மகாளய அமாவாசை விரத வழிபாடு எப்படி? மகாளய அமாவாசை விரத வழிபாடு எப்படி மேற்கொள்வது?
மகாளய அமாவாசை வழிபாட்டை முறையாக செய்வது எப்படி? மகாளய அமாவாசை அன்று காக்கைக்கு இதை நிச்சயம் செய்யுங்கள் அனைத்து ராசிக்காரர்களும் அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்? மகாளய அமாவாசையின் சிறப்பு முக்கியத்துவம் என்ன? ஒரு வருடத்திற்கு 12 அல்லது 13 அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. இப்படி பன்னிரண்டு அல்லது 13 அமாவாசைகள் வந்தாலும், அதில் மிக முக்கியமான அமாவாசையாக புரட்டாசி அமாவாசை, மகாளய அமாவாசை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரியுமா என்றால்? அதற்கு மிக முக்கிய காரணம் இந்த மகாளய பட்சத்தின் போது முன்னோர்கள் நம்முடன் இருந்து நாம் படைக்கும் தண்ணீர், உணவு ஆகிய அனைத்தையும், முழுமையாகவும், திருப்தியாகவும் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த 15 நாட்களில் இறுதியில் வர கூடியதுதான் புரட்டாசி அமாவாசை. அதாவது, மகாளய அமாவாசை இந்த தினத்தில் முன்னோர்கள் பூமியிலிருந்து புறப்பட்டு பித்ருலோகம் செல்கின்றனர். இதற்கு முன்னதாக வந்த ஆடி அமாவாசையின் போது பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு முன்னோர்கள் வருகின்றனர். ...