சொல்லக் கூடிய வகையில் குரு சுக்கிர யோகம் நிறைவாக கிடைக்கிறது.
எனவே, இந்த வேளையில் திருமணத்தை தவிர்த்து மிகப் பெரிய அளவிலான பல சுப காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிகப்பெரிய அளவுல கட்டிட பணி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பமும் உண்டு.
ஆனால், உஷ்ண கிரகமான சூரியன் அஸ்தமத்தில் இருப்பதால் உடல்நலத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சில நேரங்களில் எளிதில் முடிக்க வேண்டிய பணிகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய சூழலும் உண்டு. எனவே, தனுசு ராசிக்காரர்கள் சற்று நன்கு திட்டமிட்டு செயல்படுவது நன்மையை இரட்டிப்பாக மாற்றி கொடுக்கும் இந்த ஆடி மாதத்தில்.
மகர ராசி;
சப்தமத்தில் சூரியன் ஜென்மத்தில் சூரியனின் பார்வை உஷ்ண கிரகமான சூரியனின் அமைப்பால் ஒருமுறைக்கு இருமுறை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
கடன் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் குரு சுக்கிர யோகத்தால் அவற்றை தவிர்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.
குருவும் சுக்கிரனும் இணைந்து ஆரை பலப்படுத்தவதால் அதிரடியான மாற்றம் உண்டு. ஏழரை சனி முழுமையாக நிவர்த்தி அடையாத இந்த வேளையில் எதிர்பாராத பண வரவிற்கான, நல்ல சந்தர்ப்பம் உறுதியாக கிடைக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதத்தில்.
கும்ப ராசி;
யோக ஸ்தானத்தில் முதன்மை கிரகமான சூரியன் பல்வேறு வகையான யோக வாய்ப்புகள், தடையில்லாமல் வெற்றியை உறுதி செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை உறுதியாகவே கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்படுத்துகிறது.
அதோடு, மட்டுமல்லாது முதன்மை கிரகமான முழு சுப கிரகமான குருவுடன் இணைந்து சப்தமத்தை வலுப்படுத்த போகிறார். சுக்கிரன் ஐந்தாம் இடம் புனிதப்படுவதால் பூர்வீக சொத்துக்கள் ரீதியான பிரச்சனை நீதிமன்ற வழக்குகள் போன்ற அனைத்திலும், நல்ல தீர்வு கிடைக்கும்.
எதிர்பார்ப்பதை காட்டிலும் ஏழரை சனி என்றாலும் முதன்மையான யோகம் இந்த ஆடி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு நிறைவாக கிடைக்கிறது.
மீன ராசி;
முதன்மை கிரகம் உஷ்ண கிரகம் ஆன சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இந்த வேளையில் தந்தை வழி உறவு முறைகள் வலுப்படக்கூடிய வகையில் பல சிக்கல்கள் நீங்கி உறவும் மேம்படும் தருணம்.
ஏழரை சனி, என்றாலும் குரு சுக ஸ்தானத்தில் இருப்பதால் பல சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். யோகத்தில் கேது இருப்பதால் எதிர்மறையான சிந்தனைகள் விலகும் முழுமையாக ஏழரை சனியன் பாதிப்பிலிருந்து வெளிவரக் கூடிய வகையில் நல்ல மாற்றம் நிச்சயம்.
இந்த ஆடி மாதத்தில் உண்டு தொட்ட காரியம் அனைத்தும் துலங்கும் என்று சொல்லக்கூடிய வகையில் சில நல்ல சந்தர்ப்பங்களும் நிறைவாக கிடைக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
thank you for visiting our website. donot forget follow because we provide more valuable content for you